இன்று சொந்த ஊர் செல்கிறார் ஓ.பன்னீர்செல்வம்! மதுரை டூ பெரியகுளம்! வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு!
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் கிடைத்த தீர்ப்பால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் இன்று அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்துக்கு செல்கிறார்.
Recommended Video
சென்னையிலிருந்து மதுரை வரை விமானம் மூலம் செல்லும் அவர் அங்கிருந்து கார் மூலம் பெரியகுளம் செல்லவுள்ளார்.
இந்நிலையில் மதுரையிலிருந்து பெரியகுளம் வரை ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு கொடுக்க அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

அதிமுக பொதுக்குழு
அதிமுக பொதுக்குழு வழக்கில் தனக்கு சாதகமான தீர்ப்பு வந்ததை அடுத்து ஓ.பன்னீர்செல்வம் மிகுந்த உற்சாகமாக காணப்படுகிறார். தன்னை சந்திக்க வரும் ஆதரவாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரிடமும் மகிழ்ச்சி பொங்க பேசி அவர்களை அனுப்பி வைக்கிறார். இந்நிலையில் இன்று அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளம் புறப்பட்டுச் செல்லும் அவர் அங்கு மூன்று நாட்கள் இருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பண்ணை வீடு
மூன்று நாட்களுமே பெரியகுளம் அருகே உள்ள தனது பண்ணை வீட்டில் தீவிர டிஸ்கஷன் நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே மதுரையிலிருந்து பெரியகுளம் வரை மிக உற்சாக வரவேற்பு கொடுக்க அவரது ஆதரவாளர்கள் ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி தரப்பை கடுப்பேற்றும் வகையில் இதற்கான ஏற்பாடுகளை ரவீந்திரநாத்தும், ஜெயபிரதீப்பும் முன் நின்று கவனித்திருக்கின்றனர்.

நேற்று ஆலோசனை
இதனிடையே நேற்று வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட முக்கிய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமியின் அடுத்தக் கட்ட நகர்வு என்னவாக இருக்கும், அதை எப்படி முறியடிப்பது என்பது பற்றி மிகத் தீவிரமாக ஆலோசித்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமி அடுத்ததாக என்னவெல்லாம் செய்வார் என்பதை அவருக்கு விளக்கிக் கூறிய வழக்கறிஞர் டீம், அதையும் ஒரு கை பார்த்துவிடலாம் என நம்பிக்கை அளித்திருக்கிறது.

குலதெய்வம் கோவில்
நாம் ஏற்கனவே கூறியிருந்ததை போல் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே செண்பகத்தோப்பில் உள்ள தனது குலத் தெய்வக் கோவிலான வனப்பேச்சியம்மன் கோவிலுக்கும் ஓ.பி.எஸ். செல்லவிருக்கிறார். தென் மாவட்டங்களை சேர்ந்த அவரது ஆதரவாளர்கள் பலரும் பெரியகுளம் சென்று ஓ.பன்னீர்செல்வத்தை சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications