மதுரை - தூத்துக்குடி ரயில் திட்டம்.. தமிழக அரசு கைவிட கோரவில்லை.. ரயில்வே அமைச்சர் யூ டர்ன்!
சென்னை: மதுரை - தூத்துக்குடி ரயில் திட்டத்தில் தமிழ்நாடு அரசுடன் எந்த நிலப் பிரச்சனையும் இல்லை என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்துள்ளார். தனுஷ்கோடி திட்டம் குறித்த தனது பதிலை செய்தியாளர்கள் தவறாக புரிந்து கொண்டதாக கூறியுள்ள அஸ்வினி வைஷ்ணவ், அன்று ஆலையில் இருந்த இரைச்சல் காரணமாக கேள்வியையும் தெளிவாக கேட்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 10ஆம் தேதி சென்னை வந்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், சென்னை ஐசிஎஃப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வந்த அம்ரித் பாரத் 2.- படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளை ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அஸ்விணி வைஷ்ணவ், தமிழ்நாட்டில் ரயில்வே துறை சார்பாக செயல்படுத்தப்படும் புதிய திட்டங்களுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

மதுரை - தூத்துக்குடி அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த திட்டம் வேண்டாம் என்று கூறி தமிழக அரசிடம் இருந்து எழுத்துப்பூர்வமான கடிதம் அனுப்பப்பட்டது. இதன் காரணமாக மத்திய அரசு இந்த திட்டத்தை முழுமையாக கைவிட்டது என்று கூறினார். இது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அமைச்சர் சிவசங்கர் தரப்பில், முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி. தமிழ்நாடு அரசு ஒருபோதும் அப்படி கூறவில்லை. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவே வலியுறுத்தி வந்தோம். இந்த திட்டத்திற்காக 926.68.84 ஹெக்டே நிலம் எடுப்பு செய்து ரயில்வே துறைக்கு ஒப்படைக்குமாறு மதுரை, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்டுக் கொண்டதில், இரு பகுதியாக பிரிக்கப்பட்டு நில எடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இதனால் இந்த திட்டத்தை கைவிடக்கோரி கடிதமோ, வாய்மொழியாகவோ தமிழ்நாடு அரசால் ரயில்வே துறைக்கு தெரிவிக்கப்படவில்லை. இதனால் தமிழக அரசு சார்பாக திட்டம் கைவிடும்படி கோரப்பட்டதாக கூறுவது அடிப்படை ஆதாரமற்றது. இந்த திட்டத்திற்கு உரிய நிதியை ஒதுக்கி உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.
இதனிடையே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக அரசு தமிழ்நாட்டை பின்னோக்கி இழுத்து செல்கிறது. மதுரை - தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டத்தை ரத்து செய்த திமுக அரசின் முடிவுக்கு எதிராக ஜன.20ல் விருதுநகர் மாவட்ட மக்களுடன் இணைந்து அருப்புக்கோட்டையில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தார்.
இந்த நிலையில் மதுரை - தூத்துக்குடி ரயில் பாதை திட்டம் தொடர்பாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்துள்ளார். அதில், அன்றைய தினம் ஆலையில் இருந்த இரைச்சல் காரணமாக கேள்வியை தெளிவாக கேட்க முடியவில்லை. இதனால் தனுஷ்கோடி திட்டம் குறித்த எனது பதிலை செய்தியாளர்கள் தவறாக புரிந்து கொண்டனர். மதுரை - தூத்துக்குடி ரயில்வே திட்டத்தை பொறுத்தவரை தமிழக அரசுடன் எந்த நிலப்பிரச்சனையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications