நிஜமா புரியல.. திமுக ஏன் அப்படி சொல்லுது? அப்ப "சமாளிக்கவே" இப்படி அறிவிச்சிருக்காங்க: டிடிவி தினகரன்

1000 ரூபாய் மகளிருக்கு வழங்கப்படுவதாக வெளியான அறிவிப்பு குறித்து தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 2 ஆண்டுகளில் மக்களின் மீது கடன் சுமையை மேலும் ஏற்றியதையே சாதனையாக சொல்ல முடியுமே தவிர, பொருளாதாரத்தை முன்னேற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், மக்களை மேலும் மேலும் துயரக்குழியில் தள்ளும் விளம்பர பட்ஜெட்டாகவே திமுக அரசின் நிதி நிலை அறிக்கை உள்ளது" என்று அமமுகவின் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் சார்பில் 2023 - 24-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனால் இன்று தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது... இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை நிதியமைச்சர் வெளியிட்டிருந்தார்.

இதில் தமிழக மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, மிக முக்கிய அறிவிப்பாக மகளிருக்கான உரிமைத்தொகை அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது...

 புரட்சி திட்டம்

புரட்சி திட்டம்

திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னபடி மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும் என்று, கடந்த 2 வருட காலமாகவே, பெரும் எதிர்பார்ப்பு நிலவிக்கொண்டே இருந்தது.. இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை வரும் நிதியாண்டு முதல் வழங்கப்படும் என்று பிடிஆர் இன்றைய தினம் அறிவித்துள்ளார்... அண்ணா பிறந்தநாள் செப்டம்பர் மாதம் 15-ம் தேதி அன்று மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்று நிதியமைச்சர் இதுகுறித்து தெரிவித்துள்ளார். புரட்சி ஏற்படுத்தும் இந்த திட்டத்திற்காக 7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் மகளிர் உதவித் தொகைக்கு தகுதியானவர்கள் குறித்த வரைமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

 1000 ரூபாய்

1000 ரூபாய்

தமிழகத்தில் 2 கோடிக்கு மேல் ரேஷன் கார்டுகள் இருக்கிறது... ஆனால் அரசோ வெறும் 7 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்திருப்பதால் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்று அதிமுக இதுகுறித்து கேள்வியை எழுப்பி வருகிறது.. அதுபோலவே, அமமுகவும் கேள்வி கேட்டுள்ளது.. தஞ்சாவூரில் இன்று அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.. அந்த பேட்டியில், "தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது... குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது... ஆனால் தேர்தல் நேரத்தில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்த திமுக அரசு இப்போது தகுதியின் அடிப்படையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது ஏன்? என்றுதான் புரியவில்லை.

 ஓ பன்னீர்செல்வம்

ஓ பன்னீர்செல்வம்

இதேபோல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மறுபடியும் கொண்டு வருவது, சம வேலைக்கு சம ஊதியம் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவது சம்பந்தமாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. செல்லும் இடங்களில் எல்லாம் கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆயிற்று என பொதுமக்கள் கேட்டு வருவதால் வேறு வழியின்றி பொதுமக்களை சமாளிப்பதற்காக இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என நினைக்கிறேன். கடந்த 2017-ம் ஆண்டு ஓ.பன்னீர் செல்வம் தர்மயுத்தம் நடத்தியது தவறு என அவரே உணர்ந்துள்ளார்... ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதுதான் என்னுடைய கருத்துமாக இருக்கிறது..

 விடியா அரசு

விடியா அரசு

"மேற்கு மண்டலம் எங்களது கோட்டை" என்று எடப்பாடி பழனிச்சாமி சொல்லிவந்த நிலையில் ஈரோடு இடைத்தேர்தலில் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவிடம் படுதோல்வி அடைந்துள்ளார். இரட்டை இலை சின்னம் இருந்தும், ஆளும் கட்சிக்கு நிகராக பொருள் செலவு செய்தும் ஏற்பட்ட படுதோல்வி அதிமுக பலவீனம் அடைந்துள்ளது என்று நினைக்க தோன்றுகிறது. எடப்பாடி பழனிச்சாமி கையில் இரட்டை இலை சின்னம் இருக்கும் வரையில் கட்சி செல்வாக்கை இழந்து கொண்டே வரும்... அதிமுக பொதுச்செயலாளர், தேர்தல் தொடர்பாக வருகின்ற 24-ந் தேதி வரக்கூடிய நீதிமன்ற தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதை என்னால் சொல்ல முடியாது" என்றார்.

 துயரக்குழி

துயரக்குழி

இதனிடையே, தினகரன் தமிழக பட்ஜெட் குறித்து ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.. அதில், தமிழக பட்ஜெட் 2023-2024: விடியா அரசின் விளம்பர பட்ஜெட் என்று விமர்சித்துள்ளார். "திமுக அரசு தாக்கல் செய்திருக்கும் 2023-24ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மக்கள் நலன்சார்ந்த எந்த திட்டங்களும் இல்லாமல், மக்களுக்கு விடிவே இல்லாத நிலையை ஏற்படுத்தக் கூடிய அறிக்கையாகவே உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மக்களின் மீது கடன் சுமையை மேலும் ஏற்றியதையே சாதனையாக சொல்ல முடியுமே தவிர, பொருளாதாரத்தை முன்னேற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், மக்களை மேலும் மேலும் துயரக்குழியில் தள்ளும் விளம்பர பட்ஜெட்டாகவே திமுக அரசின் நிதி நிலை அறிக்கை உள்ளது" என்று காட்டமாக கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+