சிபிஐ விசாரணை தேவையில்லை.. எங்க போலீஸே போதும்.. ஆம்ஸ்ட்ராங்கிற்கு அஞ்சலி செலுத்திய சீமான் பேட்டி!
சென்னை: ஆம்ஸ்ட்ராங்கை வெட்டிப் படுகொலை செய்த உண்மையான கொலையாளிகளை கைது செய்ய வேண்டும், மாநில காவல்துறையே விசாரிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், நேற்று முன்தினம் இரவு, தனது வீட்டுக்கு அருகிலேயே ஒரு கும்பலால் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக முதல்கட்டமாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் தம்பி உட்பட 8 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 3 பேரை கைது செய்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் இன்னும் சற்று நேரத்தில் நடைபெற உள்ளது. பெரம்பூர் பந்தர்கார்டன் பள்ளியில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சீமான், “ஆம்ஸ்ட்ராங் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. தமிழ்நாட்டில் 31 நாட்களில் 131 படுகொலைகள் நடைபெற்றுள்ளன. தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லை. சாதாரண மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும்? குறிப்பாக பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் பேசிய அவர், “சரண் அடைந்தவர்களை விசாரித்து ஏன் எதற்காக கொலை செய்தார்கள் எனக் கண்டறிந்தார்களா? கஸ்டடியில் எடுத்து விசாரித்தீர்களா? கொலை செய்தவர்கள் வேறு, சரணடைந்தவர்கள் வேறு என்பது சாதாரண மக்களுக்கே தெரிகிறது. அதனால் தான் நியாயமான விசாரணை வேண்டும் என்கிறோம். கொலையாளிகளை 1 நாளில் கண்டுபிடிக்க முடியாதா?
சிபிஐ விசாரணை தேவையில்லை. எங்கள் மாநிலத்திலேயே ஆகச்சிறந்த காவல்துறை உள்ளது. எங்கள் மண்ணின் மைந்தன் மரணத்தை கண்டுபிடிக்க அதை எங்கள் மாநில காவல்துறையே கண்டுபிடிப்பதுதான் சரியானது. சிபிஐ இதுவரை எந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு கண்டுபிடித்துள்ளது?” எனத் தெரிவித்துள்ளார்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications