திறக்கப்படாத "பர்ஸ்".. ஜகா வாங்கிய ஓபிஎஸ்.. அப்படியே ஒதுங்கிக்கொண்ட சசிகலா.. அடுத்தடுத்த ட்விஸ்ட்?
சென்னை: அதிமுகவில் யார் பவர்புல் என்ற போட்டி நிலவி வரும் நிலையில்தான் ஓபிஎஸ் அணி நடந்த இருந்த முக்கியமான இரண்டு கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் வார வாரம் பல்வேறு திருப்பங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஜூலை 11ம் தேதி நடந்த திமுக பொதுக்குழு செல்லும். இந்த பொதுக்குழு செல்லாது என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம் என்று உயர் நீதிமன்ற 2 நீதிபதி அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது.
இதனால் அதிமுக மீண்டும் எடப்பாடி கட்டுப்பாட்டிற்கு சென்றுள்ளது. இந்த நிலையில்தான் எடப்பாடிக்கு எதிராக எப்படியாவது பவரை காட்ட வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் அணி தீவிரமாக முயன்று வருகிறது. இதற்காக சில பொதுக்கூட்டங்களை நடந்த ஓபிஎஸ் அணி திட்டமிட்டுள்ளது.

திட்டம்
குறிப்பாக கொங்கு மண்டலத்தில் கோவையில் பொதுக்கூட்டம் நடத்தி எடப்பாடி அண்-கோவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்த ஓபிஎஸ்-சசிகலா-தினகரன் திட்டமிட்டனர். அதற்கான செலவு தொகையை சசிகலா ஏற்பதாக இருந்தது. எடப்பாடியை ஆதரிக்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள், மா.செ.க்கள், ஒ.செ.க்கள் உள்ளிட்டவர்களில் 60 சதவீத நபர்களை கோவை மாநாட்டில் கொண்டு வந்து சேர்ப்பதாக ஓபிஎஸ் உறுதி கொடுத்திருந்தார்.

ஆதரவு
ஆனால், இப்படிப்பட்ட நேரத்தில்தான் அதிமுக பொதுக்குழு வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு காரணமாக ஓபிஎஸ் தரப்பிற்கு அணி தாவ வேண்டிய எம்எல்ஏக்கள் தாவவில்லை. அதோடு நாங்கள் இப்போது வர முடியாது. கட்சியில் யாருக்கு உரிமை உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கட்டும். அதுவரை நாங்கள் வர மாட்டோம். தீர்ப்பு ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாக வந்தால் கண்டிப்பாக அணி.மாறுகிறோம் . ஆனால் அதற்கு முன் அணி மாறி ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை, என்று அதிமுக எம்எல்ஏக்கள் தெரிவித்து வருகின்றனர்.

முடிவு என்ன?
எம்.எல்.ஏ.க்கள் தங்களின் முடிவை தெளிவாக தெரிவித்து விட்டதால், அவர்களில் சிறு துரும்பைக்கூட அசைக்க முடியாத நிலை ஓபிஎஸ்சுக்கு ஏற்பட்டது. அதேபோல மா.செ.க்கள் விசயத்திலும் அதே நிலைதான். அதனால், கோவை பொதுக்கூட்டத்திற்கான செலவு தொகையை நிறுத்தியதுடன், கூட்டத்தையும் ரத்து செய்ய சொல்லி விட்டார் சசிகலா. இதற்கு காரணம் என்ன ? எம்.எல்.ஏ.க்கள், மா.செ.க்கள். ஒ.செ.க்களை கூட்டத்தின் மேடையில் திரட்டிக் காட்டாமல், எவ்வளவுதான் பிரமாண்டமான கூட்டத்தை காட்டினாலும், அந்த கூட்டத்தை காசு கொடுத்து கூட்டியிருக்கிறார்கள் என்று விமர்சனம் செய்வார்கள்.

கூட்டம்
எம்எல்ஏக்கள் இல்லாமல் கூட்டம் கூடினால் அதில் பெரிய பலன் இருக்காது. எம்எல்ஏக்கள் வரவில்லை என்றால் மற்ற கட்சி நிர்வாகிகளும் வரயோசிப்பார்கள் . இதை வைத்து கட்சி தொண்டர்கள் யாருமே கூட்டத்திற்கு செல்லவில்லை என்றுதான் எடப்பாடி உள்ளிட்டவர்கள் விமர்சிப்பார்கள். அதனால் கூட்டத்தை ரத்து செய்யுங்கள் என ஓபிஎஸ்சுக்கு சசிகலா சொன்னதால் ரத்து செய்துவிட்டார் ஓபிஎஸ். ஆக. இதுதான் காரணம் என்கிறார்கள். இதற்கிடையே, அதே கூட்டத்தை காஞ்சிபுரத்தில் நடத்த திட்டமிட்டார் ஓபிஎஸ்.

காஞ்சிபுரம்
அதற்காக, காஞ்சி மாவட்டத்தின் மா.செ.வாக ஓபிஎஸ் நியமித்த தனது ஆதரவாளர் ஒருவரிடம் பொறுப்பைக் கொடுத்துள்ளார். அவரும், நான் தூள் கிளப்புகிறேன் என சொன்னதை நம்பி பொறுப்பை ஓபிஎஸ் கொடுத்திருக்கிறார். ஆனால், ஓபிஎஸ்சிடமிருந்து சில கோடிகளை அவர் எதிர்பார்க்க, அது கிடைக்காததால் கூட்டத்தை நடத்துவதில் இருந்து ஜகா வாங்கி விட்டாராம் அந்த பொறுப்பாளர். இதனால் காஞ்சி கூட்டமும் புஸ்வாணம் ஆகியுள்ளது என்கிறார்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications