எம்.ஆர்.விஜயபாஸ்கர், வேலுமணி, வீரமணி.. இப்ப சி.விஜயபாஸ்கர்.. ரெய்டு சரி.. அடுத்து எதுவும் நடக்காதோ?
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி ஆகியோரைத் தொடர்ந்து வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சிக்கியிருக்கிறார் சி. விஜயபாஸ்கர். தமிழகம் முழுவதும் விஜயபாஸ்கருக்கு சொந்தமான மற்றும் அவரது பினாமிகளின் வீடுகள், நிறுவனங்கள் என மொத்தம் 43 இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை அடுத்த கட்டத்துக்கு நகருமா? என்பதுதான் இப்போதைய கேள்வியாக உருவெடுத்துள்ளது.
சட்டசபை தேர்தலின் போது அதிமுக மாஜி அமைச்சர்களின் ஊழல்களை பட்டியல் போட்டு காட்டி பிரசாரம் செய்தது திமுக. அத்துடன் திமுக ஆட்சிக்கு அமைந்ததும் முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்; இதற்காக தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு விரைவில் தண்டனை பெற்றுத் தருவோம் என்றும் திமுக உறுதி அளித்தது.
தேர்தலில் திமுக வென்று ஆட்சி அமைத்ததும் மாஜி அமைச்சர்கள் மீதான நடவடிக்கை தொடங்கியது. முதலில் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிக்கினார்.

கரூர் விஜயபாஸ்கர்
எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்குப் பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கரூரில் உள்ள அவரது வீடு உட்பட 20 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை வெளியிட்ட அறிக்கையில், விஜயபாஸ்கர், மனைவி விஜயலட்சுமி, தம்பி சேகர் ஆகியோரது பெயர்களிலும் விஜயபாஸ்கர் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள் பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக நடந்த சோதனையில் ரூ.25.56 லட்சம் ரொக்கப்பணம், சொத்துகள் தொடர்பான ஆவணங்கள், காப்பீட்டு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் மற்றும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என தெரிவித்திருந்தது. அப்போது விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளுடன் மல்லுக்கட்ட பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video

ஆதரவாளர்களை குவித்த வேலுமணி
இதையடுத்து சிக்கியவர் எஸ்.பி.வேலுமணி. எடப்பாடி பழனிசாமி முதல்வராக் இருந்த போது அதிமுக ஆட்சியில் கோலோச்சியவர். எஸ்.பி.வேலுமணி மீது டெண்டர் முறைகேடுகள் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆனால் தம் மீது ரெய்டு பாயப் போகிறது என்பதை முன்னரே அதிகாரிகள் சிலர் மூலம் அறிந்து கொண்ட எஸ்.பி.வேலுமணி அதற்கு ஏற்ப தயார் நிலையில் இருந்தார். ரெய்டு நடக்கும் இடங்களில் தமது ஆதரவாளர்களை குவித்து ஏகப்பட்ட ரகளை நடந்தது. அவர்களுக்கு மூன்று வேளை உணவு, சிற்றுண்டிகளும் சப்ளை செய்யப்பட்டன. தமிழகம் முழுவதும் 60 இடங்களில் நடந்த சோதனையில் லாக்கர் சாவிகள், ஆவணங்கள், ரூ13 லட்சம் ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

5 கிலோ நகைகள் பறிமுதல்
3-வதாக சிக்கியவர் கே.சி. வீரமணி. கே.சி.வீரமணிக்கு சொந்தமான வீடுகள், கல்வி நிறுவனங்கள் என பல இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை என மொத்தம் 28 இடங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. வருமானத்துக்கு அதிகமாக 654% கே.சி. வீரமணி சொத்து குவித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரது வீட்டில் இருந்து 5 கிலோ தங்கம் உள்ளிட்டவைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

எப்போது அடுத்த நடவடிக்கை?
இப்படி 3 முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ரெய்டு நடத்தி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தனர் என அறிக்கை வெளியிட்டு... என்ற நிலையோடு நின்று போய்விட்டது. அதற்கு அடுத்ததாக மேல் நடவடிக்கை எதுவும் நடைபெறவே இல்லை. அப்படியானால் இந்த ரெய்டுகள் எதற்காக என்கிற கேள்வியை சமூக ஆர்வலர்கள் முன்வைத்தனர். தற்போது 4-வதாக மாஜி அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சிக்கியிருக்கிறார். அவரது வீடுகள் உள்ளிட்ட 43 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டும் வருகின்றன. இந்த சோதனையும் கூட வழக்கம் போல லஞ்ச ஒழிப்புத் துறையின் அறிக்கையுடன் முடியப் போகிறதா? அல்லது அடுத்த கட்ட நடவடிக்கைக்கு நகருமா? என கேட்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
-
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்? -
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் பரபர சோதனை! -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
"100 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்கள் தயாராக உள்ளனர்".. பரபரப்பைக் கிளப்பிய கிருஷ்ணசாமி! -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
அரசு ஊழியர்கள் கதறல்.. கருணாநிதி கைது.. ’பொடா’வில் வைகோ - 2001 ஆட்சியில் ஆட்டிப் படைத்த ஜெயலலிதா! -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
வீட்டிற்குள்ளேயே முடங்கிய விஜய்.. இவரை நம்பி போட்ட பிளான் எல்லாம்.. அப்செட்டில் தவெக நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications