ஓ பன்னீர் செல்வம் எடுத்த திடீர் முடிவு.. 15 ஆம் தேதி கூட்டம் ஒத்தி வைப்பு.. அப்போ அது கன்பார்ம் தானா?
சென்னை: ஓ பன்னீர்செல்வம் ஆலோசனைக்கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 15 ஆம் தேதி நடைபெற இருந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. வரும் 15 ஆம் தேதி தனது அரசியலில் அடுத்த கட்ட முடிவை எடுக்க இருப்பதாக ஓ பன்னீர்செல்வம் அறிவித்து இருந்த நிலையில், வரும் 24 ஆம் தேதி எம்ஜிஆர் பிறந்தநாள் அன்று அந்த முடிவை அறிவிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. கட்சியை பலப்படுத்துவது, மெகா கூட்டணியை உருவாக்குவது போன்ற வேளைகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

அந்த வகையில் ஓ பன்னீர் செல்வமும் வரும் 15 ஆம் தேதி முக்கிய முடிவை எடுக்கப் போவதாக கூறியிருந்தார். வரும் 15 ஆம் தேதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என கூறியிருந்தார். இந்த நிலையில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதில் வரும் 24 ஆம் தேதி எம்ஜிஆர் பிறந்தநாள் அன்று நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் எனவும், அப்போது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு குறித்த முடிவை ஓ பன்னீர்செல்வம் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓ பன்னீர் செல்வம் திடீரென டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்ததும், பிறகு நயினார் நாகேந்திரன் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்ததும் ஓ பன்னீர் செல்வத்தை என்.டி.ஏவில் சேர்ப்பதற்கான முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
அதிமுக பாஜக கூட்டணியை வலுப்படுத்தும் நோக்கத்தில் ஓ பன்னீர் செல்வத்தை என்.டி.ஏ கூட்டணியில் சேர்க்க பாஜக முயற்சி மேற்கொண்டு வருகிறது. தற்போது இன்று நயினார் நாகேந்திரன் மீண்டும் டெல்லி சென்றிருப்பதால் ஓபிஎஸ் இந்த நிர்வாகிகள் கூட்டத்தை ஒத்தி வைத்துள்ளதாகவும், என்.டி.ஏ கூட்டணி சேர வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
ரெண்டு பேருமே பெரிய புள்ளி.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்! ரெடியான சண்முகம்! எடப்பாடிக்கு சிக்கல்! -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா?












Click it and Unblock the Notifications