"என்னதான் நடக்கும் நடக்கட்டுமே.." திடீரென ஆதரவாளர்களுக்கு அழைப்பு.. பிப்.20ல் ஆலோசிக்கும் ஓபிஎஸ்!
வரும் 20ல் தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
சென்னை: சென்னையில் பிப்ரவரி. 20ம் தேதி பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்கள் சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர். இதில் ஓபிஎஸ் ஆதரவு மாவட்டச் செயலாளர்களும், நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. திடீரென ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து, பிப்.27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் ஆகிய அணிகளின் தரப்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அணி தரப்பில் முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், ஓபிஎஸ் அணி தரப்பில் செந்தில் முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் பாஜக தரப்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டால், தங்கள் அணியின் வேட்பாளரை வாபஸ் பெறுவோம் என்றும் தெரிவித்தார்.

அதிமுக வேட்பாளர்
இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம், அதிமுக பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்வு செய்ய உத்தரவிட்டது. இறுதியாக எடப்பாடி பழனிசாமி அணியின் தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, இரட்டை இலையில் போட்டியிடுகிறார். அதேபோல் ஓபிஎஸ் தரப்பில், வேட்பாளர் செந்தில் முருகனை வாபஸ் பெறுவதாகவும், இரட்டை இலைக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆலோசனை கூட்டம்
தொடர்ந்து இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்கி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், ஓபிஎஸ் அணி தரப்பில் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. இந்த நிலையில் சென்னை எழும்பூரில் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் பிப்ரவரி 20ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொள்கிறார்.

ஓபிஎஸ் அறிவிப்பு
இது தொடர்பாக ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல் ஆலோசகர் திரு. பண்ருட்டி ச. இராமச்சந்திரன் அவர்கள் தலைமையில், சென்னை, எழும்பூர், பாந்தியன் சாலையில் உள்ள அசோகா ஹோட்டலில் 20-02-2023 திங்கட்கிழமை மாலை 04.00 மணியளவில் நடைபெறவுள்ளது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரியாக ஒரு வாரம் முன்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், இரட்டை இலை சின்னம் வெற்றிபெற வாக்கு சேகரிப்போம் என்று ஓபிஎஸ் தரப்பு தெரிவித்திருந்தது. ஆனால் தற்போதுவரை பிரச்சார களத்திற்குச் செல்லவில்லை. இந்த நிலையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களுக்கு ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதேபோல், சரியாக இடைத்தேர்தலுக்கு ஒருவார காலம் முன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

அடுத்தக்கட்ட நடவடிக்கை
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டிய அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும், தங்களது அணியின் பலத்தை அதிகரிக்கும் விதமாகவும் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
விஜய்க்கு எதிராக களமிறங்கும் பாமக.. தேர்தலில் போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? எடப்பாடி அறிவிப்பு -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி" -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
பாஜக தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி.. மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன்? -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்?












Click it and Unblock the Notifications