Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுகவை எந்த கொம்பனாலும் உடைக்க முடியாது.. திண்டுக்கலில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: அதிமுகவை எந்த கொம்பனாலும் உடைக்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். அதிமுகவை எவ்வளவோ பேர் உடைக்க பாக்குறாங்க.. முடக்க பாக்குறாங்க.. ஆனால் தொண்டர்களாகிய உங்களால் இவை எல்லாம் தவிடுபொடியாக்கிவிடுவோம்.. அதிமுக உயிரோட்டம் உள்ள கட்சி.. எந்த கொம்பனாலும் உடைக்க முடியாது.. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு வாரிசு இல்லை.. ஆனால் அவர்களுக்கு இங்கு இருக்கின்ற மக்கள் தான் வாரிசு என்றும் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

மக்களை காப்போம்.. தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில், தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மக்களை சந்தித்து வருகிறார். இன்று திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

no-force-can-break-aiadmk-edappadi-palaniswami-declares-in-dindigul

எத்தனையோ பேர் உடைக்க பார்க்கிறார்கள்

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் படுகின்ற துன்பத்தில் இருந்து அவர்களை விடுவிக்க அதிமுக முன்னின்று செயல்படும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இரு பெரும் தலைவர்களும் மக்களுக்காக வாழ்ந்தனர். அந்த இரு பெரும் தலைவர்களுக்கு வாரிசு இல்லை. இங்கு இருக்கின்ற மக்கள் நீங்கள்தான் வாரிசு. இந்த கட்சியை எவ்வளவோ பேர் முடக்கப் பார்க்கிறார்கள்.. எத்தனையோ பேர் உடைக்கப் பார்க்கிறார்கள்.. இதையெல்லாம் உங்கள் துணையோடு தவிடுபொடியாக்கி வருகிறோம்.

எந்த கொம்பனாலும் உடைக்க முடியாது

அதிமுக தொண்டர்கள் நிறைந்த கட்சி. அதிமுக உயிரோட்டமுள்ள கட்சி. அதிமுகவை எந்த கொம்பனாலும் உடைக்க முடியாது. அதிமுகவில் மட்டும்தான் சாதாரண தொண்டன் கூட எம்.எல்.ஏ ஆகலாம்.. எம்.பி ஆகலாம்.. ஏன், முதலவராக கூட ஆகலாம். அதிமுக என்ற ஒரே கட்சியில்தான் தொண்டர் ஒருவர் பொதுச் செயலாளர் ஆகலாம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் திமுகவை விமர்சித்தும் எடப்பாடி பேசினார். அவர் கூறுகையில், "தமிழகத்தில் கொலை, கொள்ளை நடக்காத நாட்களே இல்லை என்ற அளவுக்கு ஆட்சி நடக்கிறது. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. கொலை, கொள்ளை, திருட்டு நடக்காத நாட்களே இல்லை. கஞ்சாவுக்கு அடிமையாகி மாணவர்கள் வாழ முடியாத சூழல் தமிழகத்தில் நிலவுகிறது. வரும் தேர்தலில் திமுக ஆட்சியை அகற்றுவோம்.." என்றார்.

ஓபிஎஸ், டிடிவி, சசிகலா

அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று கூறி முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்த நிலையில், அவரை அனைத்து வித பதவியில் இருந்தும் நீக்கி கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி நவடிக்கை எடுத்தார். இதனை தொடர்ந்து செங்கோட்டையன் ஆதரவாளர்கள் பலரும் அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்து வருகிறார்கள்.

செங்கோட்டையனை பதவியில் இருந்து நீக்கியது அதிகாரத்தின் உச்சம் என்றும், அவரது அதிகார உச்ச நிலைக்கு மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள் என்று ஓ பன்னீர் செல்வம் தெரிவித்தார். இதேபோன்று இந்த நடவடிக்கை சிறுபிள்ளைத்தனமானது என்று சசிகலா கருத்து தெரிவித்தார். டிடிவி தினகரன் கெடுவார் கேடு நினைப்பார் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தான் எடப்பாடி பழனிசாமி இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+