தமிழகத்தில் இன்று முதல் இ பாஸ் முறை ரத்து.. சுங்கச் சாவடிகளில் வாகன நெரிசல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான இ பாஸ் இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

Recommended Video

    ஈ பாஸ் ரத்து எதிரொலி வாகனங்களால் நிரம்பி வழிந்த பூந்தமல்லி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை - வீடியோ

    தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 7 கட்டமாக ஊரடங்கு அமலானது. தற்போது 8ஆவது கட்ட ஊரடங்கு இந்த மாதம் முழுவதும் அமலில் இருக்கும்.

    ஒவ்வொரு முறை அன்லாக் என்ற பெயரில் மத்திய அரசும், மாநில அரசும் சில தளர்வுகளை வழங்கி வருகிறது. இந்த முறை தமிழகத்தில் முக்கிய தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் வழிபாட்டு தலங்கள் திறப்பு, இ பாஸ் ரத்து, பேருந்து போக்குவரத்து இயக்கம், பூங்காக்கள், வணிக வளாகங்கள், பெரிய கடைகள் திறப்பு உள்ளிட்டவையாகும்.

    இ பாஸ்

    இ பாஸ்

    இத்தனை நாட்களாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் நடைமுறை அமலில் இருந்தது. இந்த இ பாஸும் மருத்துவ காரணங்கள், நெருங்கிய சொந்தத்தின் திருமணம், நெருங்கிய உறவினரின் இறப்பு ஆகியவற்றுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.

    மக்கள் எதிர்ப்பு

    மக்கள் எதிர்ப்பு

    இந்த நிலையில் இந்த இ பாஸ் நடைமுறைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து கடந்த மாதம் முதல் விண்ணப்பித்த அனைவருக்கும் இ பாஸ் வழங்க உத்தரவிடப்பட்டது. அதன்படி விண்ணப்பித்த சில மணி நேரங்களில் இ பாஸ் கிடைத்தது.

    இனி இ பாஸ் தேவையில்லை

    இனி இ பாஸ் தேவையில்லை

    இந்த நிலையில் இன்று முதல் இ பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படும் என தமிழக அரசின் அன்லாக் 4.0வில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இனி மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு எந்த வித அனுமதியும் தேவையில்லை. இதனால் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

    சென்னை நோக்கி மக்கள்

    சென்னை நோக்கி மக்கள்

    இன்று முதல் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளதால் சுஙகச் சாவடிகளில் வாகன நெரிசல் அதிகமாக இருக்கிறது. இ பாஸ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளதால் அதிகாலை முதலே சென்னை நோக்கி மக்கள் படையெடுத்த வண்ணம் உள்ளார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+