மனம் தளராத ஓபிஎஸ்.. புது ரூட் எடுக்க முடிவு! தேர்தல் ஆணையத்தில் எடப்பாடிக்கு கேட்.. பரபர அறிவிப்பு

இதற்கு முன்பே தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக செயல்பட்ட வரலாறுகள் உள்ளன.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்யும் மனுவிற்கு எதிராக பதில் மனு தாக்கல் செய்வோம் என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு தெரிவித்துள்ளது.

ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்று நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தாலும் தேர்தல் ஆணையம் கையிலேயே இறுதி முடிவு உள்ளது. தேர்தல் ஆணையம் இன்னும் இதில் முடிவு எடுக்கவில்லை. தேர்தல் ஆணையம் இதில் என்ன முடிவை வேண்டுமானாலும் எடுக்கலாம்.

இப்போது உச்ச நீதிமன்றம் பொதுக்குழு நடந்தது செல்லும் என்று அறிவித்து உள்ளது. அதை தேர்தல் ஆணையம் இப்போது ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கலாம். தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது. தேர்தல் ஆணைய முடிவுகள் தன்னிச்சையானது. உச்ச நீதிமன்ற முடிவிற்கு எதிராக தேர்தல் ஆணையம் முடிவு எடுத்தாலும், அதை எதிர்த்து வழக்கு போடுவது பெரிதாக பலன் அளிக்காது.

தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம்

இதற்கு முன்பே தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக செயல்பட்ட வரலாறுகள் உள்ளன. எனவே இன்று வந்த தீர்ப்பு என்பது எடப்பாடி ஒரு ப்ளஸ் பாயிண்ட். அதாவது பாருங்க உச்ச நீதிமன்றம் எங்க வாதத்தை ஏற்றுக்கொண்டது.. நீங்களும் ஏற்றுக்கொள்ளுங்கள் என்று வெற்றிபெறும் தரப்பு தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி கோரிக்கை வைக்க முடியும். ஆனால் தேர்தல் ஆணையம் இதை ஏற்றுக்கொள்ளுமா என்பது சந்தேகம்தான். ஏனென்றால் சமீபத்தில் புலம் பெயர்ந்தோருக்கு அந்தந்தப் பகுதிகளில் வாக்களிக்க வசதி செய்யும் ரிமோட் வாக்குப்பதிவு முறை குறித்து விளக்கம் கேட்க அதிமுகவிற்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியது.

தேர்தல்

தேர்தல்

அதிமுகவுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது. தேர்தல் ஆணையத்தில் இன்னும் அந்த விவரங்கள்தான் உள்ளன என்று தேர்தல் ஆணையமும் சொல்லி உள்ளது. இந்த நிலையில்தான் இந்திய தேர்தல் ஆணையத்தில் அதிமுக வழக்கறிஞர்கள் இன்று மனு அளிக்க முடிவு செய்துள்ளனர். அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நகலுடன் மனு அளிக்க முடிவு செய்துள்ளனர். பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்க வேண்டும் என கோரிக்கை இந்திய தேர்தல் ஆணையத்தில் அதிமுக வழக்கறிஞர்கள் இன்று மனு அளிக்க உள்ளனர்.

பொதுக்குழு கூட்டம்

பொதுக்குழு கூட்டம்

தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்யும் இந்த மனுவிற்கு எதிராக பதில் மனு தாக்கல் செய்வோம் என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில், பொதுக்குழு கூட்டம் நடந்தது சரி என்று மட்டுமே உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. நாங்கள் திறமையாக வாதம் வைக்கவில்லையா என்று தோன்றுகிறது.இதை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்வோம். எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டிக்காத்த கட்சியை இவர்கள் வீழ்த்த பார்க்கிறார்கள். அதை அனுமதிக்க கூடாது. இவர்களின் செயல் சட்ட விதிகளுக்கு எதிரானது. இவர்களுக்கு யார் இந்த அனுமதியை கொடுத்தது. உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் சீராய்வு மனு தாக்கல் செய்வோம்.

தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையத்திலும் முறையீடு செய்வோம். தேர்தல் ஆணையம் இன்னும் பொதுக்குழுவை ஏற்றுக்கொள்ளவில்லை. பொதுகுழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொள்ளவில்லை. பொதுக்குழு முடிவுகளை எதிர்த்து தேர்தல் ஆணையம் செல்வோம். உச்ச நீதிமன்றம் இன்னும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை தேர்தல் ஆணையத்திடம் சொல்லுவோம். எடப்பாடி பழனிசாமி தரப்பு பொதுக்குழு தீர்மானங்களை ஏற்றுக்கொள்ள கூறி எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்துள்ளனர். தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவிற்கு எதிராக நாங்கள் பதில் மனு தாக்கல் செய்வோம்.

அதிமுக சட்ட விதி

அதிமுக சட்ட விதி

இவர்கள் எல்லாம் அதிமுக சட்ட விதிகளுக்கு எதிராக செயல்பட்டு உள்ளனர். அதை கோர்ட்டிலும், தேர்தல் ஆணையத்திலும் நாங்கள் நிரூபிப்போம். எங்களின் தர்மயுத்தம் தொடரும். நாங்கள் இப்போதுதான் எழுச்சியுடன் இருக்கிறோம். மக்கள் மன்றம் எங்களை பார்க்க தொடங்கி உள்ளது. மக்கள் மன்றத்தில் நாங்கள் எங்கள் குறைகளை கொண்டு செல்வோம். எங்களின் மக்கள் படை தயாராக உள்ளது. இதற்கு முன்பு நாங்கள் இருந்த எழுச்சியை விட இப்போது கூடுதல் எழுச்சியில் இருக்கிறோம். எங்களை திமுக பீ டீம் என்று சொல்கிறார்கள். நாங்களா பீ டீம். அவர்கள்தான் பீ டீம். எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கில் திமுக நடவடிக்கை எடுக்கவில்லை. தங்கமணி, வேலுமணி வழக்கில் திமுக நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி என்றால் திமுகவும் அவர்களும் தானே கூட்டு?, என்று ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+