ராகுல் டான்ஸ்.. இதுக்கு பேரு என்ன சார்? "மணிப்பூரை மறந்துட்டு ஆட்டம்”.. கொதிக்கும் பாஜக நிர்வாகி!
சென்னை: மணிப்பூர் பற்றி எரியும்போது நாடாளுமன்றத்தின் மத்தியில் அமர்ந்துகொண்டு வெட்கமின்றி சிரிக்கிறார் பிரதமர் மோடி." என ராகுல் காந்தி காட்டமாக விமர்சித்த நிலையில், ராகுல் நேற்று பழங்குடி மக்களுடன் நடனமாடிய வீடியோவைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன்.
காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் அண்மையில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை அடுத்து அவர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

சூரத் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை வழங்கியதால் மீண்டும் எம்.பி பதவியை பெற்றார். அதன்பிறகு நாடாளுமன்றம் சென்று நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது உரையாற்றிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி மீதும் மத்திய பாஜக அரசின் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
மீண்டும் எம்.பி பதவியைப் பெற்ற பிறகு முதல்முறையாக தனது சொந்த தொகுதியான வயநாட்டிற்கு ராகுல் காந்தி சென்றார். இதற்காக நேற்று காலை டெல்லியில் இருந்து இன்டிகோ விமானம் மூலம் கோவை வந்தடைந்த ராகுலுக்கு, தமிழ்நாடு மற்றும் கேரள காங்கிரஸ் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ராகுல் பயணத்தின் ஒரு பகுதியாக ஊட்டி அருகேயுள்ள முத்தநாடு கிராமத்தில் தோடர் பழங்குடியின மக்களை சந்தித்துப் பேசினார். ராகுலுக்கு அவர்கள் சிறப்பான வரவேற்பை வழங்கினர். தோடர் இன மக்களின் பாரம்பரிய உடையை விரும்பி அணிந்துகொண்ட ராகுல் காந்தி, அவர்களுடன் இணைந்து நடனமாடினார். இதுதொடர்பாக வீடியோக்கள், சமூக வலைதளங்களில் பரவின.
பாரதப் பிரதமர் @narendramodi பாராளுமன்றத்தில் சிரிக்கிறார் என்று திட்டமிட்டு பொய்யான அவதூறு பரப்புகிறார்.. இபபோது மணிப்பூரை மறந்து நடனம் ஆடுகிறார்.. ராகுல் காந்தி. இதை என்னவென்று சொல்வது @blsanthosh pic.twitter.com/KBxhKA3IRb
— Karu.Nagarajan (@KaruNagarajan) August 13, 2023
இதுதொடர்பான வீடியோ ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ள தமிழ்நாடு பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன், "பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்றத்தில் சிரிக்கிறார் என்று திட்டமிட்டு பொய்யான அவதூறு பரப்புகிறார். இபபோது மணிப்பூரை மறந்து நடனம் ஆடுகிறார் ராகுல் காந்தி. இதை என்னவென்று சொல்வது?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்குப் பதில் அளித்துப் பேசியது குறித்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் ராகுல் காந்தி. அப்போது பேசிய அவர், "பல மாதங்களாக மணிப்பூர் பற்றி எரிந்து வருகிறது. கொலை, பாலியல் வன்கொடுமைகள் தொடர்கின்றன. ஆனால், நாடாளுமன்றத்தின் மத்தியில் அமர்ந்துகொண்டு வெட்கமின்றி நகைச்சுவையாகப் பேசிச் சிரிக்கிறார் பிரதமர் மோடி." எனக் காட்டமாக கூறியிருந்தார்.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications