சிறகடிக்க ஆசை: மனோஜ் சுய ரூபத்தை தெரிந்த விஜயா.. அண்ணாமலை கொடுத்த அதிர்ச்சி.. முத்து, மீனா பாவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2026, மே 14ஆம் தேதிக்கான எபிசோடில், மனோஜ் ஷோரூமில் இருந்த விஜயாவிற்கு ஏமாற்றம் கிடைக்கிறது. அதே நேரத்தில் இதுவரைக்கும் கோபத்தில் இருந்த அண்ணாமலை செய்த செயல் குடும்பத்தினரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில், மனோஜ் ஷோரூமிறிகு லீவ் விட்டுவிட்டு சந்தோஷ் மற்றும் ஜீவாவை வைத்து விஜயாவிற்காக சமைக்க வைத்து கொண்டு இருக்கிறார். அப்போது விஜயா எனக்கு குளிக்கணும் என்று சொல்ல, மனோஜ் நான் குக்கரில் வெந்நீர் வைத்து தரவா என்று கேட்கிறார். அதைக் கேட்டு விஜயாவுக்கு கடுப்பாகிறது.
ஆனாலும் இங்கிருந்து போனா முத்து மீனா நமக்காக வீட்டை மீட்ட எந்த நடவடிக்கை எடுக்க மாட்டாங்க என்று விஜயா அங்கேயே விடாப்பிடியாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் அண்ணாமலைக்கு ஒரு போன் வருகிறது. அதில் ஒரு ரியல் எஸ்டேட்காரர் ஒரு இடம் இருக்கிறது வாங்குறீங்களா என்று கேட்க, அதை கேட்டதும் அண்ணாமலை கோபமாக இருக்கிற வீடே போய்விடும் போல இருக்கு. இதுல நான் புதுசா இடம் எங்க வாங்குவது என்று கட் பண்ணி விடுகிறார்.
அண்ணாமலை வருத்தம்
பிறகு வீட்டை நினைத்து அண்ணாமலை தனியாக புலம்பி கொண்டிருக்கும் நேரத்தில் அவருக்கு மீனாவின் அம்மா ஆறுதல் சொல்கிறார். மறுபக்கத்தில் மீனாவும் முத்துவும் வந்து விஜயாவை வீட்டிற்கு கூப்பிடுகின்றனர். ஆனால் விஜயா வழக்கம் போல திமிராகவே பேசிக் கொண்டிருக்கிறார். என்னால உன் வீட்டுக்கு வர முடியாது என்று சொல்கிறார். ஆனாலும் முத்துவும் மீனாவும் சமாதானப்படுத்தி பார்க்கின்றனர்.
கடைசியில் முத்துவும் மீனாவும் அங்கிருந்து போய் அண்ணாமலையிடம் விஜயா பற்றி பேசுகின்றனர். ஆனால் அண்ணாமலை நான் போய் அவளை கூப்பிடவே மாட்டேன் அவளுக்காக பல விஷயங்களை தியாகம் பண்ணிட்டேன். ஆனால் இந்த முறை நான் அவளுக்காக இறங்கி வரமாட்டேன் என்று சொல்லி விடுகிறார். இதனால் அடுத்து என்ன பண்ணலாம் என்று முத்துவும் மீனாவும் யோசித்துக் கொண்டிருக்கின்றனர்.

விஜயாவின் திமிரு
அடுத்த கட்டத்தில் விஜயா மனோஜ் ஷோரூமில் காய்ச்சலில் உட்கார்ந்திருக்கிறார். அப்போது அவரைப் பார்க்க அண்ணாமலை அங்கே வருகிறார். மீனா முத்துவிடம் விஜயாவை போய் கூப்பிட மாட்டேன் என்று சொல்லிவிட்டு யாருக்கும் தெரியாமல் விஜயாவை பார்க்க வந்து நிற்கிறார். உடனே விஜயா எமோஷனலாக அண்ணாமலையிடம் பேசுகிறார். அப்போது அண்ணாமலை நீ எதுக்காக இங்க இருக்கிற? மீனா வீட்டுக்கு வா கொஞ்ச நாள் அங்க வந்து இரு என்று சொல்ல அந்த வீட்டில் வந்து என்னால இருக்க முடியாது என்று விஜயா சொல்லிக் கொண்டிருக்கும்போது முத்து வருகிறார்.
சிறகடிக்க ஆசை: விஜயா ஏற்படுத்திய கலகம்.. முத்துவுக்கு தெரிந்த விஷயம்! சிக்கும் மனோஜ்! இப்படி சொதப்புறாங்களே
பிறகு முத்துவை தொடர்ந்து மீனாவும் வருகிறார். இவர்கள் இருவரும் ஏற்கனவே வந்து இருப்பதை பார்த்து மீனாவும் அதிர்ச்சி அடைகிறார். ஆனாலும் தான் விஜயாவிற்கு வெளியே டீ குடித்தால் ஒத்துக்காது என்பதற்காக டீ கொண்டு வந்ததாக சொல்கிறார். பிறகு எல்லோரும் விஜயாவை மீனா வீட்டிற்கு கூப்பிடுகின்றனர்.

அதிர்ச்சியில் விஜயா
அதோடு விஜயாவிற்காக ஷோரூம்க்கு லீவ் விட்டு கொண்டு இருந்தால் பிசினஸ் மொத்தமாக போயிடும். ஏற்கனவே இந்த கடைக்காகத்தானே கடன் வாங்கி வச்சிருக்கிற.. இப்போ இந்த கடையும் போகப்போகுதா என்று அண்ணாமலை கோபப்பட்டு திருட்டுகிறார். அப்போது முத்து நீ அம்மாவை வீட்டுக்கு போக சொல்லி இருக்க வேண்டியது தானடா என்று மனோஜிடம் சொல்ல, அதற்கு மனோஜ் நான் அம்மாவை சொன்னா அவங்க வருத்தப்படுவாங்கன்னு தான் சொல்லல என்று சொன்னதும் மனோஜ் விஜயா முறைத்து பார்க்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications