சென்னை சிக்னலில் விதிமீறல்: காட்டி கொடுத்த அதிநவீன கேமரா.. வசமாக சிக்கிய 10,905 பேருக்கு நோட்டீஸ்!
சென்னை: சென்னை சிக்னலில் விதிகளை மீறிய 10,905 பேர் அதிநவீன கேமரா மூலம் சிக்கினார்கள். அவர்கள் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சென்னையில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வாகனங்களும் பெருகிக் கொண்டே வருகின்றன.
பரபரப்பான காலை மற்றும் மாலை நேரங்களில் சாலைகளில் வாகனங்கள் ஒரு சேர குவிகின்றன. இதனால் வேலைக்கு நேரமாகி விட்டது என்ற அவசரத்தில் ஒரு சில வாகன ஓட்டிகளுக்கு சிக்னலில் நிற்காமல் செல்வது உள்ளிட்ட சாலை விதிகளை மீறுவது வழக்கமாகி விட்டது.

அதிநவீன கேமரா
இதனால் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை அந்த நொடியிலேயே கண்டறிந்து அபராதம் விதிக்கும் தொழில் நுட்ப முறை சென்னையில் அமலுக்கு வந்துள்ளது. சென்னை அண்ணாநகர் ரவுண்டானா, சாந்தி காலனி, முகப்பேர், திருமங்கலம், உள்ளிட்ட 5 சிக்னல்களில் அதிநவீன கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த அதிநவீன கேமரா மூலம் சிக்னல் விதிகளை மீறுபவர்கள் உடனடியாக கண்டறியப்படுவார்கள்.

காவல் கட்டுப்பாடு அறை
அதாவது போக்குவரத்து விதிமீறும் வாகனங்களின் பதிவு எண்கள் மிக தெளிவாக அதிநவீன கேமராக்களில் பதிவாகும். அவை பதிவு செய்யப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்களின் செல்போன் எண்களுக்கு கட்டுப்பாட்டறையில் உள்ள கணினி மூலம் அபராத செலான்கள் அனுப்பப்படும். இந்த வசதிகளுடன் கூடிய அண்ணாநகர் போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டறை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது.

ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது
அதிநவீன கேமரா விதிகளை மீறும் வாகன உரிமையாளர்களின் வாகன பதிவு எண்ணை(அந்த வாகனத்தின் நம்பர் பிளேட்) மிக தெளிவாக படம் பிடித்து கட்டுப்பாடு அறை சர்வருக்கு அனுப்பும். அங்கு இருந்து விதிகளை மீறிய வாகன உரிமையாளர்களின் செல்போன் எண்ணுக்கு அபராத செலான்கள் அனுப்பி விடும். முதலில், விதிகளை மீறும் வாகன உரிமையாளர்களின் செல்போனுக்கு விதிகளை மீறிய நோட்டீஸ் 10 நொடிகளில் அனுப்பபடும்.

10,905 பேருக்கு நோட்டீஸ்
இந்த நிலையில் இந்த அதிநவீன கேரமா மூலம் விதிகளை மீறிய 10,905 பேர் சிக்கியுள்ளனர். இந்த 10,905 பேரும் விதிகளை மீறியதற்கான விளக்கத்தை 7 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அவர்களின் செல்போன் எண்ணுக்கு செல்போனுக்கு தானியங்கி முறையில் அபராத செலான்கள் அனுப்பபடும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications