மத்திய பாஜக அரசு குறித்து எடப்பாடி, வானதி சீனிவாசன் 'அந்த வார்த்தையை' சொன்னாங்களா? வெடித்த சர்ச்சை!
சென்னை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் மத்திய அரசு என்ற சொல்லை உச்சரிப்பது இல்லை. இதே பாணியில்தான் தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமல்ல.. பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனும் பேச தொடங்கி இருப்பது ஆச்சரியத்தையும் சர்ச்சையையும் கிளப்பி இருக்கிறது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்த நாள் முதலே மத்திய அரசு, மத்திய சர்க்கார், இந்திய சர்க்கார், இந்தியப் பேரரசு போன்ற வழக்கமான கருணாநிதி காலத்து சொற்களை தவிர்த்துவிட்டது. அதற்கு பதிலாக யாருமே எதிர்பார்க்காத வகையில் 'ஒன்றிய' அரசு என அழைத்தது.

ஒன்றிய அரசு என்ற சொற்றொடரைப் பயன்படுத்தி வந்தது தனித் தமிழ்நாடு கோருகிற குறிப்பாக தனித் தமிழ்நாட்டை ஆயுதப் போரின் மூலம் உருவாக்க வேண்டும் என்கிற அதிதீவிர இடதுசாரிகள்தான்.
ஒட்டுமொத்தமாக மாற்றிய 'ஒன்றிய அரசு': அப்படியான இயக்கங்கள் பயன்படுத்திய சொல்லை ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய திமுகவின் அரசு ஆவணங்கள், முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை அனைவருமே பயன்படுத்தியது ஆச்சரியத்தையும் புதிய திருப்பத்தையும் ஏற்படுத்தியது. அத்துடன் திமுகவின் அத்தனை கூட்டணி கட்சிகளும் திமுகவின் ஒவ்வொரு தொண்டனும் மத்திய அரசு என்பதை மறந்து 'ஒன்றிய அரசு' என்ற சொல்லை பயன்படுத்தி வருவது ஒரு முதன்மை அரசியல் நிகழ்வு.
அதிமுக, பாஜக எதிர்ப்பு: ஆனால் அப்போது அதிமுக, பாஜக இரண்டுமே கூட்டணியில் இருந்தன. இதனால் "ஒன்றிய" அரசு என சொல்வதை மிக கடுமையாக விமர்சித்தன. ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாடு இந்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறி சிறுமைப்படுத்துவது மக்கள் நலன் பயக்கும் செயல் அல்ல. இந்திய அரசை 'ஒன்றிய அரசு' என்று சொல்வது நமது இந்திய தாய்த் திருநாட்டை கொச்சைப்படுத்துவது போலும், சிறுமைப்படுத்துவது போலும் அமைந்துள்ளது என்று தமிழ்நாட்டு மக்கள் நினைக்கிறார்கள் என்பதை தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன் என்றெல்லாம் விமர்சித்திருந்தார். பொதுவாக அதிமுகவும் பாஜகவும் மத்திய அரசு என்றுதான் அழைப்பது வழக்கம்.
சட்டசபை கூட்டம்: தற்போது பாஜக- அதிமுக கூட்டணி முறிந்துவிட்டது. இந்த கூட்டணி முறிவுக்குப் பின்னர் சட்டசபையில் இரு கட்சிகளும் தனித்தனி பாதையில்தான் பயணிக்கின்றன. இந்நிலையில் தமிழ்நாடு சட்டசபையில் காவிரி பிரச்சனை தொடர்பாக தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தின் மீது சட்டசபையில் அதிமுக சார்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். பாஜக சார்பாக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் பேசினார்.
வார்த்தைக்கு வார்த்தை "ஒன்றிய அரசு": சட்டசபையில் எடப்பாடி பழனிசாமியும் வானதி சீனிவாசனும் மத்திய அரசு என்ற சொல்லுக்குப் பதில் "ஒன்றிய அரசு" என்ற சொல்லையே பயன்படுத்தினர். சட்டசபைக்குள்ளே மட்டும் அல்ல சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய போதும் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமியும் பாஜகவின் வானதி சீனிவாசனும் வார்த்தைக்கு வார்த்தை "ஒன்றிய" அரசு என்பதை அழுத்தம் திருத்தமாகவே குறிப்பிட்டனர்.
சமூக வலைதளங்களில் விமர்சனம்: இருவருமே புழக்கத்தில் இரண்டற கலந்துவிட்ட சொல்லாகிவிட்டதால் 'ஒன்றிய அரசு' என இயல்பாகவே பயன்படுத்தி இருக்கலாம். ஆனால் 'ஒன்றிய அரசு' என்பதற்கு நேற்று எதிர்ப்பு தெரிவித்துவிட்டு இன்று அதையே இருவரும் பயன்படுத்துகிறார்களே என்பதுதான் சமூக வலைதள விவாதமாக இருக்கிறது.
-
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட்












Click it and Unblock the Notifications