விஜய்க்கு போனை போட்ட ஓபிஎஸ்.. 20 நிமிடம் நடந்த அந்த உரையாடல்? என்னங்க சொல்றீங்க? முக்கிய முடிவு
சென்னை: தவெக உடன் கூட்டணி வைப்பது தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் விஜயுடன் போனில் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலில் பிடி கொடுக்காமல் இருந்த விஜய் பின்னர் ஓ பன்னீர்செல்வம் உடன் போனில் நீண்ட நேரம் பேசியதாக கூறப்படுகிறது.
அமமுகவின் டிடிவி தினகரனைப் போலவே, ஓ. பன்னீர்செல்வம் தரப்பும், 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) முதலமைச்சர் வேட்பாளராக அதிமுகவின் எடப்பாடி கே. பழனிசாமியை ஏற்காது என அறிவித்துள்ளது. ஓபிஎஸ் தரப்பு இப்போது திமுக அல்லது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) கூட்டணி குறித்து ஆலோசிக்கிறது. ஏற்கனவே டிடிவி தினகரன் விஜய்யுடன் நெருக்கம் காட்டுகிறார்.

சமீபத்தில் சென்னை வேப்பேரியில் நடைபெற்ற ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான மாவட்ட செயலாளர் கூட்டத்தில் யாருடன் கூட்டணி வைக்க விரும்புகிறீர் என மாவட்ட செயலாளர்களிடம் ஓ பன்னீர்செல்வம் சார்பாக கருத்து கேட்கப்பட்டது. இதில் இரண்டு ஆப்ஷன் கொடுத்து கருத்து கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றத் தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் (AIADMTUMK) நிர்வாகிகள் உடன் நேற்று ஓ பன்னீர்செல்வம் சந்திப்பு நடத்தினார். இந்த சந்திப்பில் பல விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டன. அதன்படி அதிமுகவில் மீண்டும் இணையலாமா?அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாமா? அல்லது தவெக உடன் கூட்டணி வைக்கலாமா? திமுக உடன் கூட்டணி வைக்கலாமா? என்று ஓ பன்னீர்செல்வம் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.
இதில் எடப்பாடி பழனிச்சாமியின் அதிமுக உடன் இனி இணைய வேண்டாம்.. அவர் இறங்கி வருவது போல தெரியவில்லை. இனி அதிமுக உடன் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை .. இபிஎஸ் உடன் இனி இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ஓபிஎஸ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
ஆப்ஷன் கொடுத்து கேட்ட ஓபிஎஸ்
இன்னொரு பக்கம் மாவட்ட செயலாளர் கூட்டத்தில் யாருடன் கூட்டணி வைக்க விரும்புகிறீர் என மாவட்ட செயலாளர்களிடம் ஓ பன்னீர்செல்வம் சார்பாக கருத்து கேட்கப்பட்டது. இதில் இரண்டு ஆப்ஷன் கொடுத்து கருத்து கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. Option a தவெக Option b திமுக என்று இரண்டு ஆப்ஷன் கொடுத்து கேள்வி கேட்கப்பட்டது.
இரு ஆப்ஷன்களை கொடுத்து மாவட்ட செயலாளர்களின் கருத்துக்கள் பெறப்பட்டது. இதில் பெரும்பாலான நிர்வாகிகள் தவெகவுடன் கூட்டணி வைக்கவே அதிகளவில் விருப்பம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
போனை போட்ட ஓபிஎஸ்
இந்த நிலையில்தான் தவெக உடன் கூட்டணி வைப்பது தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் விஜயுடன் போனில் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலில் பிடி கொடுக்காமல் இருந்த விஜய் பின்னர் ஓ பன்னீர்செல்வம் உடன் போனில் நீண்ட நேரம் பேசியதாக கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழக வட்டாரம் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் இருவருடனும் தேர்தல் கூட்டணி குறித்துப் பேசி வருவதை உறுதிப்படுத்தியது. "டிடிவியுடன் பேசி வருகிறோம்.. ஓ பன்னீர்செல்வத்திடம் பேசி உள்ளோம்.. விரைவில் முக்கிய முடிவுகளை அறிவிப்போம்" என்று கூறி உள்ளனர். விஜய் - ஓ பன்னீர்செல்வம் இடையிலான பேச்சுவார்த்தை 20 நிமிடம் நீடித்ததாக கூறப்படுகிறது.
விஜய்க்கு ஓபிஎஸ் ஓகே
ஓபிஎஸ், டிடிவி இருவரும் NDA-வில் இணைய மறுத்தால், தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்படும். இவர்களின் வெளியேற்றம், ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவை விட்டு விலகிய முக்குலத்தோர் சமூகத்தை மேலும் அந்நியப்படுத்தும். TVK-வில் இணைந்தால், தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் அந்த சமூக ஆதரவைப் பெற விஜய்க்கு உத்வேகம் கிடைக்கும். அதிமுகவிற்கு பின்னடைவு ஏற்படும்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றத் தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் (AIADMTUMK) பெரும்பாலான நிர்வாகிகள், அதிமுக ஒருங்கிணைப்பு முயற்சிகளை நிராகரித்த எடப்பாடி கே. பழனிசாமிக்கு பாடம் புகட்ட நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) இணையத் தயாராக இருப்பதாக ஓ பன்னீர்செல்வத்திடம் தெரிவித்தாக கூறப்படுகிறது. ஒரு சிறு பகுதியினர் தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா!












Click it and Unblock the Notifications