கீழடி அகழாய்வு அறிக்கையை திருத்தச் சொல்வது குற்றம், அநீதி! அமர்நாத் ஐஏஎஸ் தாக்கு
சென்னை: கீழடி அகழாய்வு அறிக்கையை திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது என்றும் எனது அறிக்கையை நான் திருத்தினால் நான் குற்றவாளியாகிவிடுவேன் என இந்திய தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கீழடியில் ஆய்வு மேற்கொண்டு கிமு.8 நூற்றாண்டில் என்னென்ன பயன்படுத்தப்பட்டது. அந்த கால மக்களின் நாகரிகம், விவசாயம், விலங்குகள், கலாச்சாரம் பழக்கவழக்கம் எப்படி இருந்தது, இரும்பு பயன்படுத்தியது என அமர்நாத் ஐஏஎஸ் கண்டுபிடித்து, இந்திய தொல்லியல் துறைக்கு ஆய்வு மேற்கொண்டிருந்தார்.

3ஆம் நூற்றாண்டு
அந்த ஆய்வு அறிக்கையை கிமு 3 ஆம் நூற்றாண்டு என திருத்துமாறு மத்திய அரசு, அமர்நாத்துக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. கீழடி தொல்லியல் ஆய்வு பொறுப்பாளராக ஸ்ரீராம் என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் 3ஆம் கட்ட அகழாய்வு நடத்தி, அமர்நாத் குறிப்பிடும் படியான கண்டுபிடிப்புகள் ஏதும் இல்லை என தெரிவித்திருந்தார்.
அமர்நாத்
இந்த நிலையில் அமர்நாத், ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறுகையில் கீழடி அறிக்கையின் உண்மையை திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது. நான் கண்டுபிடித்ததை திருத்தினால் நான் குற்றவாளியாகிவிடுவேன்.
982 பக்க அறிக்கை
நான் தாக்கல் செய்த 982 பக்கங்களில் எழுத்துப் பிழையை வேண்டுமானால் திருத்த தயாராக இருக்கிறேன். ஆனால் உண்மையை திரித்து எழுத முடியாது. கிமு 8ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்ததை கிமு. 3 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்தவை என மத்திய அரசு மாற்ற வலியுறுத்துகிறது.

கீழடி அறிக்கை
நான் கண்டுபிடித்த விஷயங்களையே மாற்றச் சொன்னால் கீழடியின் தொன்மையை சிதைக்கும் செயலாகும். 982 பக்கத்தில் நான் குறிப்பிட்டுள்ளவை எல்லாம் ஆய்வின் அடிப்படையில் கண்டுபிடித்துள்ளவேயே தவிர எதுவும் அனுமானத்தின் அடிப்படையில் எந்த காலத்தையும் கண்டுபிடிக்கவில்லை.
அமைச்சர் படிக்கட்டும்
மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெதாவத் எனது அறிக்கையை முதலில் படிக்கட்டும். இந்தியாவில் பலதரப்பட்ட கலாச்சாரங்கள் உள்ளன. அதை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும். சிந்து சமவெளி நாகரீகம், வேத காலம், மவுரிய, ஹர்ஷவர்தன் காலத்தையே மத்திய அரசு பேசி வருகிறது. ஆனால் சங்க கால வரலாற்றை பற்றி ஏன் மத்திய அரசு ஆய்வு செய்யவில்லை.
சங்க காலம்
அது போல் இந்தியாவின் பிற பகுதிகளையும் பார்க்க மறுப்பது ஏன்? இன்று வரை சங்க காலம் தோன்றி எத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கும் என்பதை நாம் கண்டறிய முடியவில்லை. மூன்றாவது கட்ட அகழாய்வில் ஈடுபட்ட ஸ்ரீராம், கீழடி அகழாய்வு குறித்து எந்த பின்னணியும் தெரியாதவர். அவரை ஆய்வு செய்ய சொன்னால் "ஒன்றும் இல்லை" என்றுதான் சொல்வார். இவ்வாறு அமர்நாத் ராமகிருஷ்ணா தெரிவித்தார்.
கீழடியில் நடந்தது என்ன
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2013- ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை மத்திய அரசு சார்பில் அகழாய்வு பணியை தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்டார். இந்த அகழாய்வின் போது 5000-க்கும் மேற்பட்ட பழைமை வாய்ந்த பொருள்கள் கிடைத்தன. இந்நிலையில் திடீரென அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
மண்டை ஓடு
கீழடியில் கண்டறியப்பட்ட மனித மண்டை ஓட்டை வைத்து நம் மூதாதையர்கள் எப்படி இருந்தார்கள் என கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் இருந்த அடையாளமும், பருத்தி விளைச்சல், திணை அரிசி விளைச்சல் உள்ளிட்டவையும் இருந்தது கண்டறியப்பட்டது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications