அவர் மட்டும் போவாரா? டெல்லியில் டென்ட் அடிக்கும் எடப்பாடி டீம்.. 3 கண்டிஷன்.. 2 வாக்குறுதி! பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் பிரச்சனை நிலவி வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக டெல்லியில் ஓ பன்னீர்செல்வம் பல்வேறு பாஜக தலைவர்களை சந்தித்தார். இந்த பயணத்தில் பல்வேறு முக்கியமான மீட்டிங்குகளை ஓ பன்னீர்செல்வம் மேற்கொண்டார்.

Recommended Video

    ADMK-வில் ஓபிஎஸ் - இபிஎஸ் சேர்ந்து ஏதாவது செய்யுங்கள் - சீமான் *Politics

    டெல்லி பயணத்தின் போது ஓபிஎஸ் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு இருந்தார். அவருக்கு வேறு வேலைகள் இருந்த காரணத்தால்.. இந்த சந்திப்பிற்கு நேரம் கிடைக்கவில்லை.

    மற்றபடி பல்வேறு பாஜக தலைகளை ஓபிஎஸ் சந்தித்தார். இவர்களுடன் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டார்.

    எடப்பாடி பயணம்

    எடப்பாடி பயணம்

    இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிச்சாமி சார்பாக டெல்லிக்கு ஒரு டீம் செல்ல இருக்கிறதாம். ஓபிஎஸ் டெல்லி சென்றுவிட்டு திரும்பிய பின் மிகவும் சந்தோஷமாக காணப்படுகிறார். அவரின் முகத்தில் சிரிப்பு காணப்படுகிறது. அதோடு மதுரைக்கும் தற்போது சென்றுள்ளார். இந்த நிலையில் டெல்லியில் என்ன நடந்தது என்று விசாரிக்கும் விதத்திலும், டெல்லி தரப்பின் ஆதரவை பெறும் வகையிலும் எடப்பாடி தரப்பை சேர்ந்த 2 முன்னாள் அதிமுக அமைச்சர்கள் டெல்லி செல்லும் திட்டத்தில் இருக்கிறார்களாம்.

    கண்டிஷன் 1 - அதிமுக உட்கட்சி

    கண்டிஷன் 1 - அதிமுக உட்கட்சி

    டெல்லியில் பாஜக மூத்த தலைகளை சந்திக்கும் இவர்கள் 3 முக்கியமான கண்டிஷன்களையும், 2 வாக்குறுதிகளையும் கொடுக்க இருக்கிறார்களாம். அதன்படி அதிமுக உட்கட்சி விவகாரத்தில் எந்த விதத்திலும் தலையிட கூடாது என்ற கண்டிஷனை எடப்பாடி தரப்பு வைக்க உள்ளதாம். இப்போது அதிமுகவில் நடக்கும் விஷயங்கள் எதுவும் பாஜகவை பாதிக்க போவது இல்லை. இதனால் பாஜக இப்போது அதிமுக விவகாரங்களில் மத்தியசம் பேச கூடாது என்ற கண்டிஷனை எடப்பாடி தரப்பு வைக்க உள்ளதாம்.

    கண்டிஷன் 2 - ஓபிஎஸ் ஆதரவாக பேச கூடாது

    கண்டிஷன் 2 - ஓபிஎஸ் ஆதரவாக பேச கூடாது

    அதோடு ஓபிஎஸ் டெல்லி வந்த நிலையில் அவருக்கு ஆதரவாக யாரும் பேச கூடாது. முக்கியமாக தமிழ்நாடு பாஜக தலைவர்கள் யாரும் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக பேச கூடாது. ஓபிஎஸ்ஸை சந்திப்பது, அவருக்காக எங்களிடம் தூது வருவது போன்ற விஷயங்கள் கூடாது என்ற கட்டுப்பாட்டை டெல்லி தரப்பிற்கு எடப்பாடி தரப்பு வைக்கும் என்கிறார்கள். டெல்லி இந்த விவகாரத்தில் தலையிடுவதை எடப்பாடி டீம் விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது.

    கண்டிஷன் 3 - முடிவுகளில் தலையிட கூடாது

    கண்டிஷன் 3 - முடிவுகளில் தலையிட கூடாது

    அதோடு அதிமுகவில் என்ன முடிவு எடுத்தாலும்.. அது சில முக்கிய தலைகளை நீக்கும் முடிவாக இருந்தாலும்.. எந்த விதத்திலும் சட்ட ரீதியான அழுத்தம் தர கூடாது. வழக்குகள் எதிலும் மேலிடத்தில் இருந்து அழுத்தம் வர கூடாது. இப்போது ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாக ஆலோசனைகளை வழங்கி இருந்தாலும்,. அதில் அவருக்கு உதவிகளை செய்ய கூடாது என்ற கண்டிஷன்களை எடப்பாடி சார்பாக 2 முக்கிய புள்ளிகள் டெல்லியில் தெரிவிக்க இருக்கிறார்களாம்.

    வாக்குறுதி 1 - கூட்டணி

    வாக்குறுதி 1 - கூட்டணி

    ஆனால் அதே சமயம் டெல்லி பாஜகவை பகைக்க எடப்பாடி தரப்பிற்கு விருப்பம் இல்லை. இதனால் இதற்கு கைமாறாக இரண்டு வாக்குறுதிகளை கொடுக்கவும் எடப்பாடி தரப்பு முடிவு செய்துள்ளதாம். அதன்படி பாஜகவுடன் 2024 லோக்சபா தேர்தலில் கூட்டணி தொடரும். அதற்கு பின்பும் கூட்டணி தொடர்வதை பற்றி பேசலாம். ஒற்றை தலைமை வந்தாலும் கூட்டணியில் பிரச்சனை இருக்காது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு வாக்குறுதி கொடுக்க உள்ளதாம்.

    வாக்குறுதி 2 - குடியரசுத் தலைவர்

    வாக்குறுதி 2 - குடியரசுத் தலைவர்

    அதோடு குடியரசுத் தலைவர் தேர்தலிலும் அதிமுக ஆதரவு இருக்கும். லோக்சபா, ராஜ்ய சபா என்று 6 எம்பிக்கள் உள்ளனர். இதில் 5 அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடி டீம். அவர்கள் கண்டிப்பாக பாஜக கூட்டணி வேட்பாளருக்கே ஆதரவு தருவார்கள் என்ற வாக்குறுதியை கொடுக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு முடிவு செய்துள்ளதாம். இதன் மூலம் ஓபிஎஸ் தரப்பை டெல்லி ஆதரிப்பதை தடுக்க முடியும் என்று எடப்பாடி நம்புகிறாராம். இன்றோ அல்லது நாளையோ எடப்பாடி சார்பாக 2 பேர் டெல்லிக்கு செல்ல வாய்ப்பு உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+