கொதிக்கும் நீரில் புழுக்கள் இனி சாகாது! பட்டு உற்பத்தியில் ஐஐடி புரட்சி! விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்
சென்னை: இந்தியாவில் பட்டு புடவைகளுக்கு பெண்கள் மத்தியில் எப்போதுமே சிறப்பான வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது.. அதனால்தான் பட்டுப் புடவைகள் உற்பத்திக்கு பட்டுப்புழு வளர்ப்பு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்நிலையில் மும்பை ஐஐடியின் கிராமப்புற பகுதிகளுக்கான தொழில்நுட்ப மாற்று மையம் ஒரு மாபெரும் சாதனையினை நிகழ்த்தியுள்ளது. அது என்ன தெரியுமா?
அழகான பட்டு துணிகளுக்கு பின்னால் கோடிக்கணக்கான பட்டுப் புழுக்களின் மரணம் மறைந்துள்ளது.. இதனால் பலரும் வேதனைப்படுவதுண்டு...

பொதுவாக பட்டு கிடைக்க வேண்டுமானால், பாரம்பரிய முறையில் பட்டுப் புழுக்கள் தங்களை சுற்றி கூடுகளை உருவாக்கிய பிறகு பட்டு நூலைப் பிரித்தெடுக்க அந்த புழுக்களை கூடுகளோடு சேர்த்து கொதிக்கும் நீரில் போட்டு அழிப்பார்கள்... அப்போதுதான் தேவையான பட்டு இழைகள் கிடைக்கும்..
பட்டுப்புழுக்கள்
ஆனால், இந்த உயிர்க்கொலை முறையினை முற்றிலுமாக ஒழிக்கும் விதமாக மும்பை ஐஐடியின் கிராமப்புற பகுதிகளுக்கான தொழில்நுட்ப மாற்று மையம் ஒரு மாபெரும் சாதனையினை நிகழ்த்தியுள்ளது...
ஆம், கடந்த 3 வருடங்களாக தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த விஞ்ஞானிகள் இப்போது புழுக்களை கொல்லாமலேயே பட்டு நூலை பிரித்தெடுக்கும் முறையை வெற்றிகரமாகக் கண்டறிந்துள்ளனர். இந்த புதிய புதிய தொழில்நுட்பத்திற்கு "ஜீவோதயா" என்று பெயரும் வைத்துள்ளனர்.
இந்த ஆராய்ச்சி திட்டத்திற்கு கோல் இந்தியா நிறுவனம் தனது சமூக பொறுப்புணர்வு நிதி மூலம் முழுமையான நிதியுதவியை செய்துள்ளது.
ஜீவோதயா திட்டம்
ஜீவோதயா திட்டத்தின் ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா? இதில் பட்டுப்புழுக்களின் இயற்கை வாழ்வாதாரம் எந்த விதத்திலும் பாதிக்கப்படுவதில்லை. வழக்கமாக மல்பெரி இலைகளை உண்டு வளரும் புழுக்கள் ஒரு கட்டத்தில் தங்களை சுற்றி உருண்டையான கூடுகளை கட்டிக்கொள்ளும்.
ஆனால் இந்தப் புதிய முறையில் புழுக்கள் கூடுகளை கட்டாமல் ஒரு சமதள பரப்பில் பட்டு இழைகளை மட்டும் உதிர்க்குமாறு அவற்றுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறதாம்.. இதனால் பட்டு இழைகளை சேகரிக்கப் புழுக்களை கொல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது. இதன் மூலம் பட்டுப்புழுக்கள் தங்களின் முழு வாழ்க்கை சுழற்சியையும் நிறைவு செய்து அழகான பட்டுப் பூச்சிகளாக பரிணாமம் அடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மும்பை ஐஐடி வரலாற்று சாதனை
இந்த தொழில்நுட்பம் வெறும் ஆராய்ச்சி நிலையில் இருந்து வந்த நிலையில், இப்போதுதான் பயன்பாட்டு வரப்போகிறது.. இது கண்டிப்பாக, பட்டு விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனென்றால், இம்முறை மூலம் பட்டு உற்பத்தியை மேலும் எளிமையாகவும் விரிவாகவும் மேற்கொள்ள முடியும். இதன் மூலம் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் மேம்படுவதோடு விவசாயிகளுக்கு நிலையான மற்றும் கூடுதல் வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.
அந்தவகையில் மும்பை ஐஐடியின் தனித்துவம் வாய்ந்த ஜீவோதயா திட்டம், தற்போது குறிப்பிடத் தகுந்த அளவிலான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.
அகிம்சை பட்டு
இந்தியாவில் பட்டு புடவைகளுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் இந்த அகிம்சை வழி பட்டு உற்பத்தி முறை நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற போகிறது.. அத்துடன் சுற்றுச்சூழல் மற்றும் உயிரினங்களுக்கும் பாதிப்பில்லாத இந்த டெக்னாலஜி, ஜவுளி துறையில் ஒரு புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
இனி வரும் காலங்களில் பட்டு புடவைகளின் அழகில் பட்டுப்புழுக்களின் உயிர் தியாகம் இருக்காது என்பதை மும்பை ஐஐடி விஞ்ஞானிகள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications