‛‛சார் தீர்ப்பு எப்படி வரும்’’.. கையெடுத்து கும்பிட்டு ஓ பன்னீர் செல்வம் சொன்ன பதில்! என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை நிலவும் நிலையில் எம்ஜிஆர் பிறந்தநாளில் ‛‛நான் சர்வாதிகாரி அல்ல. கழகம் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு'' என ஓ பன்னீர் செல்வம் கூறினார். இந்த வேளையில் அதிமுக பொதுக்குழுவை எதிர்த்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தீர்ப்பு எப்படி வரும் என்ற கேள்விக்கு ஓ பன்னீர் செல்வம் கையெடுத்து கும்பிட்டபடி பதில் அளித்தது தற்போது அரசியல் களத்தில் விவாதத்தை கிளப்பி உள்ளது.

தமிழ் திரையுலகம் மற்றும் அரசியல் என இரண்டு களத்திலும் ஜொலித்த பிரபலங்களில் முன்னணியில் இருப்பவர் எம்ஜிஆர். தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரான மறைந்த அண்ணாவுடன் நெருக்கமாக எம்ஜிஆர் இருந்தார். அதன்பிறகு திமுகவின் பொருளாளராக உயர்ந்தார். அண்ணா மறைவுக்கு பிறகு கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களுடன் முரண்பாடுகள் ஏற்பட்டதை தொடர்ந்து நீக்கம் செய்யப்பட்டார்.

இதையடுத்து அதிமுக எனும் புதிய கட்சியை எம்ஜிஆர் துவக்கினார். 1977ல் நடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் அமைச்சரானார். அதன்பிறகு தற்போது வரை திமுகவுக்கு டப் கொடுக்கும் கட்சியாக அதிமுக விளங்கி வருகிறது.

எம்ஜிஆர் பிறந்தநாள் விழா

எம்ஜிஆர் பிறந்தநாள் விழா

இந்நிலையில் தான் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் அதிமுக கட்சியினர், எம்ஜிஆர் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். பேனர்கள், போஸ்டர்கள் அடிக்கப்பட்டுள்ளன. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று காலை சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் கொடியேற்றி வைத்தார்.

ஓ பன்னீர் செல்வம் மரியாதை

ஓ பன்னீர் செல்வம் மரியாதை

அதேபோல் சென்னை அண்ணாசாலையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு ஓ பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த வேளையில் அவரை பத்திரிகையாளர்கள் சூழ்ந்தனர். இதையடுத்து காரில் இருந்தபடி ஓ பன்னீர் செல்வம் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

நான் சர்வாதிகாரி அல்ல

நான் சர்வாதிகாரி அல்ல

இந்த வேளையில் பத்திரிகையாளர் ஒருவர், ‛‛இன்று எம்ஜிஆர் பிறந்தநாள். அதிமுக கட்சி பிளவுப்பட்டுள்ளது. இந்த நாளில் நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? என ஓ பன்னீர் செல்வத்திடம் பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு ஓ பன்னீர் செல்வம், ‛‛நான் சர்வாதிகாரி அல்ல. கழகம் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு'' என்றார்.

தீர்ப்பு இறைவன் கையில்

தீர்ப்பு இறைவன் கையில்

இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு சாதகமாக வருமா? என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு, ஓ பன்னீர் செல்வம், ‛‛இறைவன் கையில் உள்ளது. இதை நேற்றே சொல்லிவிட்டேன்'' எனக்கூறி கையெடுத்து கும்பிட்டுவிட்டு புறப்பட்டு சென்றார். அதிமுக பொதுக்குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ பன்னீர் செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. விசாரணை முடிவடைந்த நிலையில் விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ளது. இந்நிலையில் தான் தீர்ப்பு என்பது இறைவன் கையில் உள்ளது என ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

ஆதரவாளர்கள் குழப்பம்

ஆதரவாளர்கள் குழப்பம்

இது தற்போது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. தீர்ப்பு சாதகமாக வரும் நம்பிக்கையில் அவர் இப்படி கூறுகிறாரா? இல்லாவிட்டால் எதிர்மறை எண்ணத்தால் இப்படி சொல்கிறாரா? என அவரது ஆதரவாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் தரப்பு தாக்கல் செய்த வழக்கின் நேரடி விசாரணை முடிவடைந்த நிலையில் தற்போது ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் எழுத்துப்பூர்வமாக வாதங்களை தாக்கல் செய்துள்ளனர். இதில் விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+