மழை நல்லா இருந்துச்சா.. சென்னையில் இனி கொளுத்தப்போகும் வெயில்! வெதர்மேன் வார்னிங்!
சென்னை: சென்னை உட்பட தமிழகம் முழுவதும் இதமான காலநிலை நிலவி வருகிறது. எனவே கோடை வெயிலின் தாக்கம் குறைந்திருக்கிறது. இந்நிலையில், அடுத்து வரும் நாட்களில் சென்னை உட்பட வட தமிழகத்தில் வெயில் உச்சம் தொடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.
அக்னி நட்சத்திரம் சமீபத்தில்தான் தொடங்கியது. இருப்பினும், தமிழகம் அதை பார்த்தும் பார்க்காமல் அப்படியே கடந்து சென்றுக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக வெயிலின் தாக்கம் வெகுவாக குறைந்திருக்கிறது. எனவே சென்னை மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கின்றனர். ஆனால், இந்த நிம்மதி ரொம்ப நாட்களுக்கு நீடிக்காது என்று வெதர்மேன் தெரிவித்திருக்கிறார்.

சென்னைதான் டார்கெட்
இது குறித்து தனது x பக்கத்தில், "மே 17 அல்லது 18 முதல் மே 27 வரை, சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் விழுப்புரம் ஆகிய பகுதிகளில் மீண்டும் கடும் வெப்பம் வாட்டி வதைக்கவுள்ளது. ஆந்திர மாநிலத்திற்கு அருகிலுள்ள சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களுக்கு, இந்தக் காலகட்டமே மிகவும் வெப்பமானதாக அமையக்கூடும்.
மழையும் இருக்கு
கடந்த சில நாட்களாக KTCC (சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்கள்) பகுதியில் வெப்பநிலை 35-36°C ஆகப் பதிவாகி வருகிறது. வரும் வாரத்தில் இது சுமார் 41-42°C வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 107 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் வதைக்கும்.
அதேநேரம் என்னதான் சென்னையில் வெயில் வாட்டி வதைத்தாலும், தமிழகத்தின் உள் மாவட்டங்களில், மே 18 முதல் ஆங்காங்கே மீண்டும் மழை பெய்யத் தொடங்கும்.
தென்மேற்கு பருவமழை
தென்மேற்குப் பருவக்காற்று மே மாதத்தின் கடைசி வாரத்தில் கேரளாவை வந்தடையக்கூடும். ஜூன் மாதத்தின் முதல் பத்து நாட்களுக்கு மழைப்பொழிவு சாதகமாக இருக்கும் என்றும், அதன் பிறகு ஜூன் மாதத்தின் எஞ்சிய நாட்களில் இயல்பை விடக் குறைவான மழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. பருவமழை குறித்த கூடுதல் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வானிலை மையம் சொல்வது என்ன?
முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், 14-05-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் லேசான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
இன்று மழைக்கு வாய்ப்பு
15-05-2026: தென் தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.
அடுத்த ஒரு வாரத்திற்கான நிலைமை
16-05-2026: தென் தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். தேனி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.
17-05-2026: தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.
18-05-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடக்கு உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.
19-05-2026: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications