சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மேல ஏறி வாரோம்... நாம ஜெயிட்டோம் மாறா... நாம் தமிழர் கட்சி வெற்றியை டுவிட்டரில் கொண்டாடும் "தம்பிகள்"

Google Oneindia Tamil News

சென்னை: நகர்புற உள்ளாட்சி தேர்தலில் நாம்தமிழர் கட்சி வேட்பாளர்கள் கன்னியாகுமரி, தென்காசி உள்பட சில மாவட்ட பேரூராட்சி வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர். இதை அக்கட்சியினர் டுவிட்டரில் கொண்டாடி வருகின்றனர். இதை ‛‛மேல ஏறி வாரோம்... நாம ஜெயிட்டோம் மாறா...'' எனும் வார்த்தைகளை பயன்படுத்தி RiseOfNTK எனும் ஹேஷ்டேக் மூலம் அக்கட்சியினர் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான நகர்புற உள்ளாட்சி தேர்தலை பிப்ரவரி 19ல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. திமுக தனது கூட்டணி கட்சிகளுடனும், அதிமுக, பாஜக, நாம் தமிழர், பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் தனித்தும் தேர்தலில் களம் இறங்கின.

பிப்ரவரி 19ல் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் 61 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இந்த ஓட்டுகள் இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன.

குமரியில் கொடி நாட்டிய நாம் தமிழர்... நகர்புற உள்ளாட்சி தேர்தலில் முதல் வெற்றிகுமரியில் கொடி நாட்டிய நாம் தமிழர்... நகர்புற உள்ளாட்சி தேர்தலில் முதல் வெற்றி

நாம் தமிழர் வேட்பாளர்கள் வெற்றி

நாம் தமிழர் வேட்பாளர்கள் வெற்றி

இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு இன்று முதல் வெற்றியை கன்னியாகுமரி மாவட்டம் வழங்கியது. கப்பியறை பேரூராட்சி முதல் வார்டில் நாம் தமிழர் வேட்பாளர் ஆன்சி ஷோபா ராணி வெற்றி பெற்றார். இவரை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் கல்லுக்கூட்டம் பேரூராட்சி 8 வது வார்டில் கீதாமலர், 10வது வார்டில் ரூபன் பொன்னுமணி, மருங்கூர் பேரூராட்சி 10வது வார்டில் சகாய ஜெமிலா, இரணியல் பேரூராட்சி 1வது வார்டில் சுரேஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர். தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சி 14வது வார்டில் சுப்புலட்சுமியும் வாகை சூடினார்.

டுவிட்டரில் டிரெண்ட்

டுவிட்டரில் டிரெண்ட்


இவர்கள் தவிர தமிழகத்தில் மேலும் பல பேரூராட்சிகளில் நாம் தமிழர் வேட்பாளர்கள் வெற்றி பெற்று வருகின்றனர். இந்நிலையில் தான் நாம் தமிழரின் எழுச்சி என்பதை குறிக்கும் வகையில் RiseOfNTK எனும் ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. இதை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமானின் தம்பிகள் (கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள்) டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ஜெயிட்டோம் மாறா

ஜெயிட்டோம் மாறா

மேலும் ‛‛மேல ஏறி வாரோம்... நேர்மைக்கு கிடைத்த வெற்றி... நாம ஜெயிட்டோம் மாறா... புலிக்கு என்றைக்கும் தோல்வி இல்லடா... ''என்பன போன்ற வசனங்களை வெற்றி களப்பில் டுவிட்டர் உள்பட பல்வேறு சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். நகர்புற உள்ளாட்சியில் பேரூராட்சிகளில் குறிப்பாக தெற்கு மாவட்டங்களில் நாம் தமிழர் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதன்மூலம் தெற்கு மாவட்டங்களில் நாம் தமிழர் கட்சி வளர்ந்து வருவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

 தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி

தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி

நாம் தமிழர் கட்சியானது 2016 சட்டசபை தேர்தல், 2019 பாராளுமன்ற தேர்தல், 2021 சட்டசபை தேர்தல்களில் தனித்து போட்டியிட்டது. இந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு எந்த தொகுதியிலும் வெற்றி கிடைக்கவில்லை. இருப்பினும் தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பல இடங்களில் பரப்புரை செய்து வந்தார். கட்சியின் பிரமுகர்கள், தொண்டர்கள் களப்பணி செய்து வந்தனர். இந்த உழைப்பு தான் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து நகர்புற உள்ளாட்சி தேர்தல்களில் குறிப்பிட்ட பேரூராட்சிகளின் சில வார்டுகளில் நாம் தமிழர் வேட்பாளர்களை வெற்றி பெற செய்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

English summary
In urban local body election, Naam Tamilar Katchi candidates won some wards in urban local body elections. The party is celebrating this on Twitter, and trending with the hashtag of RiseOfNTK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X