சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

27 ஆந்திரா இளைஞர்களை இறக்கிய ராணிப்பேட்டை அதிமுக வேட்பாளர் சுகுமார்... முட்புதரில் ரூ 91.67 லட்சம்!

Google Oneindia Tamil News

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை தொகுதியில் பணப்பட்டுவாடா செய்ய ஆந்திராவில் இருந்து 27 இளைஞர்களை அதிமுக வேட்பாளர் அழைத்து வந்து குடோனில் தங்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அந்த குடோனுக்கு அருகே இருந்த முட்புதரில் இருந்து ரூ91. 67 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது 27 ஆந்திரா இளைஞர்களும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

ராணிப்பேட்டை அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.எம்.சுகுமார், குடோன் ஒன்றில் வாக்காளர்களுக்கு பணம் தருவதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் சென்றது. இதையடுத்து சந்தேகத்துக்குரிய அந்த குடோனை சோதனையிட அதிகாரிகள், போலீசார் சென்றனர்.

27 ஆந்திரா இளஞர்கள்

27 ஆந்திரா இளஞர்கள்

அப்போது குடனோனின் சுவரில் ஏறி இளைஞர் ஒருவர் தப்பி ஓட முயற்சித்தார். அவரை சுற்றி வளைத்துப் பிடித்த அதிகாரிகள், குடோனுக்குள் சென்று சோதனையிட்டனர். அப்போது 27 ஆந்திரா இளைஞர்கள அங்கே தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

பணம் பதுக்கல்

பணம் பதுக்கல்

அவர்களிடம் நடத்தப்பட்ட கிடுக்குப்பிடி விசாரணையில் பணப்பட்டுவாடா செய்வதற்காக தாங்கள் அழைத்துவரப்பட்டதாக தெரிவித்தனர். மேலும் அருகே உள்ள முட்புதர் ஒன்றில் 3 பைகளில் பணம் பதுக்கி வைத்திருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

ரூ84 லட்சம் பறிமுதல்

ரூ84 லட்சம் பறிமுதல்

அந்த முட்புதரில் பதுக்கி வைக்கப்பட்ட பைகளை கண்டுபிடித்த அதிகாரிகள் மொத்தம் ரூ84 லட்சத்தையும் பறிமுத்அல் செய்தனர். ஏற்கனவே மணப்பாறையில் அதிமுக எம்.எல்.ஏ. சந்திரசேகரின் ஓட்டுநர் வைக்கோல் போரில் ரூ1 கோடி பதுக்கி வைத்திருந்தார்.

விஜயபாஸ்கர் நண்பர் வீட்டில் ரெய்டு

விஜயபாஸ்கர் நண்பர் வீட்டில் ரெய்டு

அதேபோல் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் நண்பர் வீட்டில் இன்று சோதனை நடத்தப்பட்டது. தற்போது ராணிப்பேட்டையில் ரூ84 லட்சம் முட்புதரில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுவரை சிக்கிய ரூ412 கோடி

இதுவரை சிக்கிய ரூ412 கோடி

தமிழகத்தில் இதுவ்வரை மொத்தம் ரூ 412 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது; ராணிப்பேட்டையில் மட்டும் ரூ91 லட்சம் ரொக்கம் பிடிபட்டுள்ளது. இது தொடர்பாக ஆந்திரா இளைஞர்கள் 27 பேரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

English summary
Officials had Seized that Rs84 Lakhs from the Ranipet AIADMK Candidate's Place today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X