போட்டோவை காட்டி.. விஜய்க்கு பிரஷர் ஏற்றிய ஓபிஎஸ்.. ஸ்டன் ஆன தமிழக வெற்றிக் கழகம்.. என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓ பன்னீர்செல்வம் சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினை இரண்டு முறை சந்தித்தது பெரிய விவாதங்களை ஏற்படுத்தியது. தமிழக அரசியலை உலுக்கிய இந்த சம்பவம் தமிழக வெற்றிக் கழகம் கட்சியையும் ஸ்டன் ஆக்கியது.

ஓ பன்னீர்செல்வம் அதிமுக கட்சியின் கீழ் முதல்வராக இருந்தவர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் லெப்ட் ஹேண்டாக இருந்தவர். ஜெயலலிதா காலத்தில் அதிமுகவின் நம்பர் 2 இவர்தான்.

MK Stalin O Panneerselvam

இப்படிப்பட்ட நிலையில்தான் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஓ.பன்னீர்செல்வம் அணி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். தலைமைக் கழக நிர்வாகிகளுடனான கூட்டத்திற்கு பிறகு ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார். தற்போது எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தமிழ்நாடு வந்தபோது, அவரைச் சந்திக்க ஓ. பன்னீர்செல்வம் அனுமதி கேட்டிருந்தார். ஆனால், பிரதமரைச் சந்திக்க அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, பல வகையான யூகங்கள் கிளம்பின. இப்படிப்பட்ட நிலையில்தான் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஓ.பன்னீர்செல்வம் அணி அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்..

ஸ்டாலின் ஓ பன்னீர்செல்வம் சந்திப்பு

முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அதே நாள் காலையில் முதல்வர் ஸ்டாலினை (O Panneerselvam Stalin meets) சந்தித்து பேசினார். காலையில் நடைப்பயிற்சி சென்ற போது முதல்வர் ஸ்டாலினை ஓ பன்னீர்செல்வம் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்துள்ளார். அடுத்தக் கட்ட அரசியல் நகர்வு குறித்து ஓ பன்னீர் செல்வம் முக்கியமான முடிவை வெளியிடுவதாக கூறியிருந்த நிலையில் இந்த சந்திப்பு அரசியல் ரீதியாகவும் கவனம் பெற்றது. இதையடுத்து அதே நாள் ஆழ்வார்பேட்டையில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின் இல்லத்திற்கு நேரடியாகச் சென்றார் ஓபிஎஸ். அவரை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாசலுக்கே வந்து வரவேற்றார். ஸ்டாலின் ஓபிஎஸ் இடையேயான சந்திப்பு சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக நடந்தது.

MK Stalin O Panneerselvam

முதல்வர் ஸ்டாலின் உடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் சில முக்கிய கருத்துகளை தெரிவித்தார். கூட்டணியில் இருந்து வெளியேறியதாக அறிவித்த பிறகு பாஜக தரப்பு பேசினார்களா என்ற கேள்வி, "இல்லை" என்று ஒரே வார்த்தையில் மட்டும் ஓபிஎஸ் பதிலளித்தார். ஓ பன்னீர்செல்வம் முடிவால் அதிமுக கூட்டணிக்கு தென் மண்டலத்தில் வர வேண்டிய முக்குலத்தோர் வாக்குகள் கடுமையாக சரியும். அதேபோல் டெல்டா மாவட்டங்களிலும் முக்குலத்தோர் கடுமையாக அதிர்ச்சி அடையும் வாய்ப்புகள் உள்ளன.

விஜய் போட்டோ விவகாரம்

இப்படிப்பட்ட நிலையில்தான் ஸ்டாலினுடன் மேற்கொண்ட சந்திப்பின் புகைப்படத்தை காட்டி விஜய் தரப்பிற்கு ஓ பன்னீர்செல்வம் தரப்பு பிரஷர் போட்டு வருகிறதாம். ஓ பன்னீர்செல்வத்தை இழுக்க தமிழக வெற்றிக் கழகம் ஒரு பக்கம் முயன்று வருகிறது.

ஆனால் ஓ பன்னீர்செல்வம் தரப்போ.. திமுகவும், ஸ்டாலினும் என்னிடம் நெருக்கமாக இருக்கிறார்கள். தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு வர வேண்டும் என்றால்.. விஜய் எனக்கு பெரிய போஸ்டிங் கொடுக்க வேண்டும், பெரிய பொறுப்பு தர வேண்டும் என்று விஜய்க்கு ஓ பன்னீர்செல்வம் தரப்பு பிரஷர் போட்டு வருகிறதாம்.

நான் முன்னாள் முதல்வர், இப்போது ஸ்டாலினும் எனக்கு நெருக்கம்.. உங்கள் கட்சிக்கு வர ஓ பன்னீர்செல்வம் தரப்பிற்கு சில "சி" தர வேண்டும், அதோடு பெரிய பொறுப்பும் தர வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு விஜயிடம் பிரஷர் போட்டு வருகிறதாம். தமிழக அரசியலை உலுக்கிய இந்த சம்பவம் தமிழக வெற்றிக் கழகம் கட்சியையும் ஸ்டன் ஆக்கி உள்ளது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+