வடகிழக்குப் பருவமழை.. பள்ளிகளில் என்ன செய்யலாம் என்னசெய்யக்கூடாது.. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
சென்னை: பருவமழை காலத்துக்கு முன்பாக பள்ளி வகுப்பறைகளின் மேற்கூரையில் படர்ந்துள்ள மரக்கிளைகள் மற்றும் தேங்கியுள்ள இலைகளை அகற்றி மழைநீர் எளிதாக வெளியேற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. பள்ளி கட்டிடத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் இறுதியில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும் பல்வேறு இடங்களில் தற்போது தென்மேற்கு பருவமழை காரணமாக மழையின் தாக்கம் அதிகமாக உள்ள சூழலில் இன்று நடைபெறும் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

வடகிழக்கு பருவமழை எதிர்கொள்வதற்கான பல்வேறு பணிகள் நடைபெற்று வரும் சூழலில் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் அதிகாரிகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. பருவமழையால் பாதிப்புகள் ஏற்பட்டாலும் அதனை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராகி வரும்
இந்த நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, கல்வித் துறை மாணவர்கள் மற்றும் பள்ளி நலன் சார்ந்த சில அறிவுரைகள் அடங்கிய ஒரு சுற்றறிக்கையை பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ளது.
பள்ளி வளாகத்தையும், விளையாட்டு மைதானத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். பருவமழை காலத்துக்கு முன்பாக பள்ளி வகுப்பறைகளின் மேற்கூரையில் படர்ந்துள்ள மரக்கிளைகள் மற்றும் தேங்கியுள்ள இலைகளை அகற்றி மழைநீர் எளிதாக வெளியேற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளி கட்டிடத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.
பள்ளியில் உள்ள மின் மோட்டார் உள்ளிட்ட மின்சாதனங்களை எக்காரணம் கொண்டும் மாணவர்களை கொண்டு இயக்கக் கூடாது.
பள்ளி வகுப்பறைகள் மற்றும் வளாகங்களில் மின் இணைப்புகள் முறையாக பாதுகாப்பாக பராமரிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.
மின் கம்பிகள், மின்சாதனங்கள் பழுதுப்பட்டிருந்தால் மின் இணைப்பினை துண்டித்து பராமரிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும்.
பள்ளி வளாகத்தில் திறந்தநிலை நீர்நிலைகள், பள்ளங்கள் மாணவர்கள் அணுகா வண்ணம் சுற்றுவேலி அமைத்தல், கிணறு மற்றும் நீர்நிலை தொட்டிகளில் மேற்புறம் முழுவதும் மூடிய அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.புகையிலை மற்றும் போதைப்பொருட்களால் ஏற்படும் சீரழிவுகள் குறித்து அறிவுரைகள் வழங்க வேண்டும்.
பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை, மதியம் வழங்கப்படும் சிற்றுண்டி மற்றும் உணவு முற்றிலும் தூய்மையாகச் சமைக்கப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications