என் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்திருக்கும்.. அதை கெடுத்தார்கள்.. ஓபிஎஸ் பரபரப்பு பேச்சு
சென்னை: என் மகனுக்கு அமைச்சர் பதவி கிடைப்பதை சிலர் தடுத்து நிறுத்தி சதி செய்தனர் என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மீது ஓபிஎஸ் பகீர் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
சென்னை வேப்பேரியில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு ஓபிஎஸ் அழைப்பு விடுத்தார். அதன் படி இன்றைய தினம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கூடியது.
இந்த கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர், எம்ஜிஆர், ஜெயலலிதாவுடன் பயணித்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை வகித்தார். முன்னதாக பண்ருட்டி ராமசந்திரன், ஓபிஎஸ், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகரன் உள்ளிட்டோர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மருது அழகுராஜ்
இதையடுத்து இந்த நிகழ்ச்சியில் மருது அழகுராஜ், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகரன் உள்ளிட்டோர் பேசினர். அப்போது நாம் ஒன்றிணைந்தால் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவைவிட்டே நீக்கிவிடலாம், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஓபிஎஸ் தலைமையில் அதிமுக மெகா கூட்டணியை அமைக்கும் என தெரிவித்திருந்தனர்.

பண்ருட்டி ராமசந்திரன்
இவர்களை தொடர்ந்து பண்ருட்டி ராமசந்திரன் பேசுகையில் அதிமுகவில் நிறைய இடைச்செருகல்கள் வந்துவிட்டன. விரைவில் அவர்களை அகற்றுவோம். எம்ஜிஆரிடம் ஒரு முறை செய்தியாளர்கள் சந்திப்பில் உங்களுடைய அரசியல் வாரிசு யார் என கேட்டனர். அதற்கு அவர் அப்படியெல்லாம் யாரும் இல்லை என்றார். உடனே அருகே இருந்த நான் ஏன் அப்படி சொல்கிறீர்கள், நம் தொண்டர்களே உங்களுடைய அரசியல் வாரிசு என்றேன். உடனே எம்ஜிஆர் பத்திரிகையாளர்களிடம் இந்த கருத்தை தான் கூறியதாக போட்டுக் கொள்ள சொன்னார்.

கட்சித் தொண்டர்கள்
எனவே கட்சித் தொண்டர்கள்தான் தலைவர்களை தேர்வு செய்ய வேண்டும். எடப்பாடி பழனிசாமி வழிநடத்திய அனைத்து தேர்தல்களிலு் தோல்வி. தமிழ்நாட்டில் செய்ய வேண்டியது நிறைய உள்ளது. அதற்கான ஆற்றல் உடையவர் ஓபிஎஸ். ஜெயலலிதா முதல்வராவார் , விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராவார் என கூறினேன். அது நடந்தது. அது போல் மேற்கண்டவாறு நான் சொன்னதும் நடக்கும் என்றார்.

கரகோஷம்
இவரை தொடர்ந்து பலத்த கரகோஷங்களுக்கிடையே ஓ பன்னீர் செல்வம் பேசுகையில், சோதனை காலகட்டத்தில் எனக்கு துணையாக இருக்கும் தொண்டர்களுக்கு நன்றி. நான் ஒன்றரை கோடி தொண்டர்களால் ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டேன். கடந்த ஜூன் 23 ஆம் தேதி நான் பொதுக் கூட்டத்திற்கு புறப்பட்டேன். அப்போது எனக்கு தெரிந்த ஒருவர் நான் செல்லும் வழியில் என்னை பிளாக் செய்ய ஏற்பாடு நடப்பதாகவும் நீங்கள் வேற வழியில் செல்லுங்கள் என்றார்.

பொதுக் குழு
அதன்படி நான் வேறு வழியில் வந்து பொதுக் குழு மேடையை அடைந்தேன். அப்போது என்னை வேறு ஒரு அறையில் உட்கார்ந்திருக்க சொன்னார்கள். எடப்பாடி பழனிசாமி வந்ததும் சேர்ந்து போகலாம் என்றார்கள். அதனால் நானும் உட்கார்ந்தேன். எடப்பாடி பழனிசாமி வந்தார். என்னை பார்த்தார், ஒரு ரெஸ்பான்ஸும் செய்யாமல் போய்விட்டார். அது போல் சட்டமேதை இருக்காரே அதாங்க சி.வி.சண்முகம் வாயை வைத்தாலே விளங்காது போல! 23 தீர்மானங்களும் செல்லாது செல்லாது என்றார். எடப்பாடி பழனிசாமி தனக்கு ஆதரவு இருப்பதாக கூறுகிறார். ஆனால் அவர் செல்லும் இடங்களில் அவருக்கு மாலை போட்டவர்களே மீண்டும் மீண்டும் போடுகிறார்கள். எம்ஜிஆரை எடப்பாடி பழனிசாமி நேரில் பார்த்ததுண்டா, அதிமுகவை கபளீகரம் செய்ய நினைத்தால் அது நடக்காது. தைரியம் இருந்தால் தனிக்கட்சியை நடத்தி பாருங்கள்.

தர்மயுத்தம்
தர்மயுத்தம் நடத்திய போது சிலர் என்னால் கஷ்டப்பட்டார்கள். என்னுடன் இருந்தவர்களுக்கு நான் எதையும் செய்யவில்லை. அதிமுக ஆட்சி கவிழ இருந்ததை நான்தான் காப்பாற்றினேன். இத்தனை ஆண்டுகளில் ஜெயலலிதா எனது பதவியை கீழே இறக்கியதே இல்லை. அவர் மீது எனக்கு நன்றியுணர்வு இருக்கிறது. அதனால் தினந்தோறும் நான் காலையில் கண் விழிப்பது ஜெயலலிதாவின் புகைப்படத்தில்தான். ஆனால் எடப்பாடி பழனிசாமி கொஞ்சமும் நன்றி இல்லாமல் ஜெயலலிதாவின் நிரந்தர பொதுச் செயலாளர் என்ற பதவியை நீக்கினார்.

ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தியதற்கு காரணம் பிரதமர் நரேந்திர மோடிதான். சசிகலாவிடம் என்னை பற்றி இவர்கள் தப்பு தப்பாக சொல்லியதால்தால் எங்களுக்கு சில பிரச்சினைகள் வந்தன. துணை முதல்வர் பதவி டம்மி பதவி என்பது எனக்கு தெரியும். எனக்கு இருக்கும் கவலைகள் எல்லாம் பதவி மீது அல்ல. கட்சியின் பெயரில் இருக்கும் ரூ 256 கோடிதான். அது ஒவ்வொரு ரூபாயும் தொண்டர்களின் சந்தா தொகை. அந்த பணத்தை யாராவது கையாடல் செய்திருந்தால் நடவடிக்கை பாயும்.

மன்னிப்பு கேட்க ரெடி
நான் முதல்வராகவோ துணை முதல்வராகவோ இருந்த போது ஏதாவது தவறு செய்திருந்தேன் என கூறினால் அதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன். அமைச்சரவை விரிவாக்கத்தின் போது எனது மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைப்பதாக இருந்தது. அதை சிலர் தடுத்து நிறுத்தி சதி வேலைகளை செய்தார்கள். இப்படி எத்தனை சதிகளை செய்துள்ளார்கள் என ஓபிஎஸ் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது ஓபிஎஸ் மகன் தேனி எம்பி ரவீந்திரநாத்திற்கு அமைச்சர் பதவி கிடைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கிடைக்கவில்லை. எனவே எடப்பாடி பழனிசாமிதான் இந்த பதவி கிடைக்க விடாமல் தடுத்து நிறுத்தியிருப்பார் என அப்போது பேசப்பட்டது. அதை இன்று ஓபிஎஸ் வெளிப்படையாக தெரிவித்துவிட்டார்.
-
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications