Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

46 தொகுதிகளில் ஒரு பெண் வேட்பாளர் கூட இல்லை.. தமிழக அரசியல் கட்சிகள் தயங்குவது ஏன்? பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழக மொத்த மக்கள் தொகை சுமார் 7 கோடியே 21 லட்சத்து 47 ஆயிரத்து 30 ஆகும். ஆண்கள்: 3,61,37,975 கோடியாகவும், பெண்கள்: 3,60,09,064 கோடியாகவும் இருந்தனர். இப்போது இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அதேபோல் தற்போது தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை 5.73 கோடியாக உள்ளது. இதில் ஆண் வாக்காளர்களை விட பெண்கள் வாக்காளர்கள் தான் அதிகம். 2.80 கோடி பேர் ஆண் வாக்காளர்களாக இருக்கும் நிலையில் 2.93 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளனர். இந்நிலையில் தான் இந்த தேர்தலில் மொத்தம் 46 சட்டசபை தொகுதிகளில் ஒரு பெண் வேட்பாளர் கூட போட்டியிடவில்லை என்ற விவரம் வெளியாகி உள்ளது.

பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்பது தான் அனைத்து கட்சிகளின் கோஷமாக உள்ளது. ஆனால் இது நடைமுறையில் சாத்தியமில்லை. நாடாளுமன்றத்தில் கூட இன்று வரை பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு என்பது வெறும் பேசுப்பொருளாக தான் உள்ளது.

woman candidate tamil nadu assembly election 2026 2026

இப்படியான சூழலில் தேர்தல் என்று வந்துவிட்டால் ஒவ்வொரு கட்சியிலும் போட்டியிட ஆண்களுக்கு அதிக வாய்ப்பும், பெண்களுக்கு குறைந்த வாய்ப்பையும் தான் அரசியல் கட்சிகள் வழங்கி வருகின்றன.

இதில் சீமானின் நாம் தமிழர் கட்சி மட்டும் தான் விலக்கு. மொத்தமுள்ள 234 சட்டசபை தொகுதிகளில் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு 116 பெண்களையும், 117 ஆண்களையும், ஒரு திருநங்கை ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளது. இது தவிர பிற கட்சிகள் பெண்களுக்கு அதிக வாய்ப்பு வழங்குவது இல்லை. நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் தான் அதிகம்.

தமிழகத்தில் மொத்தமாக 2.93 கோடி பெண் வாக்காளர்களும், 2.80 கோடி ஆண் வாக்காளர்களும், 7,728 மூன்றாம் பாலினத்தவர்களும் உள்ளனர். இதனால் பெண்களின் ஓட்டுகளை குறிவைத்த திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை அளிக்கின்றன. ஆனால் ஆண்களுக்கு நிகராக பெண் வேட்பாளர்களை அந்த கட்சிகள் நிறுத்துவது இல்லை.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 25 பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இதில் திமுகவில் 19 பேர், காங்கிரஸில் 2 பேர், விசிகவில் 2 பேர், சிபிஎம், தேமுதிகவில் தலா ஒருவர் என களமிறக்கப்பட்டுள்ளனர். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் 28 பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதில் அதிமுகவில் 20 பேர், பாஜகவில் 5 பேர், பாமகவில் 3 பேர் களமிறங்கி உள்னர். நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 23 பெண்கள், நாம் தமிழர் கட்சி 116 பெண்கள் மற்றும் ஒரு திருநங்கை வேட்பாளரை (பெண்களுக்கு 50 சதவீத வாய்ப்பு என்ற கொள்கைப்படி) நிறுத்தியுள்ளன.

அதோடு 234 தொகுதிகளில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களமிறங்கி உள்ளனர். இதில் 3,579 பேர் ஆண் வேட்பாளர்கள். வெறும் 443 பேர் பெண் வேட்பாளர்கள். வில்லிவாக்கத்தில் நாம் தமிழர் சார்பில் மூன்றாம் பாலினத்தை சேர்ந்த ஒருவர் போட்டியிடுகிறார். தேர்தல் ஆணையத்தின் டேட்டாப்படி பார்த்தால் 234 தொகுதிகளில் 214 தொகுதிகளில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கையை விட ஆண் வேட்பாளர்கள் தான் அதிகமாக உள்ளனர். அதேவேளையில் , அரணி தொகுதியில் அதிகபட்சமாக 9 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அதே வேளையில் மதுராந்தகம் (எஸ்.சி.), தாராபுரம் (எஸ்.சி.) ஆகிய தனித் தொகுதிகளில் நான்கு முன்னணி கட்சிகளிலும் பெண் வேட்பாளர்களே போட்டியிட்டுள்ளனர்.

மேலும் 63 தொகுதிகளில் ஒரெயொரு பெண் வேட்பாளர் மட்டுமே போட்டியிடுகின்றன. 60 தொகுதிகளில் இரண்டு பெண் வேட்பாளர்கள் மட்டுமே களத்தில் உள்ளனர். இது ஒருபுறம் இருக்க 46 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களே இல்லாத நிலை உள்ளது. சென்னை சுற்றியுள்ள கும்மிடிப்பூண்டி, திருத்தணி, திருவள்ளூர், துறைமுகம், விருகம்பாக்கம், மற்றும் மதுரை மாவட்டத்தில் மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மதுரை வடக்கு, மதுரை மத்திய தொகுதிகளில் ஒரு பெண் வேட்பாளர் கூட இல்லை.

அதேபோல் திருப்பூர், சோழிங்கர், அணைக்கட்டு, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி, கீழ்பெண்ணத்தூர், செய்யாறு, செஞ்சி, திண்டிவனம், திருக்கோவிலூர், ஓமலூர், சேலம் (மேற்கு), கூடலூர், பல்லடம், கோவை (தெற்கு), பொள்ளாச்சி, ஒட்டன்சத்திரம், ஸ்ரீரங்கம், திருச்சி (கிழக்கு), நெய்வேலி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், வேதாரண்யம், மன்னார்குடி, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, ஆலங்குடி, விருதுநகர், அருப்புக்கோட்டை, இராமநாதபுரம், ஸ்ரீவைகுண்டம், அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, கிள்ளியூர் ஆகிய தொகுதிகளிலும் ஒரு பெண் வேட்பாளர் கூட இல்லை.

இதனை பார்க்கும்போது பெண்களுக்கு சம உரிமை வழங்குவோம். பெண்களின் உரிமைக்காக குரல் கொடுப்போம் என்பதை நாம் தமிழரை தவிர திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் வெறும் பேச்சளவில் மட்டுமே வைத்துள்ளதை புரிந்து கொள்ள முடிகிறது. பெண் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு அரசியல் கட்சிகள் தயங்குவதன் பின்னணியில் இன்னொரு முக்கிய விஷயம் உள்ளது.

அதாவது ஒவ்வொரு தொகுதிகளில் அதிகாரத்தை எதிர்நோக்கி பல ஆண் தலைவர்கள் உள்ளனர். சில பெண் தலைவர்கள் இருந்தாலும் கூட சீட்டுக்கான லாபியில் அவர்கள் தோற்கடிக்கப்படுகிறது. அதோடு பொதுவாகவே பெண் வேட்பாளர்களை நிறுத்தினால் அவர்கள் தோற்க அதிக வாய்ப்புள்ளது என்ற மனநிலை பல அரசியல் கட்சிகளுக்கு உள்ளது. இதுவும் பெண் வேட்பாளர்களுக்கு தேர்தலில் அதிகளவில் வாய்ப்பு கிடைக்காததற்கு முக்கிய காரணம். இந்த மனநிலை மாறினால் தான் ஆண்களுக்கு நிகராக பெண்களும் அரசியலில் ஜொலிக்க முடியும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+