செல்லாது.. செல்லாது! நவாஸ் கனி வெற்றியை எதிர்த்து ஓபிஎஸ் வழக்கு! சொத்து விவரத்தை மறைச்சிட்டாராம்!
சென்னை: ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்ற இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் நவாஸ்கனி வெற்றியை எதிர்த்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் நவாஸ்கனி ஏணி சின்னத்தில் போட்டியிட்டார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் சார்பில் ஓ.பன்னீர்செல்வம் பாஜக கூட்டணி ஆதரவுடன் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டார். அதிமுக சார்பில் ஜெயபெருமாள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். நாம் தமிழர் கட்சி சார்பில் சந்திர பிரபா மைக் சின்னத்தில் போட்டியிட்டார்.

ராமநாதபுரத்தில் ஓபிஎஸ்: ஓ.பன்னீர்செல்வம் முதல் முறையாக லோக்சபா தேர்தலில் போட்டியிட்டதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. குறிப்பாக ஓ.பன்னீர்செல்வம் பெயரிலேயே 5 பேர் சுயேச்சையாக ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டனர். இது பரபரப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தி இருந்தது.
கடந்த ஜூன் 4 ஆம் தேதி லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் நவாஸ் கனி வெற்றி பெற்றார். சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய ஓ.பன்னீர்செல்வம் இரண்டாம் இடம் பிடித்தார். 1,66,785 வாக்குகள் வித்தியாசத்தில் ஓபிஎஸ்ஸை வீழ்த்தி வென்றார் நவாஸ் கனி.
ராமநாதபுரத்தில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்:
நவாஸ் கனி - 5,09,664
ஓ.பன்னீர் செல்வம் - 3,42,882
ஜெய பெருமாள் - 99,780
சந்திர பிரபா - 97,672
ஐகோர்ட்டில் ஓபிஎஸ் மனு: இந்நிலையில் நவாஸ் கனியின் வெற்றியை எதிர்த்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஐ.யூ.எம்.எல் சார்பில் போட்டியிட்ட நவாஸ் கனி தனது வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்திருப்பதாக கூறி, எனவே அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் வெற்றி குறித்து ஆட்சேபனை தெரிவிக்க வேண்டும் எனில் தேர்தல் முடிவுகள் வெளியாகி 45 நாட்களுக்குள் வழக்கு தொடர வேண்டும் என்ற விதி உள்ளது. அதன்படி, இன்று ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் நவாஸ் கனியின் வெற்றிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஓபிஎஸ் பேட்டி: சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்காக நேரில் வந்திருந்தார் ஓ.பன்னீர்செல்வம். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓபிஎஸ், "பிரிந்து கிடக்கும் அதிமுக இணைய வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் விரும்புகிறார்கள். அதிமுகவில் இணைத்துக் கொள்ளுங்கள் என்று நாங்கள் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்கவில்லை, அவராக கேட்டு அவரே பதில் சொல்கிறார். சசிகலா பயணம் வெற்றி பெற வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.
-
100 நாள் ஆச்சு.. இன்று மாலைக்குள் ஆகாஷ் உடலை வாங்குங்க.. பெற்றோருக்கு கெடு விதித்த ஐகோர்ட்! -
விவாகரத்து வழக்குகளில் பெயர்களை வெளியிடக் கூடாது - உயர்நீதிமன்ற கிளை போட்ட உத்தரவு! - -
3 மாதங்களாக மார்ச்சுவரியில் ஆகாஷ் உடல்..நீதிமன்ற உத்தரவால் 102வது நாளில் தகனம்! உறவினர்கள் அஞ்சலி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்












Click it and Unblock the Notifications