அதிமுகவில் சசிகலா சேர்க்கப்படுவாரா?.. வாக்கு எண்ணிக்கை நாளில் ஓ.பி.எஸ் சொன்ன அதிரடி பதில்!
அதிமுகவில் சசிகலா சேர்க்கப்படுவாரா என்பது குறித்த கேள்விக்கு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பதில் அளித்துள்ளார்.
Recommended Video
சென்னை: அதிமுகவில் சசிகலா சேர்க்கப்படுவாரா என்பது குறித்த கேள்விக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்துள்ளார்.
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது. விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 16706 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் 44960 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் புகழேந்தி 28254 வாக்குகள் பெற்றுள்ளார். நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 3033 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

வெற்றி எப்படி
இந்த நிலையில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தேர்தல் வெற்றி குறித்து சென்னையில் பேட்டி அளித்தார். அதில், இடைத்தேர்தலில் ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி.உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகதான் வெற்றிபெறும். உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் மாதத்திற்குள் நடக்கும்.

மக்கள் அளிக்கும் தீர்ப்பு
இது மக்கள் அளித்த தீர்ப்பு. மக்கள் அதிமுக ஆட்சி மீது நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். அதனால் எங்களுக்கு அவர்கள் வாக்களித்து இடைத்தேர்தலில் வெல்ல வைத்து இருக்கிறார்கள்.

திமுக எப்படி
திமுகவின் பொய்களை மக்கள் நம்பவில்லை. திமுகவை மக்கள் புறக்கணித்துவிட்டார்கள் என்பது இடைத்தேர்தல் முடிவு மூலம் தெரிகிறது. எங்களுக்கு ஆதரவு அளித்த கூட்டணி கட்சிகளுக்கு நன்றி.

அதிமுக சசிகலா
அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது குறித்து கட்சிதான் முடிவு எடுக்கும். டிடிவி தினகரன் குறித்தும் கட்சிதான் முடிவு செய்யும். கட்சியின் பொதுக்குழுதான் சசிகலா குறித்து முடிவு எடுக்கும், என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications