ஏமாத்திட்டாங்க.. இனி ‘அவங்களை’ நம்பி பிரயோஜனம் இல்லை! தனியாக களமிறங்கும் ஓபிஎஸ்! அப்போ ‘ஒற்றுமை’?
சென்னை : அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் தன்னை ஏமாற்றி விட்டதாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தீவீரமாக போராடி வரும் நிலையில், சசிகலா சந்திப்பு தள்ளிப்போய்க் கொண்டே இருப்பதால் , தானே தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக ஓ.பன்னீர்செல்வமே கூறியிருக்கிறார்.
'என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே' என்ற ரீதியில் கடந்த 3 மாத காலமாக அதிமுகவில் நடந்து வரும் அதிகார மோதல்களால் அடிமட்ட அதிமுக தொண்டர்கள் மிக்க மன உளைச்சலில் இருப்பதை பார்க்க முடிகிறது. காரணம் ஒரு எதிர்கட்சியாகக் கூட அரசியலில் களமாட முடியவில்லை என்பது தான்.
இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்க்கட்சி போலவே செயல்பட்டு வருகிறார். குறிப்பாக அமைச்சர்கள் மீதான விமர்சனம், ஊழல் குற்றச்சாட்டுகள் என நாளுக்கு நாள் திமுகவுக்கு எதிரான அவரது தாக்குதல்கள் அதிகரித்து வருவது திமுக என்ற மட்டுமல்ல அதிமுகவினரையே கடுகடுப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

அதிமுகவில் மோதல்
இதற்கெல்லாம் காரணம் இரு தலைவர்களிடையேயான அதிகார மோதல் தான் காரணம். இப்படி நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வரும் நிலையில், பிரச்சினை தற்போதைக்கு முடிவடைவதாகத் தெரியவில்லை. காரணம் ஓ.பன்னீர்செல்வம் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ள நிலையில் அடுத்தடுத்து இந்த விவகாரம் சட்டப் போராட்டங்களை தொடரும் என்றே கூறப்படுகிறது அதே நேரத்தில் கட்சி நிரந்தர பொதுச் செயலாளராக பதவி ஏற்க எடப்பாடி பழனிச்சாமியின் தீவிரம் காட்டி வருகிறார்.

எடப்பாடி பழனிச்சாமி
ஒருபுறம் சட்டப் போராட்டம் மறுபுறம் தொண்டர்களுடன் சந்திப்பு என எடப்பாடி பழனிச்சாமியின் அணுகுதல் சற்று வித்தியாசமாகவே இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் போல ஆவேசமாக பேசாமல் மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே செய்தியாளர்களை சந்திக்கிறார். குறிப்பாக தொண்டர்களை சந்திப்பதில் தான் அவருக்கு ஆர்வம் அதிகமாக இருக்கிறது இதற்காகவே மூத்த முன்னாள் அமைச்சர்களுக்கு உத்தரவிடப்பட்டு தமிழகம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

தொண்டர்களே அஸ்திரம்
திண்டுக்கல், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி என பல மாவட்டங்களில் இதுவரை சுற்றுப்பயணத்தை முடித்துள்ள எடப்பாடி பழனிச்சாமி அதனை தொடரவும் திட்டமிட்டு இருக்கிறார் காரணம் தொண்டர்களை சந்திப்பது தனது இமேஜை உயர்த்திக் கொள்ள உதவும் என்பதோடு எதிர் அணியினரை அச்சமடைய செய்யும் ஒரு அஸ்திரமாக நினைக்கிறார். ஏற்கனவே சசிகலா தமிழக முழுவதும் புரட்சி பயணம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் அது அவ்வளவுக்காக வெளியே தெரியவில்லை காரணம் அவர் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாரா அல்லது ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாரா என்பது குறித்து அவரது ஆதரவாளர்களுக்கே தெரியவில்லை.

சசிகலாவுடன் சந்திப்பு
அந்த அளவுக்கு தான் இருக்கிறது சசிகலாவின் சுற்றுப்பயணம். இதனிடையே எடப்பாடி பழனிச்சாமியை வீழ்த்துவதற்கு ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுடன் சேர்ந்து செயல்படுவார் என்ற திட்டமும் கை கூடுவது போல தெரியவில்லை. இன்று போய் நாளை என்ற அடிப்படையிலேயே அவர்களது சந்திப்பு குறித்த செய்திகள் இருக்கிறது. இதன் காரணமாக ஓ.பன்னீர்செல்வம் தனியே சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அதனை அவரே உறுதிப்படுத்தி இருக்கிறார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் இருக்கும் எனக் கூறியிருந்தார். இதன் காரணமாக சசிகலா பன்னீர்செல்வம் சந்திப்பு தள்ளிப் போகலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே ஓபிஎஸ் தரப்பு தன்னை கட்சியிலிருந்து வெளியேற்றியதால் கடும் அதிருப்தியில் இருக்கும் ஓ பன்னீர்செல்வத்தை தற்போது சசிகலா தரப்பும் சந்திக்காமல் தவிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications