சமாளிக்கவே முடியாது.. தள்ளி வைக்க வேண்டும்! திடீரென குரல் கொடுத்த ஓபிஎஸ்.. இது தான் காரணமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் 10ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்படிருக்கும் நிலையில், கடும் வெப்ப அலையினைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பதை ஜூன் மூன்றாவது வாரத்திற்கு ஒத்தி வைக்க தி.மு.க. அரசை தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் வழக்கமாக ஜூன் 1ஆம் தேதி புதிய கல்வியாண்டையொட்டி பள்ளிகள் திறக்கப்படும்.இந்த ஆண்டு மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை காரணமாக பள்ளிகள் திறப்பு ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

O Panneerselvam heat schools opening Tamil Nadu Govt

இந்நிலையில் கோடை மழைக்குப் பிறகு தமிழகத்தில் 28ஆம் தேதியிலிருந்து வெயில் மீண்டும் அதிகரித்து வருகிறது. பல இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் பதிவாகி வருவதால் மக்கள் கடும் அவதியடைந்த நிலையில் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது.

பள்ளிகள் திறப்பு: இதனையடுத்து தமிழகத்தில் பள்ளிகள் இந்தாண்டு 6ஆம் தேதிக்கு பதிலாக ஜூன் பத்தாம் தேதி திறக்கப்படும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. ஆனாலும் வெப்ப அலை வீசி வரும் நிலையில், பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கடும் வெப்ப அலையினைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பதை ஜூன் மூன்றாவது வாரத்திற்கு ஒத்தி வைக்க தி.மு.க. அரசை தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம்: இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தமிழ்நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து அலை வீசி வருவதன் காரணமாக, மக்கள் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. அரசாங்கமே வெளியில் செல்ல வேண்டாம் என்று மக்களை அறிவுறுத்தும் அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகரித்து இருக்கிறது. பொதுவாக, வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை தாண்டும்போது அதனை வெப்பஅலை என்று சொல்வார்கள். இந்த அளவையும் தாண்டி, தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் வெப்பஅலை வீசிக் கொண்டிருக்கிறது.

அதிக வெப்பம்: நேற்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், மதுரை, திருச்சி, கடலூர், பரங்கிப்பேட்டை, திருத்தணி, ஈரோடு, தூத்துக்குடி, நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் வெப்ப அலை 38 டிகிரி செல்சியஸ்க்கு மேலாக வீசி இருக்கிறது. சென்னையில் மட்டும் 41.6 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்ப அலை வீசி இருக்கிறது. அதாவது, 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கு மேல் வெயிலின் தாக்கம் இருந்து இருக்கிறது. ஓரிரு இடங்களில் மழைப் பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்தாலும், பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

பிரச்சினைகள்: கடும் வெயிலின் தாக்கம் என்பது நீரிழப்பு, சோர்வு, மயக்கம், தலைச்சுற்றல், தலைவலி, வாந்தி, தசைப்பிடிப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மற்றும் மத்திய கல்வி வாரியத்தின்கீழ் செயல்படும் பள்ளிகள் அனைத்தும் ஜூன் 6-ஆம் தேதிக்குப் பதிலாக ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், அனைத்து வகைப் பள்ளிகளும் 10-06-2024 அன்று திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

தள்ளி வைக்க வேண்டும்: தற்போது தமிழ்நாடு முழுவதும் நிலவும் வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால், தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மற்றும் மத்திய கல்வி வாரியத்தின்கீழ் செயல்படும் பள்ளிகள் அனைத்தும் ஜூன் 10-ஆம் தேதிக்குப் பதிலாக ஜூன் மூன்றாவது வாரத்தில் திறக்க ஆவன செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்." என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+