7 முறை கருக் கலைப்பு.. காம வெறியன் சீமான்! தமிழகத்தில் முளைத்த போஸ்டர்கள்! அட்டாக்கை ஆரம்பித்த திபெக
சென்னை: தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு தமிழக முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இந்த நிலையில் சீமானுக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டன போஸ்டர்கள் ஒட்டுப்பட்டுள்ளன. அதில் சினிமா நடிகையை சீரழித்து ஏழு முறை கருக்கலைப்பு செய்த காம வெறியன் சீமான் என கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பெரியார் குறித்து அவர் பேசியது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய சீமான்," அம்பேத்கரையும், பெரியாரையும் ஒப்பிடுவது ஓர் முரண். இருவரின் சிந்தனையும் ஒன்றா? இருவருக்கும் சிலை வைத்தால் ஒன்றாகி விடுமா? அம்பேத்கர் உலகின் தலைசிறந்த கல்வியாளர்.
நாம் தமிழர் சீமான்:
பெரியார் தனக்கு தோன்றுவதை எல்லாம் பேசுபவர். அம்பேத்கர், நான் யாருக்கும் அடிமையில்லை, எனக்கு யாரும் அடிமையில்லை என்றவர். ஆனால், பெரியார் சிந்தித்து, பேசியது, எழுதியது எல்லாம் தமிழ் பேரினத்திற்கு எதிரானது. நாங்கள் கூறுவது பொய் எனக் கூறுவது எப்படி? எதற்கு ஆதாரம் தேவை? நாங்கள்தான் ஆதாரத்தை வெளியிட்டு வருகிறோம். விடுதலை, பிறந்தநாள் செய்தி என வெளியிட்டது. அதில், இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் எதிரிகள். இவர்கள் நமக்கு எதிரானவர்கள் எனக் குறிப்பிட்டனர்.
பெரியார்:
நமக்கு என்று யாரைக் குறிக்கிறீர்கள்? சமதர்மம், சமத்துவம்தானே உங்கள் கோட்பாடு? நமக்குக் கீழானவர்கள் எதிரி என்றால் அவர்கள் எந்த இனம்? இதைவிடக் கொடிய தீண்டாமை சிந்தனை உண்டா? திமுகதான் பாதுகாப்பு எனக் கூறும் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களை எதிரிகள் எனக் கூறுவதை எப்படி ஏற்கிறீர்கள்? துளுக்கர்களுக்குக் கொடுக்கும் இடஒதுக்கீடு சாணியில் கால் வைப்பதற்குப் பதிலாக மலத்தில் கால் வைப்பதற்குச் சமம் எனக் கூறியதற்குச் சான்று கேட்கவில்லையே?
யார் திராவிடன்?:
தமிழ், தமிழர் அரசு எனப் பேசுபவர்கள் எல்லாம் பித்தலாட்டக் கருங்காலிகள் எனக் கூறியதற்குச் சான்று கேட்கவில்லையே? யார் திராவிடன்? தமிழன் இல்லாமல் யார் திராவிடன்? இஸ்லாமியர்களை வேறு நாட்டவர்கள் என்றார் பெரியார். இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் இந்த மண்ணின் பூர்வகுடி மக்கள். மொழி தான் அனைத்தையும் தருகிறது.
தமிழ் மொழி:
ஆனால், அந்த தமிழ் மொழியை விட்டு ஒழி என்றார் பெரியார். பெரியாரின் எழுத்துக்களை அரசுடமையாக்கினால் உண்மை தெரிய வரும். அதை வெளியிட்டுவிட்டு என்னிடம் சான்று கேளுங்கள், நான் தருகிறேன். 3 ஆயிரம் ஆண்டாக உள்ள தமிழ்த் தாய் உங்களைப் படிக்க வைத்தாரா எனக் கேட்கிறீர்கள்? 63 நாயன்மார்கள், ஆழ்வார்கள் குப்பையா? பக்தி இலக்கியத்தைக் குப்பை என்கிறீர்கள். பெரியாருக்கும் சமூக சீர்திருத்தத்திற்கும் என்ன சம்பந்தம்" என பேசி இருந்தார்.
சீமானுக்கு கண்டனம்:
இந்நிலையில் சீமான் மேலும் சில கருத்துக்களை கூறியிருந்த நிலையில் பெரியார் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. தொடர்ந்து சீமான் வீட்டை முற்றுகையிடச் சென்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சீமானுக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது. இந்த நிலையில் சீமானுக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
போஸ்டர்:
திராவிடர் பெரியார் கழகத்தின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில்," சினிமா நடிகையை சீரழித்து ஏழு முறை கருக்கலைப்பு செய்த காம வெறியன் சீமானே! தரம் தாழ்ந்த அரசியல் செய்யாதே! தமிழ்நாடு உன்னை மன்னிக்காது" என குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த போஸ்டரை சமூக வலைதளங்களிலும் பெரியார் ஆதரவாளர்கள் பரப்பி வருகின்றனர்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications