NPS new rule : மாத சம்பளம் வாங்குறீங்களா.. தேசிய பென்சன் திட்டத்தில் பிப் 1 முதல் என்னென்ன மாற்றம்
சென்னை: தேசிய பென்சன் திட்டக் கணக்கில் இருந்து 25 சதவீதத்திற்கும் அதிகமான தொகையை எடுக்க முடியாது.. பென்சன் திட்டத்தில் பணத்தை எடுப்பதற்கான புதிய விதிமுறை பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வர உள்ளது.
மத்திய அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டமான தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) தனியார் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக கொண்டுவரப்பட்டது ஆகும். இத்திட்டப்படி மக்கள் தாங்கள் வேலை பார்க்கும் காலத்திலேயே, ஓய்வூதியம் பெறுவதற்காக முதலீடு செய்ய முடியும். இந்த பணத்தை தேசிய பென்சன் திட்டப் பங்குகள், அரசுப் பத்திரங்கள் மற்றும் கார்ப்பரேட் பத்திரங்கள் போன்ற பல்வேறு துறைகளில் அரசு முதலீடு செய்கிறது. அதன் மூலம் வருவதை ஓய்வூதியதாரர்களுக்கு அரசு அளிக்கிறது.

ஓய்வுக்குப் பிறகு, பொதுமக்கள் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை எடுத்துக் கொள்ளலாம். NPS கணக்கு வைத்திருப்பவர்கள், மீதமுள்ள தொகையை மாதாந்திர ஓய்வூதியமாகப் பெறுவார்கள். பிரிவு 80C மற்றும் பிரிவு 80CCD ஆகியவற்றின் கீழ் வருமான வரிச்சலுகையும் இத்திட்டத்தில் உண்டு.
இந்நிலையில் தேசிய பென்சன் திட்டத்தில் (NPS) இணைந்துள்ளவர்களுக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அதாவது வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் தேசிய பென்சன் திட்டத்தின் பணம் எடுக்க சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. ஓய்வூதியம் நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் வெளியிட்டுள்ள உத்தரவுப்படி, இனி தேசிய பென்சன் திட்டக் கணக்கில் இருந்து 25 சதவீதத்திற்கும் அதிகமான தொகையை எடுக்க முடியாது. இந்தத் தொகையில் பணியாளர் மற்றும் முதலாளி (நிறுவனம்) ஆகிய இருவரின் பணமும் உள்ளடக்கியதாகும். முதலீட்டுக் காலத்தில் மூன்று முறை மட்டுமே கணக்கிலிருந்து பகுதியளவு பணத்தை திரும்பப் பெற முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் அந்த 25 சதவீத தொகையை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் தேசிய பென்சன் திட்டக் கணக்கிலிருந்து எடுக்க முடியும். ஆனால் இதற்கான நிபந்தனை என்னவென்றால், மூன்று ஆண்டுகளுக்கு ஏற்கனவே முதலீடு செய்திருக்க வேண்டும். எதற்கு எல்லாம் தேசிய பென்சன் திட்டத்தில் பணம் எடுக்கலாம். உங்கள் குழந்தைகளின் கல்வி, உங்கள் வீட்டு திருமணம், வீடு வாங்குதல், மருத்துவ சிகிச்சை, ஸ்டார்ட்அப் நிறுவனம் தொடங்குதல் அல்லது ஏதேனும் அவசரச் செலவுக்காக தேசிய பென்சன் திட்டக் கணக்கில் இருந்து 25 சதவீதம் வரை பணத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
தேசிய பென்சன் திட்டத்தில் இருந்து பணத்தை எடுக்க புதிய விதி: ஓய்வூதியத்தை திரும்பப் பெறவும்,
பிப்ரவரி 1 க்குப் பிறகு NPS கணக்கிலிருந்து பகுதியளவு திரும்பப் பெறுவதற்கு, ஓய்வூதியத் திட்டத்தின் சந்தாதாரர்கள், மேலே சொன்ன ஏதாவது ஒரு காரணங்களை குறிப்பிட்டு அந்தந்த அரசு நோடல் அலுவலகம் அல்லது அதிகாரிகள் மூலம் என்பிஎஸ் இல் பதிவு செய்யலாம். அதேநேரம் பணதை திரும்பப் பெறுவதற்கான காரணமாக பென்சன்தாரர் நோய்வாய்பட்டவராக இருக்கிறார் என்றால், அவர்கள் சார்பாக அவரது குடும்ப உறுப்பினர் கடிதத்தை அளித்து அணுக வேண்டும்.
தேசிய பென்ஷன் திட்டத்தின் கீழ் பணம் எடுக்க பென்னி டிராப்' சரிபார்ப்பு முறை கட்டாயம். அதாவது பென்னி டிராப் முறை என்பது உங்கள் வங்கிக் கணக்கு ஆக்டிவ்வாக இருக்கிறதா என்பதை சரிபார்க்க முதலில் ஒரு சிறிய தொகை அனுப்பி பரிசோதனை முறை தான்..
நீங்கள் தேசிய பென்சன் திட்டத்தில் மொத்த ஓய்வூதிய தொகையான 60 சதவிகிதத்தை மொத்தமாகப் பெறுவதற்குப் பதில், தங்களின் விருப்பத்தின் பேரில் மாதாந்தர, காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்தர அடிப்படையில் திரும்ப பெறவும் முடியும்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications