ஏழாம் அறிவு, காப்பானை தொடர்ந்து கஜினி,. அசின் வரைக்கும் நாஸ்டர்டாமஸ் கணிப்பு.. நெட்டிசன்கள் அழும்பு
சென்னை: சூர்யாவின் ஏழாம் அறிவு, காப்பான் படத்தில் வந்தததை போலவே நிஜத்தில் நடந்த நிலையில், நெட்டிசன்கள் நாஸ்டர்டாமஸ் கணிப்புகளை சூர்யாவின் ஒவ்வொரு படம் குறித்து ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்.அதில் கஜினி படத்தில் அசின் குறித்து செய்த ஆராய்ச்சி தான் மிகவும் ஆச்சர்யமானது.
Recommended Video
உலகில் பின்னால் நடக்கப்போவதை முன்னாடியே கணித்து சொல்வதை தான் நாஸ்டர்டாமஸ் கணிப்பு என்பார்கள். தற்போதைய நிலையில் 2020ம் ஆண்டில் கொரோனாவைரஸ் தொற்று, வெட்டுக்கிளிகள் படையெடுப்பு, சீன படைகள் அத்துமீறல், பொருளாதார முடக்கம் என்று இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதில் கொரோனா வைரஸ் மற்றும் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு ஆகியவற்றால் பெரும் சேதத்தை இந்தியா சந்தித்துள்ளது. இதில கொரோனா வைரஸ் பிரச்சனை, மற்றும் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு ஆகியவை சூர்யாவின் ஏழாம் அறிவு மற்றும் காப்பான் படத்தில் இடம் பெற்றிருக்கும்.
ஏழாம் அறிவு படத்தில் சீனாவில் இருந்து வரும் ஒருவர் மூலம் வைரஸ் தொற்று பலருக்கு பரவும். அதை தடுக்க வழி தெரியாமல் அரசுகள் திணறும். இதேபோல் காப்பான் படத்தில் வெட்டுக்கிளிகள் மொத்தமாக படைஎடுத்து வரும். இந்த இருகாட்சிகளும் தத்ரூபமாக இப்போது நிஜத்தில் இந்தியாவில் நடக்கின்றன. இந்நிலையில் நாஸ்டர்டாமஸ் கணிப்புகள் சூர்யாவின் படத்தில் அடுத்தடுத்து நடந்ததால் நெட்டிசன்கள் மற்ற படங்கள் குறித்தும் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்.
கஜினி படத்தில் அசின் குறித்த அவர்களின் கணிப்பு தான் மிகவும் வேடிக்கையானது. கஜினி படத்தில் அசின் சூர்யாவை காதலிப்பார். சூர்யா அந்த படத்தில் செல்போன் கம்பெனி நிறுவனராக இருப்பார்.

இந்நிலையில் அசின் சூர்யாவை திருமணம் செய்யாமல் படத்தில் இறந்துவிடுவார். இந்நிலையில் அசின் நிஜத்தில் மைக்ரோமேக்ஸ் செல்போன் கம்பெனி ஓனர் ராகுல் சர்மாவை கல்யாணம் செய்தார். இதை கூறி நெட்டிசன்கள் நெட்டில் அழும்பு செய்து வருகிறார்கள். இந்த ஆராய்ச்சி இன்னும் எந்த அளவிற்கு நீள போகிறது என்று தெரியவில்லை. வெறும் சூர்யாவுடன் முடியுமா மற்ற நடிகர்களையும் ஆராய்கிறார்களா என்பது இனி வரும் நாட்களில் தெரியும்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications