என்னை அதிமுகவில் இருந்து நீக்க என்ன காரணம்? இத சொல்லுங்க அரசியலை விட்டே போறேன்.. ஓ பன்னீர் செல்வம்
சென்னை: இந்த இயக்கத்திற்கு எவ்வளவு சோதனை வந்தாலும் தாங்கி கொண்டு பொறுமையாக இருந்த பன்னீர் செல்வத்தை, அரசியலில் இருந்தே துறவறம் போக செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கிறீர்கள். கட்சி வேஷ்டி கட்டக்கூடாது. கொடி கட்டக்கூடாது என்று நீதிமன்றத்திற்கு செல்கிறீர்கள். இதெல்லாம் யார் செய்வார்கள்..
என்னை அதிமுகவில் இருந்து நீக்க காரணம் என்ன? இத சொல்லுங்க அரசியலை விட்டே விலகுறேன் என்று ஓ பன்னீர் செல்வம் கூறியுள்ளார். தேனி மாவட்டம் போடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓ பன்னீர் செல்வம் கூறியதாவது:-

ஜெயலலிதா இறக்கும் வரை
தொண்டர்களுக்காக எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கமே அதிமுக. ஜெயலலிதாவும் தான் இறக்கும் வரை மக்களுக்காக உழைத்து தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார். மத்திய அரசு நிதியை கூட எதிர்பார்க்காமல் மாநில அரசின் நிதியைக் கொண்டே மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தினார்.
பல்வேறு திட்டங்களை மக்களுக்கு செய்தார். தாலிக்கு தங்கம், பெண்களுக்கு பல்வேறு நல்ல பல திட்டங்களை செயல்படுத்தினார். இன்று வரை மக்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்து இருக்கிறார் ஜெயலலிதா. கடந்த 2001 ஆம் ஆண்டு கட்சிக்கு சோதனை காலம் ஏற்பட்ட நேரத்தில் என்னை முதல்வராக நியமித்தார்.
எடப்பாடிக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன்
6 மாத காலம் அவரது வழியில் அடிபிரளாமல் செயல்பட்டு வந்தேன். பின்னர் ஆண்டிபட்டி தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டபோது, எனது பதவியை ராஜினாமா செய்தேன். மீண்டும் கடந்த 2011 ஆம் ஆண்டு கட்சிக்கு சோதனை ஏற்பட்டபோது என்னையே அவர் முதல்வராக அமர வைத்தார். பின்னர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்வர் பதவியை ஏற்க மறுத்தேன். எனினும் என்னை கட்டாயப்படுத்தி 3 வது முறையாக முதல்வர் பதவியை ஏற்க வைத்தனர்.
அதிமுகவில் இரட்டை தலைமையை கொண்டு வந்ததே எடப்பாடி பழனிசாமி தான். எடப்பாடி பழனிசாமிக்கு நான் நான்கரை ஆண்டுகளும் முழு ஒத்துழைப்பினை கொடுத்தேன். என்னை ஒருங்கிணைப்பாளராக பதவி ஏற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதே எடப்பாடி தான். இருவரும் இணைந்தே கையெழுத்திட்டு முடிவுகளை எடுக்க முடியும் என மாற்றம் கொண்டு வந்ததும் எடப்பாடி தான்..
புதுக் கட்சி ஆரம்பிங்க என சொன்னார்
மோடி கூறியதால் தான், நான் அப்போது துணை முதல்வர் பதவியினை ஏற்றுக்கொண்டேன். கட்சியில் பலவித சோதனைகளை சந்தித்து விட்டேன். ஒன்றுபட்டால் மட்டுமே அ.தி.மு.க.வுக்கு வெற்றி என்பதை ஏற்கவில்லை. தற்போது தனிக்கட்சி தொடங்க வேண்டும் என சிலர் தெரிவித்து வருகின்றனர். இப்போது மட்டுமல்ல எப்போதுமே தனிக்கட்சி தொடங்கமாட்டேன்.
கடந்த 1 ஆண்டுக்கு முன்பே தனிக்கட்சி தொடங்குமாறு என்னிடம் பன்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார். ஆனால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை என தெரிவித்து விட்டேன். எனக்கென்று ஒரு நிலைப்பாட்டை நான் அரசியலில் எடுக்க வேண்டுமா? வேண்டாமா? கட்சியை யாராலும் வெல்ல முடியாத நிலைக்கு கொண்டு சென்ற ஜெயலலிதாவுக்கு பங்கம் விளைவிக்கிறார்கள்.
கட்சியில் இருந்து நீக்க என்ன காரணம்?
இந்த இயக்கத்திற்கு எவ்வளவு சோதனை வந்தாலும் தாங்கி கொண்டு பொறுமையாக இருந்த பன்னீர் செல்வத்தை, அரசியலில் இருந்தே துறவறம் போக செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கிறீர்கள். கட்சி வேஷ்டி கட்டக்கூடாது. கொடி கட்டக்கூடாது என்று நீதிமன்றத்திற்கு செல்கிறீர்கள். இதெல்லாம் யார் செய்வார்கள்..
முன்னாள் முதல்வராக இருந்துள்ளேன். கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்து இருக்கிறேன்.. என்னை முழுவதுமாக கட்சியில் இருந்து நீக்கியதற்கு என்ன தான் காரணம்.. அந்த காரணம் என்பதை தற்போது பொறுப்பில் உள்ளவர்கள் தெரிவிக்க வேண்டும். நான் தவறு செய்தேன் என்று தெரிந்தால் அரசியலை விட்டே விலகத் தயார்" என்று கூறினார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு
அதிமுகவில் கடந்த 2016 ஆம் ஆண்டு அதாவது ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பல்வேறு அதிரடி அரசியல் திருப்பங்கள் நடந்தன. ஜெயலலிதாவின் தோழி சசிகலா கட்சியின் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் நியமனம் செய்யப்பட்டார்.
அப்போது முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அதிமுக தலைமைக்கு எதிராக தர்ம்யுத்தம் செய்ததோடு, அதிமுகவில் இணைய சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என நிபந்தனை விதித்தார். இதையடுத்து, பொதுக்குழுவில் டிடிவி தினகரன், சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கி தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
ஓபிஎஸ்க்கு அடுத்தடுத்து பின்னடைவு
இதன்பின்னர் அதிமுக இரட்டை தலைமையின் கீழ் செயல்பட தொடங்கியது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுகவில் மீண்டும் உள்கட்சி மோதல் உச்சத்தை தொட்டது. ஒற்றைத்தலைமை என்ற கோஷம் அதிமுகவிற்குள் எழுந்ததால் தலைமை பதவியை கைப்பற்ற எடப்பாடி - ஓ பன்னீர் செல்வம் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த அதிகார போட்டி யுத்தத்தில் எடப்பாடி வெற்றி பெற்றார்.
பின்னர் அதிமுகவில் இருந்தே ஓ பன்னீர் செல்வத்தை நீக்கினார் எடப்பாடி. அதன்பிறகு ஒ பன்னீர் செல்வம் சட்ட போராட்டங்களை நடத்தி வந்தார். ஆனால் எதுவுமே கை கொடுக்கவில்லை. இதன்பிறகு ஓ பன்னீர் செல்வம் கட்சியின் வேஷ்டி கட்டவும் தடை விதிக்கப்பட்டது. கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தனியாகவும், பாஜக தனியாகவும் தேர்தலை சந்தித்தன. இதில் பாஜக கூட்டணியில் இணைந்த ஓபிஎஸ் ராமநாதபுரத்தில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
திமுகவில் இணைய உள்ளதாக
இந்த தோல்விக்கு பிறகு பாஜகவும் ஓ பன்னீர் செல்வத்தை கண்டுக்கவில்லை. இந்த நிலையில் அரசியலில் அடுத்து என்ன நிலைப்பாடு என்று முடிவு எடுக்காமல் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறி வந்தார். ஆனால் திமுவில் இணைவதாக தகவல் வந்த நிலையில் பலரும் அவரை விமர்சிக்க தொடங்கினர். இந்த நிலையில் தான் ஓ பன்னீர் செல்வம் மேற்கண்டவாறு கூறியிருக்கிறார்.
-
"நடிகர் அஜித்துடன் இபிஎஸ்".. குமரி பிரசாரத்தில் தொண்டர் வழங்கிய பரிசு.. எடப்பாடி கொடுத்த ரியாக்சன் -
நிஜ வாழ்க்கை வேற..சினிமா வேறு.. தூங்கி எழுந்ததும் எல்லாம் மாறிவிடும்! விஜய்யை போட்டு பிளந்த எடப்பாடி -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர்











Click it and Unblock the Notifications