வடகிழக்கு பருவமழை..தமிழகத்தில் இயல்பை விட 2% அதிகம்..எங்கு கூடுதல் மழை தெரியுமா?
சென்னை: தமிழ்நாட்டில் அக்டோபர் 1 முதல் இதுவரை வடகிழக்கு பருவமழை இயல்பை விட 2% கூடுதலாக பெய்துள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை இயல்பு அளவான 404 மி.மீ.-க்கு பதில் 412 மி.மீ. பெய்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 63% அதிகமாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மே மாதம் தொடங்கி அக்டோபர் வரை நீடித்தது. அதே போல வடகிழக்குப் பருவமழை அக்டோபர் இறுதியில் தொடங்கி விட்டு விட்டு பெய்து வருகிறது. குளங்கள், ஏரிகள் நிரம்பி வழிகின்றன.

மாண்டஸ் புயல் கடந்த வாரம் கரையைக் கடந்த பின்னரும் பல ஊர்களில் கனமழை நீடிக்கிறது. இந்த நிலையில் கேரளா கர்நாடகாவை ஒட்டிய அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 29ஆம் தேதி தொடங்கியது. நவம்பர் மாதத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. நவம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் இருந்து மழை படிப்படியாக குறைந்தது. நவம்பர் மாத இறுதியில் செய்தியாளர்களிடம் பேசிய பாலச்சந்திரன், வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பையொட்டி இருக்கும்.
இந்தியப் பெருங்கடலின் இருமுனை துருவங்கள் நெகட்டிவ் என்ற அளவில் உள்ளதால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பில்லை. பசிபிக் பெருங்கடலில் வெப்பநிலை 'லாநினோ' என்ற நிலையில் உள்ளது. இதுமட்டுமின்றி பல்வேறு காரணிகள் மூலம் மழைக்கான வாய்ப்பு உள்ளதால் தற்போது மழையின் வாய்ப்பை உறுதியாக கணிக்க முடியாது என்று கூறினார்.
வடகிழக்குப் பருவமழை தாமதமாக தொடங்குவதால் தாமதமாக வெளியேறும் என்றில்லை. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தாலுகா அளவில் வானிலை முன்னறிவிப்புகள் வழங்குவதற்கு சோதனை முறையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த வாரம் தமிழகத்தில் இயல்பு அளவை விட 91 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது. மேலும், 16 மாவட்டங்களில் கடந்த வாரம் மழை பதிவாகவில்லை, 22 மாவட்டங்களில் இயல்பை விட குறைவான மழை பதிவாகியுள்ளது என்று நவம்பர் 25ஆம் தேதி கூறியிருந்தார்.
மாண்டஸ் புயல் கடந்த 9ஆம் தேதி கரையைக் கடந்தது. இதனையடுத்து பல மாவட்டங்களில் பருவமழை கொட்டித்தீர்த்தது. இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், வடகிழக்கு பருவமழை இயல்பை விட 2% கூடுதலாக பெய்துள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை இயல்பு அளவான 404 மி.மீக்கு பதில் 412 மி.மீ. பெய்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 63% அதிகமாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாண்டஸ் புயல் கரையை கடந்து 3 நாட்கள் ஆன பின்னரும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட் டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து விட்டு விட்டு மழை நீடித்து வருகிறது. இதனால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அவை வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் தொடர்ந்து பெய்த பலத்த மழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 201 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. இந்த மாவட்டங்களில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன. தற்போதைய நிலவரப்படி 631 ஏரிகள் நிரம்பி உள்ளன.
இதனிடையே தமிழகம் புதுச்சேரியில் இன்னும் 5 நாட்களுக்கு லேசான மழைக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் அடுத்தவாரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பொதுவாக தமிழகத்தில் டிசம்பர் இறுதியில் வடகிழக்கு பருவமழை விடை பெற ஆரம்பிக்கும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கிட்டத்தட்ட முடிவுக்கு வரப்போகும் நிலையில் இந்த ஆண்டு இயல்பை விட 2 சதவிகிதம் அதிகமாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications