மதத்தின் அடையாளம் திருக்குறளில் இல்லை! திருவள்ளுவர் மீது இந்துத்வாவை திணிக்க முடியாது..கனிமொழி எம்பி
சென்னை: ஆளுநர் ட்வீட் பதிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக எம்பி கனிமொழி, "திருக்குறளை பற்றி.. திருவள்ளுவரை பற்றி அடிப்படை புரிதலே இல்லை என்பதே இதை காட்டுகிறது" என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு முழுவதிலும் ஜனவரி 16ஆம் நாள்(இன்று) திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டுவருகிறது. பல தலைவர்களும் திருவள்ளுவருக்குத் தங்கள் மரியாதையைச் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது அலுவலக எக்ஸ் தளத்தில் திருவள்ளுவர் தின வாழ்த்து தெரிவித்து இருந்தார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன் என்று பதிவிட்டு இருந்தார். ஆளுநர் ஆர்.என்.ரவி. காவி உடையணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை பகிர்ந்து சனாதன துறவி என்று ஆளுநர் குறிப்பிட்டுள்ளது சர்ச்சையான நிலையில், பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் ட்விட்டர் பதிவும் விவாதப்பொருளாகியுள்ளது.
இந்த நிலையில், ஆளுநர் ட்விட் குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக எம்பி கனிமொழி
திருக்குறளை பற்றி.. திருவள்ளுவரை பற்றி அடிப்படை புரிதலே இல்லை என்பதே இதை காட்டுகிறது.
என்று கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்க கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து கனிமொழி எம்பி கூறியதாவது:- சென்னை சங்கமம் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் தொடங்கப்பட்டது.
10 ஆண்டுகளுக்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் ஆசியோடு மீண்டும் ஆரம்பிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 10 ஆண்டுகள் சங்கமம் விழா நடக்கவில்லை என்றாலும் கலஞைர்களை தொடர்ந்து நாங்கள் சந்தித்து வந்துள்ளோம். மும்மொழிக்கான தேவை என்னவென்று சொன்னால் நாம் விளங்கிக்கொள்ள முடியும். அதற்கான தேவை எதுவும் இல்லை. நமக்கிடையே பேசிக்கொள்வதற்கு நம்முடைய பாரம்பரியம், தாய்மொழி தமிழ் இருக்கிறது.
உலகத்தில் உள்ள மற்ற மக்களோடு பேசிக்கொள்வதற்கு ஆங்கிலம் மொழி உள்ளது. இணைப்பு மொழியாக ஆங்கிலம் உலகம் முழுவதும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. இது போக மூன்றாவதாக ஒரு மொழியை கற்றுக்கொள்வது என்பது மக்களின் தனிப்பட்ட விருப்பம். அதை யாரும் தடை செய்ய முடியாது. மும்மொழி கொள்கை அவசியம் என்பதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார்.
தொடர்ந்து ஆளுநர் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து எம்பி கனிமொழி கூறியதாவது:- திருக்குறளை பற்றி.. திருவள்ளுவரை பற்றி அடிப்படை புரிதலே இல்லை என்பதே இதை காட்டுகிறது. திருவள்ளுவர் வந்து ஒரு துறவி என்று யாருமே சொன்னது கிடையாது. அவருக்கு திருமணம் ஆகி அவருக்கு மனைவி இருந்ததாகவும் ஒரு கருத்து உள்ளது.
எனவே திருவள்ளுவரே இல்லறம் பற்றி அழகாக ஒரு கவித்துவமாக எழுதியிருப்பவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. எனவே திருவள்ளுவரை பற்றி திருக்குறளை படித்து புரிந்துக்கொள்ள வாய்ப்பு இருக்க கூடியவர்கள் அவரை துறவியாக பார்த்ததே கிடையாது. மதத்தின் அடையாளம் திருக்குறளில் கிடையாது. இதனால் சனாதனத்தையோ.. இந்துத்துவாவையோ அவர் மீது தினிக்க முடியாது.
திருவள்ளுவர் மீது எந்த மதத்தையும் நாம் திணிக்க முடியாது. இதனை நாம் அடிப்படையில் புரிந்துகொள்ள வேண்டும். மதங்களை கடந்து நிற்பதுதான்.. மனிதத்தை பேசுவது தான் திருக்குறள். இதை இவர்கள் எல்லாரும் புரிந்துகொள்ள வேண்டும். அவருக்கு நிறம் வந்து, மனித நேயத்திற்கு ஒரு நிறம் இருந்தால் அது தான் அவருடைய நிறம். எனக்கு தெரிந்து அடுத்த மனிதநேயத்திற்கு எடுத்துக்காட்டு பெரியார். கருப்பு வேண்டுமானால் போடலாம். வேற கலர் போட வாய்ப்பு இல்லை.. இவ்வாறு அவர் கூறினார்.
-
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன்












Click it and Unblock the Notifications