நேரம் பார்த்து உச்ச நீதிமன்றம் போன ஓபிஎஸ்.. அதிமுக அலுவலக சாவியை எடப்பாடிக்கு தந்தது தவறு! அப்பீல்!
சென்னை: அதிமுக அலுவலக சாவியை எடப்பாடிக்கு கொடுத்ததற்கு எதிராக ஓபிஎஸ் மேல்முறையீடு செய்துள்ளார். உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு கடந்த ஜூலை 11ம் தேதி ஓ பன்னீர்செல்வம் எதிர்ப்பை மீறி நடந்தது. இந்த பொதுக்குழுவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஓ பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தனது தொண்டர்களுடன் சென்று அமர்ந்து இருந்தார்.
அவர் அதிமுக அலுவலகம் செல்லும் வழியிலும், அதிமுக அலுவலகத்திற்கு வெளியிலும் அதிமுக நிர்வாகிகள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அதிமுகவில் எடப்பாடி, ஓபிஎஸ் அணியினர் மாறி மாறி தாக்கிக்கொண்டனர்.
இந்த சண்டை கலவரமாக முடிந்ததாக அங்கு மிகப்பெரிய சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டது.

சட்ட ஒழுங்கு பிரச்சனை
இதையடுத்து வட்டாச்சியர் சார்பாக அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து ஓ பன்னீர்செல்வம் தரப்பும், எடப்பாடி தரப்பும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கில் கடந்த மாதம் 20ம் தேதி, அதிமுக அலுவலகத்தின் சீலை நீக்கி அதன் சாவிகளை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என் சதீஷ்குமார் உத்தரவிட்டார்.

உத்தரவு
உயர் நீதிமன்ற உத்தரவில், அதிமுக அலுவலகத்திற்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமிக்கு சாவி கொடுக்கப்பட்டாலும், அவர் 1 மாதத்திற்கு தொண்டர்களை அலுவலகத்திற்குள் அனுமதிக்க கூடாது. பொதுக்குழுவில் பெரும்பான்மை எடுக்கும் முடிவுகளை யாராக இருந்தாலும் மதிக்க வேண்டும். அமைதியை கெடுக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக ஒரு இடத்திற்கு சீல் வைக்க முடியாது. ஒரு எமர்ஜென்சி சூழ்நிலை இருந்தால் மட்டுமே கட்டிடத்திற்கு சீல் வைக்க முடியும்.

யார் கட்டுப்பாடு
அங்கு மோதல் நடப்பதற்கு 3 நாட்களுக்கு முன்னதாக அலுவலகம் எடப்பாடி கட்டுப்பாட்டில்தான் இருந்தது. அதனால் அவரிடம் அலுவலகம் கொடுக்கப்பட்டது, என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பில் கூறியது. இந்த நிலையில் அதிமுக அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள், பத்திரங்கள், ஜெயலலிதாவின் வெள்ளி வேல் ஆகியவை காணவில்லை என்று எடப்பாடி தரப்பினர் சார்பாக ஓபிஎஸ்ஸுக்கு எதிராக புகார் கொடுக்கப்பட்டது. ராயப்பேட்டை அலுவலகத்தில் இந்த புகார் அளிக்கப்பட்டது.
Recommended Video

மேல்முறையீடு
அதிமுக அலுவலகத்திற்கு 1 மாதம் தொண்டர்கள் செல்ல கூடாது . எடப்பாடி மற்றும் உயர் அதிகாரிகள் மட்டுமே செல்ல வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான கட்டுப்பாடு ஞாயிறு காலையோடு முடிவிற்கு வருகிறது. இந்த நிலையில் தொண்டர்களோடு ஆரவாரமாக எடப்பாடி அதிமுக அலுவலகத்திற்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுடன் அதிமுக அலுவலகம் செல்ல உள்ள நேரம் பார்த்து அதிமுக அலுவலக சாவியை எடப்பாடிக்கு கொடுத்ததற்கு எதிராக ஓபிஎஸ் மேல்முறையீடு செய்துள்ளார். உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
நீ வேணா சண்டைக்கு வா.. எடப்பாடியிடம் விடாமல் ஒரண்டை இழுக்கும் சி.விஜயபாஸ்கர்! ஓ.. இதுதான் ப்ளானா? -
அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா.. குதிரை பேரமா? ஐகோர்ட் கேட்ட கேள்வி! தீர்ப்பு ஒத்திவைப்பு -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்? -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன? -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
சினிமா துறைக்கு ரெட் கார்பெட்.. அதிமுக மாஜிக்களுடன் நோ சந்திப்பு.. விஜய்யின் செயலால் அப்செட்! -
4 தொகுதிகள் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி வழக்கு.. ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்! -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்! -
"முதல்வர் அண்ணன் எடப்பாடியார்.." பழக்க தோஷத்தில் “டங்க் ஸ்லிப்” ஆகி பின் சுதாரித்த மரகதம் குமரவேல்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே!












Click it and Unblock the Notifications