அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்த தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்துள்ளார். ஓபிஎஸ் வழக்கு இன்று விசாரிக்கப்பட உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் வரும் 26-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதனை எதிர்த்து அதிமுக ஓபிஎஸ் அணியின் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்க, ஜேசிடி பிரபாகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு ஞாயிற்றுக்கிழமையான நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தலாம்; ஆனால் தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்கப்படுகிறது என உத்தரவிட்டது. அத்துடன் அதிமுகவின் ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான வழக்கு விசாரணை வரும் 22-ந் தேதி முதல் விசாரிக்கப்பட்டு மார்ச் 24-ல் தீர்ப்பு வழங்கப்படும் எனவும் உத்தரவிடப்பட்டது.

இதனிடையே அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தம்மை நீக்கியதை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவையும் விசாரிக்க வலியுறுத்தப்பட்டது. இதனை ஏற்று மார்ச் 23-ந் தேதி சசிகலா வழக்கு விசாரணைக்கு வருகிறது.
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்த தடை விதிக்க கோரி ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்துள்ளார். ஓபிஎஸ் சார்பாக மனோஜ் பாண்டியன் தொடர்ந்த இந்த வழக்கு அவசர வழக்காக இன்று விசாரிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications