Periyar Issue: 'ஜாதி' பார்த்து தூத்துக்குடியில் போட்டியிட்ட கனிமொழி பெரியார் பற்றி பேசலாமா? சீமான்
சென்னை: ஜாதி ஓட்டுகளுக்காக தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி, பெரியார் பற்றி பேசுவதற்கு தகுதி இருக்கிறதா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார். தம்மை கூலிக்காக பெரியாரை இழிவுபடுத்துகிறார் என விமர்சித்ததற்காக கனிமொழியிடம் சீமான் இந்த கேள்வியை எழுப்பி இருக்கிறார்.
ஈரோட்டில் இன்று செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: பெரியாரை இழிவுபடுத்தும் கூலிகள் என கனிமொழி கூறுவது அவரது அப்பாவைத்தான் (கருணாநிதி), திமுகவின் நிறுவனர் பேரறிஞர் அண்ணாவைத்தான். நான் பெரியாரை இழிவுபடுத்தவில்லை. பெரியார் என்ன பேசி இருந்தாரோ, எழுதி இருந்தாரோ அதை எடுத்து பேசுகிறேன்.

பெரியாரைப் பற்றி பேசும் கனிமொழி உள்ளிட்ட பெருமக்கள், பெரியார் என்ன பேசினார்? என்பதை எடுத்து பேச துணிவு இல்லை. பெரியார் யார் தெரியுமா? பெரியார் யார் தெரியுமா? என கேட்கிறீர்கள்.. எங்களுக்குதான் தெரியவில்லை.. சொல்லுங்க என்றால் சொல்லவும் மறுக்கிறீர்கள்.
பெரியாரை கருணாநிதி, அண்ணாவைவிட யாராவது இழிவாகப் பேசி இருக்கிறார்களா? அம்மையார் கனிமொழி அவர்களே! நீங்கள் பேசுகிற பெரிய கூலி உங்க அப்பாதான்.. அப்ப உங்க அப்பாவைத்தான் எதிர்த்து பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.
கனிமொழி ஒரு பெரியாரிஸ்டா? அப்புறம் ஏன் மருமகன் உதயநிதி நெற்றியில் திருநீறு பூசி விட்டீர்கள்? நீங்கள் கடவுள் மறுப்பாளரா? உங்க கட்சி பெண்களுக்கு கொடுத்த முன்னுரிமை என்ன? பெரியார் எங்கே ஜாதி ஒழிப்பை நிலைநாட்டி இருக்கிறார்?
தமிழ்நாட்டில் இத்தனை தொகுதிகள் இருக்கும்போது, தூத்துக்குடியில் கனிமொழி போட்டியிட்டதற்கு காரணம் சொல்ல முடியுமா? காரணம் என்ன? சென்னை, கோவை, ஈரோடு, சேலம், வேலூர், விழுப்புரத்தில் போட்டியிடாமல் ஏன் தூத்துக்குடியில் போட்டியிட்டீர்கள்? ஜாதி ஒழிப்புக்காகவா? அங்கே ஏமாந்த பாவப்பட்ட மக்கள் இருக்கிறார்கள் என்பதால்தானே.. உங்களை இன்னமும் அந்த மக்கள் தன் ஜாதிக்காரன் என நம்புகிறான் பாருங்க.. அந்த அளவுக்கு அந்த மக்களை
பைத்தியக்கார மக்களாக்கி வைத்திருக்கிறீர்கள்?
தூத்துக்குடியில் 2 முறை ஏன் போட்டியிட்டீர்கள்? கருணாநிதி மகள் கனிமொழி எப்படி நாடாராக முடியும்? அப்ப மு.க. அழகிரி, மு.க. ஸ்டாலின் எல்லாம் நாடாரா? ஒரு அப்பாவுக்கு இரண்டு ஜாதி இருக்குமா? அப்புறம் எதுக்காக தூத்துக்குடியில் போட்டியிட்டீர்கள்? நீங்க பெரியார் பற்றி பேச தகுதி இருக்கிறதா? சும்மா கூலி.. காலி என சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. இவ்வாறு
சீமான் கூறினார்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications