Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நம்பர் பிளேட் இல்லாமல் பைக்கில் வந்த இளைஞர்.. பளார் விட்ட எண்ணூர் போலீஸ்! மறு நொடியே ஸ்டன் ஆன சென்னை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞருக்கும், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எண்ணூர் போலீஸாருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், கைகலப்பாக மாறிய சம்பவம் சென்னையில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் போலீஸ்காரர் ஒருவர் இளைஞரின் கன்னத்தில் பளார் விடவும், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. என்னதான் நடந்தது எண்ணூரில்?

சென்னை, எண்ணூர் அருகே உள்ள எர்ணாவூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு, பைக்கில் சென்று கொண்டிருந்தார்.. அந்த பைக் இளைஞரின் நண்பருடையது என்று தெரிகிறது..

Chennai Number Plate Bike

சென்னை எண்ணூர் போலீஸ்

எர்ணாவூர் பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த எண்ணூர் போலீஸார் இருவர், இளைஞரின் பைக்கில்
அந்த பைக் நம்பர் பிளேட் இல்லாமல் இருப்பதை கவனித்தனர்.

உடனே இளைஞரை தடுத்து நிறுத்தி, பைக்கில் நம்பர் பிளேட் எங்கே என்று கேட்டனர்.. அதற்கு அந்த இளைஞர், "இது என் ஃபிரெண்ட் பைக்" என்று பதிலளித்தார்..

எனினும், இதை நம்பாத போலீஸ், "அப்படியானால், உங்கள் ஃபிரெண்டையும் அழைத்துக் கொண்டு, இந்த பைக்கின் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்துடுங்க" என்றனர்.. அத்துடன், இளைஞர் ஓட்டி வந்த பைக்கையும் பறிமுதல் செய்து, ஸ்டேஷனுக்கு எடுத்து செல்ல முயன்றனர்.

நம்பர் பிளேட் பைக் - ஆவணங்கள்

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த இளைஞர், "வண்டி ரிக்கார்டு எடுத்துட்டு என் ஃபிரெண்டை இங்கே வர சொல்கிறேன், அதுக்காக ஸ்டேஷனுக்கு எதுக்கு நாங்கள் வரணும் அண்ணா? ஸ்டேஷனுக்கு ஃபிரெண்டை கூட்டிட்டு வர முடியாது.. நீங்க இங்கியே நில்லுங்கண்ணா, தப்பே பண்ணாமல் என்னை புடிச்சி வெச்சிட்டு இருக்கீங்க" என்று சொல்லி பைக்கை போலீஸ் நிலையத்துக்கு எடுத்து செல்ல விடாமல் தடுத்தார்..

அதற்கு போலீசார், "தம்பி வழிவிடு, நல்லதனமாக சொல்கிறோம்.. இந்த பைக்கில் நம்பர் பிளேட் இல்லை, அதனால்தான் ஸ்டேஷனுக்கு வரச் சொல்கிறோம்" என்றனர்..

உடனே இளைஞர், வண்டியை இங்கேதானே பிடிச்சீங்க? அப்ப இங்கியே விசாரணை நடத்துங்க.. வண்டி ரிக்கார்டுகளை எல்லாம் என் ஃபிரண்டு இங்கே எடுத்துட்டு வந்துட்டு இருக்கான், இங்கியே விசாரிங்க.. ஸ்டேஷனுக்கு கூப்பிடறீங்களே எதுக்கு? சும்மாவே எங்க மேல ஃபைன் போடறதுக்கா?" என்று போலீசாரிடம் தொடர்ந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

கைகலப்பில் முடிந்த வாக்குவாதம்

வாக்குவாதம் முற்றிய நிலையில், கோபமடைந்த இரண்டு போலீஸாரில் ஒருவர், திடீரென அந்த இளைஞரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதை எதிர்த்தும் அந்த இளைஞர் தொடர்ந்து போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தன்னுடைய அம்மாவுக்கு போன் செய்து, "அம்மா, என் ஃபிரண்டு பைக்குல வந்துட்டு இருந்தேன்.. இங்கே போலீஸ்காரங்க என்னை பிடிச்சு அடிக்கிறாங்க" என்று முறையிட்டார்.. பிறகு போலீசாரிடம் "என்னை அடிச்சுக்குங்க-ண்ணா, ஆனால், வண்டியை பிடிச்சது இங்கேதான், அதனால் இங்கே விசாரணை பண்ணுங்க., ஸ்டேஷனுக்கு ஏன் வரணும்? என்று கேட்டபடியே இருந்தார்.

இந்த சம்பவம் நடப்பதை அங்கிருந்த பொதுமக்களில் சிலர் தங்கள் செல்போன்களில் இதை வீடியோவாக பதிவு செய்தனர்.

கன்னத்தில் ஏன் அறையணும்?

இதற்கு பிறகு, இளைஞரின் நண்பர் அதாவது பைக்கின் ஓனர், ஸ்டேஷனுக்கு சென்று, பைக்கின் ஆவணங்களை காட்டியதுடன், நம்பர் பிளேட் பொருத்தாததற்கு மன்னிப்பு கோரினார். இதையடுத்து, போலீஸார் அந்த பைக்கை நண்பரிடம் ஒப்படைத்தனர்.

இதனிடையே, போலீஸ்காரர் இளைஞரை கன்னத்தில் அறைந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.. நம்பர் பிளேட் இல்லாவிட்டால் அதற்கு அபராதம் விதிக்கலாம், பைக்கை பறிமுதல் செய்யலாம், அதற்காக இளைஞரை கன்னத்தில் எதுக்கு அறைய வேண்டும்? என்று இணையவாசிகள் கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+