கடல்லேயே இல்லையாம்.. தேமுதிக விருப்பமனு தாக்கல்.. வாங்க ஆள் இல்லாமல்.. வெறிச்சோடிய அலுவலகம்
சென்னை: தேமுதிகவின் விருப்பமனு தாக்கல் இன்று காலை தொடங்கிய நிலையில், தேமுதிக தலைமை அலுவலகம் நிர்வாகிகள், தொண்டர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக தேமுதிக இன்று அறிவிப்பு வெளியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன. 2 நாட்களில் போட்டியிட உள்ள தொகுதிகள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

தேமுதிக உடன் அதிமுக இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையை மேற்கொண்டு வருகிறது. கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகிய அதிமுக தலைவர்கள் தேமுதிகவினர் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் . கடந்த 2 நாட்களாக தேமுதிக நிர்வாகிகள் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
தேமுதிக கேட்கும் தொகுதிகளை ஒதுக்க அதிமுக தயக்கம் காட்டுவதால் இழுபறி ஏற்பட்டு உள்ளதாம். கூட்டணியை உறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் இன்று அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 3-4 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க அதிமுக சம்மதிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தேமுதிக கோரிக்கை: மொத்தமாக 7 தொகுதிகள் கேட்ட தேமுதிகவுக்கு 3-4 தொகுதிகள் ஒதுக்க அதிமுக. திட்டமிட்டுள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வருகின்றன. இது பாஜகவிற்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் 2 நாட்களுக்கு முன் அதிமுக தலைவர்கள் சிலர் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை அவரது இல்லம் தேடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அரைமணிநேரம் வரை இந்த சந்திப்பு நடந்தது. ஆனால் இதில் பேசப்பட்ட விஷயங்கள் பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
பிரேமலதாவும் அதிமுக கூட்டணியில் இணைய சில நிபந்தனைகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதுபற்றிய விபரம் எதுவும் வெளியாகவில்லை. ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணி: கடந்த லோக்சபா தேர்தலுக்கு தமிழ்நாட்டில் அதிமுக மெகா கூட்டணி அமைத்து இருந்தது. அதிமுக + பாஜக + பாமக + தேமுதிக இணைந்து லோக்சபா தேர்தலை சந்தித்தன. ஆனால் சட்டசபை தேர்தலின் போதே இந்த கூட்டணி உடைந்தது. தேமுதிக வெளியேறி அமமுகவுடன் கூட்டணி வைத்தது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக கூட்டணி மேலும் கரைந்தது. பாமக முதலில் கூட்டணியில் இருந்து வெளியேறியது.
அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாக தகவல்கள் வருகின்றன. மொத்தமாக 7 தொகுதிகள் கேட்ட தேமுதிகவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாம். அதிமுக - தேமுதிக இடையே கூட்டணி கைகூடும் பட்சத்தில் விஜய பிரபாகரன் போட்டியிட போகும் தொகுதி எது என்பது தொடர்பான உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி உள்ளன.
விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன. அங்கே தற்போது மாணிக்கம் தாக்கூர் காங்கிரசில் இருந்து எம்பியாக உள்ளார். இவர் 470,883 வாக்குகளை பெற்று வென்றார். இங்கே கடந்த முறை தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி அதிமுக - பாஜக கூட்டணியில் 316,329 வாக்குகளை பெற்றார்.
இங்கே தேமுதிக நல்ல வாக்கு வங்கியை பெற்றுள்ளதால் தற்போது விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன
வெறிச்சோடிய தேமுதிக அலுவலகம்: தேமுதிகவின் விருப்பமனு தாக்கல் இன்று காலை தொடங்கிய நிலையில், தேமுதிக தலைமை அலுவலகம் நிர்வாகிகள், தொண்டர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. பெரிய அளவில் கட்சி நிர்வாகிகள் யாரும் முன்வந்து விருப்பமனுவை இதுவரை வாங்கவில்லை.
மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக தேமுதிக இன்று அறிவிப்பு வெளியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன. 2 நாட்களில் போட்டியிட உள்ள தொகுதிகள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.
லோக்சபா தேர்தல்: லோக்சபா தேர்தல் அறிவிப்பைத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கடந்த வாரம் வெளியிட்டார். மொத்தம் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவு அனைத்தும் முடிந்து வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன. ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கிறது.
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அண்ணாமலைன்னா சும்மாவா.. பாஜக ஆஃபர் தந்தும் ஏற்கலயாமே? இன்று 12 மணிக்கு என்ன நடக்க போகுதோ -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்?












Click it and Unblock the Notifications