திருமா அழைப்பை ஏற்று திரளும் கட்சிகள்.. பேரணிக்கு சீமான் ஆதரவு- களத்தில் குதித்த இஸ்லாமிய அமைப்புகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை : அக்டோபர் 2ஆம் தேதி விசிக, சிபிஐ, சிபிஐஎம் சார்பாக நடைபெற உள்ள சமூக நல்லிணக்க பேரணியில் நாம் தமிழர் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இந்திய தேசிய லீக் கட்சி ஆகிய கட்சிகள் பங்கேற்பதாக அறிவித்துள்ளன.

அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தமிழகத்தில் 51 இடங்களில் பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், அக்டோபர் 2 ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னெடுப்பில் சமூக நல்லிணக்க பேரணி நடைபெறும் என்று அறிவித்த விசிக தலைவர் திருமாவளவன், அனைத்து கட்சிகளுக்கும், ஜனநாயக அமைப்புகளுக்கும் அழைப்பு விடுத்தார்.

அவரது அழைப்பை ஏற்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர் மொகைதீன், இந்திய தேசிய லீக் கட்சியில் மாநிலத் தலைவர் தடாரஹிம் உள்ளிட்டோர் தங்கள் கட்சிகளும் பேரணியில் பங்கேற்கும் என அறிவித்துள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ் பேரணி

ஆர்.எஸ்.எஸ் பேரணி

தமிழகத்தில் வரும் அக்டோபர் 2ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற உள்ளது. இதற்கு அனுமதிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் தமிழக காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அமைதிப் பூங்காவாக உள்ள தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நடப்பது நல்லதல்ல என்றும் தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் நடைபெறும் இந்தப் பேரணிக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் விசிக, நாதக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை எழுப்பியுள்ளன. விசிக தலைவர் திருமாவளவன் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தடை கோரி வழக்கும் தொடர்ந்தார்.

சமூக நல்லிணக்க பேரணி

சமூக நல்லிணக்க பேரணி

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்டோபர் 2 ஆம் தேதி, ஆர்எஸ்எஸ் பேரணிக்கு எதிராக சமூக நல்லிணக்க பேரணி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளும் இணைந்து இந்தப் பேரணியை முன்னெடுக்கின்றன. காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தோழமைக் கட்சிகளும் இதர ஜனநாயக சக்திகளும், இந்த சமூக நல்லிணக்க மனித சங்கிலிப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று திருமாவளவன் வேண்டுகோள் விடுத்தார்.

 சீமான் ஆதரவு

சீமான் ஆதரவு

இந்நிலையில் விசிக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் நடத்தும் சமூக நல்லிணக்க பேரணிக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. "அண்ணன் திருமாவளவனின் அழைப்பை ஏற்கிறோம், விடுதலைச் சிறுத்தைகளின் சமூக நல்லிணக்க பேரணியில் நாம் தமிழர் கட்சி பங்கேற்கும், அரசியல் முரண் தாண்டி, நோக்கத்தின் அடிப்படையில் நாங்களும் பங்கேற்கிறோம் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். திராவிடர் விடுதலைக் கழகமும் இந்தப் பேரணியில் பங்கேற்பதாக அறிவித்துள்ளது.

 முஸ்லீம் அமைப்புகள் ஆதரவு

முஸ்லீம் அமைப்புகள் ஆதரவு

சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதேபோல, இந்திய தேசிய லீக் கட்சியும் அந்த பேரணியில் பங்கேற்கும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் தடா ரஹீம் அறிவித்துள்ளார். இதுகுறித்து தடா ரஹீம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்றைய சூழலில் இந்த சமூக நல்லிணக்க பேரணி தமிழ் நாட்டிற்கு தேவையானது.

 காலத்தின் கட்டாயம்

காலத்தின் கட்டாயம்

ஆகையால் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை உட்பட அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெறும் பேரணியில் அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த பாபாவின் மாணவர்கள் இந்திய தேசிய லீக் கட்சி நிர்வாகிகள் உட்பட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். அமைதிப் பூங்காவாக உள்ள தமிழ்நாட்டில் பாசிச சக்திகளை விரட்டியடிக்க இந்த பேரணி காலத்தின் கட்டாயம் என்பதை ஒவ்வொரு முஸ்லீமும் ஒவ்வொரு ஜனநாயக சக்திகளும் உணர்ந்து இப்பேரணியில் கலந்து கொள்ள வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+