எப்ஐஆர் கூட போடலை.. திமுக நிர்வாகி சந்தோஷமாக சுற்றுகிறார்.. நீதி கிடைக்குமா? அரக்கோணம் மாணவி கண்ணீர்
ராணிப்பேட்டை: திமுக நிர்வாகியால் ஏமாற்றப்பட்டதாக புகார் அளித்த கல்லூரி மாணவி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் காவல்துறை தரப்பில் தன்னிடம் எடுக்கப்பட்ட ஸ்டேட்மெண்டில் உடன்பாடு இல்லை என்று கூறிய அவர், திமுக நிர்வாகிய தெய்வச்செயல் மீது இதுவரை ஒரு எஃப்ஐஆர் கூட பதிவு செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார். குற்றம் செய்த அவர் சந்தோஷமாக சுற்றிக் கொண்டிருப்பதாக கூறிய அவர், என்னிடம் பெறப்பட்ட புகாருக்கு ஒரு சிஎஸ்ஆர் காப்பி கூட கொடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே திமுக ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளராக இருப்பவர் தெய்வச்செயல். இவர் மீது கல்லூரி மாணவி ஒருவர், தன்னை ஏமாற்றி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு, கடந்த ஜனவரி 31ம் தேதி என் பெற்றோரை கொலை செய்துவிடுவதாக கூறி திருமணம் செய்து கொண்டதாக கூறி இருக்கிறார்.

மாணவி புகார்
அதுமட்டுமல்லாமல் தன்னை திமுக பிரமுகர்களுக்கு இரையாக்க முயற்சிப்பதாகவும், அதற்கு இணங்காததால், ஒவ்வொரு நாளும் துன்புறுத்துவதாகவும் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக கல்லூரி மாணவி காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற போது, அலைக்கழிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து டிஜிபி அலுவலகத்தில் மாணவி புகார் அளித்துள்ளார்.
கையில் எடுத்த எடப்பாடி
அப்போது கல்லூரி மாணவி பேசுகையில், தன்னைப் போல் 15 பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களை காப்பாற்ற வேண்டும் என்றும் கூறி இருக்கிறார். அப்போது தன்னை தெய்வச்செயல் தாக்கியதால் ஏற்பட்ட காயங்களையும் காட்டி கதறி இருக்கிறார். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் விவாதமாக மாறி இருக்கிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
வீடியோ வெளியிட்ட மாணவி
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்து 2 நாட்கள் கடந்துவிட்டது. இதுவரை காவல் நிலையத்தில் இருந்து சிஎஸ்ஆர் நகலோ அல்லது எஃப்ஐஆரோ பதிவிடப்படவில்லை. மே 19ஆம் தேதியன்று காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி என்னிடம் ஸ்டேட்மெண்ட் எடுக்க வேண்டும் என்று கூறிவிட்டு, மாலை 4 மணிக்கு வந்தார்.
ஸ்டேட்மெண்ட் எடுத்த போலீஸ்
மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை என்னிடம் ஸ்டேட்மெண்ட் எடுத்தார்கள். பாதிக்கப்பட்டது குறித்து எந்த கேள்வியையும் அவர்கள் கேட்கவில்லை. அவர்களாகவே கேள்வி கேட்டு, ஸ்டேட்மெண்ட் தொடர்பாக வெளியில் சொல்லக் கூடாது என்று என்னிடமும் எழுதி வாங்கி கொண்டார்கள். இதன்பின் டிஎஸ்பி ஜாபர் சித்திக் வீட்டிற்கு வந்து என்னிடம் விசாரணை நடத்தினார்.
நானா பிடித்து கொடுக்க முடியும்?
அப்போது 15 பெண் என்று சொல்கிறாயே.. அந்த 15 பெண்கள் யார் என்று கேள்வி கேட்டார். பாதிக்கப்பட்ட பெண்கள் யார் என்று நானா பிடித்து கொடுக்க முடியும் என்று கேள்வி கேட்டேன். குற்றவாளியின் செல்ஃபோன் நம்பரை ஆய்வு செய்யுங்கள்.. பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்கள் உங்களுக்கு கிடைக்கும். அதில் 20 பெண்களா அல்லது அதற்கும் மேலான பெண்களா என்பது தெரியும் என்று கூறினேன்.
ஆதாரம் வெளியானது எப்படி?
அதேபோல் திமுக ஐடி விங்கைச் சேர்ந்த ராகுல் என்பவர், நான் போலீசாரிடம் கொடுத்த அத்தனை ஆதாரங்களையும் எடுத்து ஒரு வீடியோவாக போட்டுள்ளார். போலீசாரிடம் கொடுத்த ஆதாரங்கள் எப்படி அவரின் கைகளுக்கு சென்றது என்று தெரியவில்லை. அவர் என்னுடைய புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறார். தப்பு செய்த தெய்வசெயல் சந்தோஷமாக சுற்றிக் கொண்டிருக்கிறார். அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறது.
நம்பிக்கை இல்லை
இந்த நேரத்தில் என்னால் வெளியில் கூட செல்ல முடியவில்லை. போலீஸ்காரர்கள் வீட்டிற்கு வருகிறார்கள்.. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்கள். ஏதோ நான் குற்றவாளி என்பது போல் நடத்துகிறார்கள். பெண்களுக்கு நீதி சொல்ல யாருமே கிடையாதா? இதெல்லாம் பார்க்கும் போது நம்பிக்கை இழந்து தற்கொலை செய்து கொள்வேனோ என்று பயமாக உள்ளது. பொதுமக்கள் தான் நீதி வாங்கி தர வேண்டும்.
உடன்பாடு இல்லை
எனது புகாரை பெற்ற பின் நிச்சயம் எஃப்ஐஆர் போடப்படும் என்று கூறினார்கள். ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை. நீதி கிடைக்கும் என்று வெளிப்படையாக புகாரளித்தேன். ஆனால் அந்த நம்பிக்கை சுத்தமாக இல்லை. என்னிடம் எடுத்த ஸ்டேட்மெண்டில் உடன்பாடு இல்லை என்று தெரிவித்துள்ளார்.
-
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்? -
234/234 DMK seat sharing: தொகுதி பங்கீடு ஓவர்! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்! லிஸ்ட்! -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
‘நம்மை புறக்கணித்தவர்களை நாம் புறக்கணிப்போம்’ கிருஷ்ணசாமி அதிரடி அறிவிப்பு., கிலியில் எடப்பாடி -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர்












Click it and Unblock the Notifications