பேசமுடியாத நிலையில் ஓபிஎஸ்.. சட்டென ரவீந்திரநாத் கையை பிடித்து.. உருக்கமாக விசாரித்த சசிகலா: கண்ணீர்
சென்னை: சென்னை தனியார் மருத்துவமனையில் அதிமுக எம்பி ஓபி ரவீந்திரநாத் கையை பிடித்து சசிகலா விசாரித்தார். ஓ. பன்னீர்செல்வம் மனைவியின் மரணத்தையொட்டி சசிகலா இன்று நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார்.
Recommended Video
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி இன்று காலை மரணம் அடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
இன்று ஓபிஎஸ் மனைவியின் மறைவிற்கு வந்தவர்களை எல்லாம் அவரின் மகன் எம்பி ஓபி ரவீந்திரநாத்தான் அழைத்து பேசினார். பல்வேறு தலைவர்கள் வரிசையாக வந்த நிலையில் ஒவ்வொருவரையும் தனியாக அழைத்து ரவீந்திரநாத்தான் பேசினார்.

ஓபிஎஸ்
ஓபிஎஸ் உடைந்து போய் அழுது கொண்டு இருந்தார். இதனால் ரவீந்திரநாத் கொஞ்சம் திடமாக இருந்து தலைவர்களின் விசாரிப்புகளுக்கு பதில் சொன்னார். அப்பா ஓபிஎஸ் உடைந்து போனதால் ஓ.பி ரவீந்திரநாத்தான் முன்னே நின்று பணிகளை கவனித்துக்கொண்டார்.

கண்ணீர்
ஓபிஎஸ் தொடர்ந்து கண்ணீர்விட்டபடி இருந்ததால் அவரால் பதில் சொல்ல முடியவில்லை. நா தழுதழுத்தபடி சிலருக்கு மட்டும் பதில் சொன்னார். இதையடுத்து மருத்துவமனைக்கு வந்த சசிகலா பன்னீர்செல்வத்திடம் இரங்கல் தெரிவித்தார். அவரின் கையை பிடித்து ஆறுதல் கூறினார். ஆனால் அப்போது ஓபிஎஸ் பேச கூடிய நிலையில் இல்லை.

சந்திப்பு
சசிகலாவை பார்த்து கும்பிட்டபடி ஓபிஎஸ் தலையை மட்டும் அசைத்தார். இதையடுத்து அருகில் நின்ற ரவீந்திரநாத்தின் கையை பிடித்து சில நிமிடங்கள் தனியாக பேசினார். அவரின் அம்மாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்தும், கடைசியில் இன்று ஏற்பட்ட மாரடைப்பு குறித்தும் கேட்டார். சசிகலாவை பார்த்து கும்பிட்டபடி ஓபிஎஸ் தலையை மட்டும் அசைத்தார். இதையடுத்து அருகில் நின்ற ரவீந்திரநாத்தின் கையை பிடித்து சில நிமிடங்கள் தனியாக பேசினார். அவரின் அம்மாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்தும், கடைசியில் இன்று ஏற்பட்ட மாரடைப்பு குறித்தும் கேட்டார்.

என்ன பேசினார்
5 முதல் 10 நிமிடங்கள் இவர்கள் பேசினார்கள். திடகாத்திரமாக இருக்கும்படி சசிகலா ரவீந்திரநாத்திடம் ஆறுதல் சொன்னார். சசிகலா கையை பிடித்து இருந்த ஓ.பி ரவீந்திரநாத் லேசாக அப்போது கண்ணீர் விட்டார். சசிகலாவின் வார்த்தைகளை கேட்டதும் ஓ.பி ரவீந்திரநாத்தும் கலங்கிப்போனார். ஓ. பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமியின் உடல் இன்று தேனி பெரியகுளம் எடுத்துச்செல்லப்பட்டு அங்கு இறுதி சடங்கு செய்யப்பட உள்ளது.
-
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.. 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை! 4 பேருக்கு தான் சிக்கலே! -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. தவெகவுக்கு தாவிய அதிமுக மாஜி எம்.எல்.ஏ.க்கள்! சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி












Click it and Unblock the Notifications