அடிமடியிலேயே கைவைத்துவிட்டார்.. எடப்பாடிக்கு எதிராக.. முக்கிய "பாயிண்டை" பிடித்த ஓபிஎஸ்.. ட்விஸ்ட்!
சென்னை: கட்சியின் அடிப்படை விதியையே எடப்பாடி மாற்றிவிட்டார். பொதுச்செயலாளர் தேர்தலில் அவரை தவிர வேறு யாரும் போட்டியிடாத வகையில் எடப்பாடி விதிகளை மாற்றி உள்ளார். கட்சியின் பை லாவில் எடப்பாடி கை வைத்துள்ளார், என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு பொதுக்குழு வழக்கில் வாதம் வைத்து உள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு வழக்கு நடந்து வருகிறது. அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி கூடியது. ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். இந்த பொதுக்குழு செல்லாது என்று ஓ பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் மனுதாக்கல் செய்துள்ளனர்.இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிர் மனு தொடுத்து உள்ளது. இந்த வழக்குதான் தற்போது தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
இந்த அதிமுக பொதுக்குழு வழக்கை 1 வாரத்தில் விசாரித்து முடிக்க நினைக்கிறோம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதாவது இந்த வாரமே விசாரணையை முடிக்க உள்ளதாக தெரிவித்து உள்ளனர். நாளை வரை மட்டுமே இந்த வாரம் விசாரணை நடக்கும் என்பதால் நாளையோடு வழக்கு விசாரணை முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓபிஎஸ் வாதம்
இந்த வழக்கில் ஓபிஎஸ் தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில், கட்சியின் அடிப்படை விதியையே எடப்பாடி மாற்றிவிட்டார். பொதுச்செயலாளர் தேர்தலில் அவரை தவிர வேறு யாரும் போட்டியிடாத வகையில் எடப்பாடி விதிகளை மாற்றி உள்ளார். கட்சியின் பை லாவில் எடப்பாடி கை வைத்துள்ளார். 10 வருடங்களுக்கு கட்சியில் இருந்தவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்று எடப்பாடி கொண்டு வந்துள்ளார். தான் மட்டுமே தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதற்காக எடப்பாடி இப்படி விதிகளை மாற்றி உள்ளார். ஜெயலலிதா மறைந்த பின்பே பொதுச்செயலாளரை தேர்வு செய்து இருக்க வேண்டும்.,

ஜெயலலிதா
ஜெயலலிதா மறைவிற்குப் பின் பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் நடத்தி இருந்தால் பிரச்சனையே இருந்து இருக்காது. ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவி தேவைப்பட்டிருக்காது. ஆனால் அப்போது செய்யாத எடப்பாடி இப்போது தனக்கு தோதான நேரத்தில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வந்துள்ளார். அந்த பதவியை மீண்டும் கொண்டு வர முயல்வது அதிமுகவின் சட்ட விதிகளுக்கு முரணானது. அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவிக்கு பதிலாகவே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கொண்டு வர தீர்மானத்தித்தோம்.

பொதுக்குழு
அதற்காக பொதுக்குழுவில் தீர்மானமும் கொண்டு வரப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை தேர்வு செய்ய தேர்தல் நடத்த வேண்டும் என்று முடிவு செய்தோம். பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடப்பது போல தேர்தல் நடக்கும் என்று முடிவு எடுத்தோம். அந்த உட்கட்சி தேர்தலை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது. தற்போதும் தேர்தல் ஆணைய ஆவணங்களில் அந்த விவரங்கள்தான் உள்ளன. ஆனால் அந்த பதவியை சட்டத்தை மீறி பொதுக்குழுவை கூட்டி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்கிவிட்டு இப்போது இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பதவியை உருவாக்கி உள்ளனர்.

ஒருங்கிணைப்பாளர்
கட்சியில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே தற்போது முடிவுகளை எடுக்க முடியும். தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்வது, கட்சி தலைமை அலுவலகத்தை கட்டுப்படுத்துவது, சொத்துக்களை கட்டுப்படுத்துவது போன்ற முடிவுகளை ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே எடுக்க முடியும். ஆனால் இந்த பதவியை நீக்கிவிட்டு எடப்பாடி பழனிசாமி கட்சிக்குள் இடைக்கால பொதுச்செயலர் ஆகி உள்ளார்.

குறுக்கு வழி
குறுக்கு வழியில் வந்து இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவில் அடிப்படை உறுப்பினர்களால் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஒரே பதவி பொதுச்செயலாளர் பதவி. அதற்கு என்று இருந்த விதிகளை எல்லாம் எடப்பாடி தூக்கி எறிந்து விட்டார். விதிகளை மாற்றிவிட்டு தற்போது இடைக்கால பொதுச்செயலாளர் என்று எடப்பாடி கூறுகிறார்கள். அதிமுக பொதுச்செயலாளர் பதவியை "குறுக்கு வழியில்" எடப்பாடி பழனிச்சாமி பெற முயல்கிறார். திமுகவிற்கு ஆதரவாக ஓபிஎஸ் செயல்பட்டார் என்பதற்கு ஏதாவது ஆதரவு இருக்கிறதா? இதை காரணம் காட்டி எடப்பாடியை நீக்கி உள்ளனர். அதற்கு என்ன ஆதாரம் உள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உட்கட்சி தேர்தலை அங்கீகரித்து உள்ளது, என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு வாதம் வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications