உடைந்துபோய் கண்ணீர் விட்டு அழுத ஓபிஎஸ்: அணைத்து தேற்றிய முதல்வர் ஸ்டாலின்
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி மரணத்தையடுத்து முதல்வர் ஸ்டாலின் இன்று காலை மருத்துவமனைக்கு சென்று இரங்கல் தெரிவித்தார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி இன்று திடீர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். கடந்த இரண்டு வாரமாக சென்னை ஜெம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட விஜயலட்சுமி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இதையடுத்து ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மரணத்திற்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

கண்ணீர்
ஓ. பன்னீர்செல்வமின் மனைவி விஜயலட்சுமியின் உடல்நிலை கடந்த வாரம் லேசாக முன்னேற்றம் அடைந்த நிலையில் இன்று திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இதனால் மனைவியின் இறப்பு செய்தி கேட்டு மருத்துவமனைக்கு விரைந்த ஓ. பன்னீர்செல்வம் உடைந்து போய் கண்ணீர்விட்டு அழுதார். எதிர்பாராமல் திடீரென நிகழ்ந்த மரணத்தால், ஓபிஎஸ் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர்விட்டார்.

மகன்
அவரது மகன் எம்பி ரவீந்திரநாத் உணர்ச்சிகளை பொதுவில் வெளிப்படுத்தாமல் கொஞ்சம் திடகாத்திரமாக இருந்தார். இந்த செய்தி வெளியானதும் அரசியல் தலைவர்கள் மருத்துவமனைக்கு வர தொடங்கினார்கள். அவர்களை ரவீந்திரநாத்தான் அழைத்து பேசினார். ஆனால் அங்கு நின்று கொண்டு இருந்த ஓ. பன்னீர்செல்வத்தால் துக்கத்தை அடக்க முடியவில்லை.

கண்ணீர்
தொடர்ந்து அவர் கண்ணீர் வடித்தப்படி இருந்தார். இதையடுத்து அங்கு வந்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கே.பி.முனுசாமி ஆகியோரை ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து இரங்கல் தெரிவித்தனர். இதையடுத்து மருத்துவமனைக்கு வந்த முதல்வர் ஸ்டாலின் நேரடியாக ஓ பன்னீர்செல்வத்திடம் சென்று அவரை அணைத்து ஆறுதல் கூறினார்.

ஆறுதல்
மனைவியின் மரணம் குறித்து ஸ்டாலின் விசாரித்தவுடன் திடீரென உடைந்து போன ஓ. பன்னீர்செல்வம் கண்ணீர்விட்டு பேச தொடங்கினார். அவர் இப்படி உடைந்து அழுதது பலருக்கும் வருத்தத்தை கொடுத்தது. பொதுவாக பெரிய தலைவர்கள் இதுபோன்ற துக்க நிகழ்வுகளில் இறுக்கமாக இருப்பார்கள், ஆனால் ஓபிஎஸ் உடைந்து அழுதது அவர் மனைவி மீது அவர் வைத்திருந்த அளவற்ற அன்பை காட்டுவதாக இருந்தது.
-
அதிமுக உடன் இணைகிறதா அமமுக? காட்டுத்தீயாகப் பரவும் தகவலுக்கு டிடிவி தினகரன் விளக்கம்! -
காத்திருந்து காத்திருந்து..பனையூரில் பாழாய்ப் போன கனவுகள்! பதவி இல்லாமல் பரிதவிக்கும் ’தாவல்’ தலைகள்! -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.. 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை! 4 பேருக்கு தான் சிக்கலே! -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. தவெகவுக்கு தாவிய அதிமுக மாஜி எம்.எல்.ஏ.க்கள்! சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ்












Click it and Unblock the Notifications