ஈபிஎஸ்ஸை ஓவர்டேக் செய்யும் ஓபிஎஸ்.. "பிரதமர் மோடி சொன்னாரே" - அதிமுக தொண்டர்களுக்கு வேண்டுகோள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவுபெறுவதையொட்டி, அதிமுகவினர் அவரவர் வீடுகளில் தேசியக்கொடியைப் பறக்க விடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

இல்லம் தோறும் தேசியக்கொடி எனும் முயற்சிக்கு நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அவரது வேண்டுகோளை ஏற்று மாநில அரசுகள், மக்களுக்கு அதுகுறித்து அறிவுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர்கள் அவரவர் வீடுகளில் மூவர்ணக் கொடியை பறக்க விட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

பிரதமர் மோடி அழைப்பு

பிரதமர் மோடி அழைப்பு

இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெறுவதைக் குறிக்கும் வகையில் 'சுதந்திர தின அமுதப் பெருவிழா' (அம்ரித் மஹோத்சவ்) என்ற பெயரில் பல்வேறு செயல்பாடுகளை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது. அதன்படி, வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தின விழா அன்று நாட்டு மக்கள் அனைவரது வீட்டிலும் தேசியக் கொடி பறக்கும் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஆகஸ்ட்13 முதல் 15-ஆம் தேதி வரை, ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி ஏற்ற நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

டிபியில் தேசியக் கொடி

டிபியில் தேசியக் கொடி

மேலும், சுதந்திரத் தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வரை, நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் சமூக ஊடக சுயவிவரப் புகைப்படங்களில் (DP), மூவர்ணக் கொடியை வைக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார். அந்தவகையில், ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தள கணக்குகளில் தேசியக் கொடியை புரொஃபைல் பிக்சராக மாற்றியுள்ளார் பிரதமர் மோடி.

அதிமுகவினருக்கு ஓபிஎஸ் அழைப்பு

அதிமுகவினருக்கு ஓபிஎஸ் அழைப்பு

இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவினர் அனைவரின் வீடுகளிலும் மூவர்ணக் கொடியை பறக்க விட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், "இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ள நிலையில், இந்திய நாட்டின் பெருமைக்கும், ஒற்றுமைக்கும், உரிமைக்கும், நல்வாழ்வுக்கும் அடையாளமான தேசியக் கொடி குறித்து அனைவரும் அறிந்துகொள்வது இன்றியமையாததாகும்.

வீடு தோறும் தேசியக்கொடி பறக்கவிடுங்கள்

வீடு தோறும் தேசியக்கொடி பறக்கவிடுங்கள்

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவுறுவதை முன்னிட்டு, மூவர்ணக் கொடியை இல்லங்களுக்கு கொண்டு வந்து பறக்கவிட மக்களை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி என்ற பிரச்சாரம் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே மூவர்ணக் கொடியை இந்த மாதம் 13-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை அவரவர் இல்லங்களில் ஏற்றவோ அல்லது காட்சிப்படுத்தவோ வேண்டும் என அதிமுக தொண்டர்களை கேட்டுக்கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

மோடிக்கு துணையாக

மோடிக்கு துணையாக

அதிமுகவில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் இடையே பெரும் மோதல் நிகழ்ந்து வரும் நிலையில், டெல்லியின் ஆதரவைப் பெறுவதில் யார் வெல்வது என்பதில் பெரும் போட்டியே நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று உடனடியாக, அதிமுகவினரின் வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம். பிரதமர் மோடிக்கு ஆதரவாக இருப்பதில் ஈபிஎஸ்ஸை ஓபிஎஸ் கடுமையாக ஓவர்டேக் செய்வதாக விமர்சிக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+