உள்ளே மீட்டிங்.. வெளியே அதிமுக அலுவலகத்தில் கிழிக்கப்பட்ட ஓபிஎஸ் பேனர்.. ஆதரவாளர்கள் அதிர்ச்சி!
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் பொன்விழா கொண்டாட்டத்திற்காக வைக்கப்பட்டுள்ள பேனரில் ஓ.பன்னீர் செல்வத்தின் புகைப்படம் கிழிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒற்றைத் தலைமை விவகாரம் அதிமுகவில் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இபிஎஸ் - ஓபிஎஸ் இருவரின் பெயரும் இல்லாமல் முதல் முறையாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தலைமைக் கழக நிா்வாகிகள் கூட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு அதிமுக நிா்வாகிகள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் 2 மணி நேரத்திற்கு மேலாக அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இதனைத்தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகம் வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமிப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்றும், அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியது.
இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள பேனரில் ஓ. பன்னீர் செல்வத்தின் புகைப்படம் இபிஎஸ் ஆதரவாளர்களால் கிழிக்கப்பட்டது. ஏற்கனவே எடப்பாடி பழனிசாமியின் வருகையின் போது அதிமுக பொதுச்செயலாளரே என்றும், ஒற்றைத் தலைமையே என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. அதேபோல் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்திற்கு, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வரவில்லை என்று கூறப்படுகிறது.

ஓபிஎஸ்-க்கு எதிராக நிர்வாகிகள் நேரடியாக பேசி வந்த நிலையில், தற்போது அதிமுக தலைமை அலுவலகத்தில் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்திற்காக வைக்கப்பட்டிருந்த பேனரில், ஓபிஎஸ் புகைப்படம் கிழிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே இந்த சம்பவம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக தலைமை அலுவலகத்தில் கிழிக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பேனரை மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். உட்கட்சி பூசல் முற்றி, முக்கியத் தலைவராக செயல்பட்டு வந்தவரின் புகைப்படம் கிழிக்கப்படுவது பொதுமக்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
-
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
ஓட்டுக்கு ரூ.2000..? செய்தியாளர்களை தள்ளிவிட்ட தவெக நிர்வாகி.. காரில் எஸ்கேப் ஆன எம்.எல்.ஏ! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்?












Click it and Unblock the Notifications