சலுகைகள் நிறைந்த பட்ஜெட் ரெடி.. ஆனால் பழைய பென்ஷனுக்கு நோ? தங்கம் உருவாக்கிய "தங்கமான" பட்ஜெட்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பட்ஜெட் 14-ந் தேதி தாக்கல் ஆகிறது. ஏற்கனவே வருவாய் பற்றாக் குறையால் நிதி நெருக்கடியில் தமிழக அரசு தத்தளித்து வரும் நிலையில், கடன் சுமையும் அதிகரித்திருக்கிறது. இந்த சூழலில், 2025-26 ஆம் ஆண்டு பட்ஜெட்டிலும் கடன் அதிகரிக்கக்கூடும் என்கின்றனர் பொருளாதார ஆலோசகர்கள்.

பழைய ஓய்வூதிய திட்டம்

மேலும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சரண் விடுப்புகளை பணம் ஈட்டும் அனுமதி உள்ளிட்ட அரசு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள் திமுக அரசை மிரட்டிக் கொண்டிருக்கிறது. அரசு ஊழியர்களிடம் அமைச்சர் ஏ.வ.வேலு சமீபத்தில் நடத்திய பேச்சுவார்த்தையில், பட்ஜெட்டில் உங்களுக்கு நல்லது நடக்கும்; வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிடுங்கள் என கேட்டுக்கொண்டதால், மாநிலம் தழுவிய போராட்டத்தை ஒத்தி வைத்தனர். ஆனால், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடப்பு நிதியாண்டில் அமல் படுத்த இயலாது என அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.

old pension scheme pension

நிறைவேற்றப்படும் கோரிக்கைகள்

இதற்கு பதிலாக, சில கோரிக்கைகளை நிறைவேற்றும் அறிவிப்பை பட்ஜெட்டில் தெரிவிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே, அதிகரிக்கும் கடன் சுமையை சமாளிக்கவும், சொந்த வரி வருவாயை அதிகரிக்கவும் சில மறைமுக வரி உயர்வு இருக்கும் என்றும் தெரிகிறது. ஆனால், பட்ஜெட்டில் நேரடி வரி உயர்வு, மறைமுக வரி உயர்வு எதுவும் இல்லாமல் இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு நடுத்தரவர்க்கத்தினரிடம் அதிகமாக இருந்து வருகிறது.

இந்தாண்டு தான் முழு பட்ஜெட்டை திமுக அரசு தாக்கல் செய்ய முடியும் என்பதால், கடன் வாங்கினாலும் பரவாயில்லை வரி இல்லாத பட்ஜெட், சலுகைகள் நிறைந்த பட்ஜெட் என்பதாக இருக்க வேண்டும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவிடமும், நிதித்துறை அதிகாரிகளிடமும் கேட்டுக் கொண்டிருக்கிறாராம் முதல்வர் ஸ்டாலின்.

பொருளாதார அறிக்கை

முதல்முறையாக மாநில நிதிநிலை தொடர்பான பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்கிறது தமிழ்நாடு அரசு.

வரும் 14ம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூடுகிறது. பட்ஜெட்டில் துறை சார்ந்த திட்டங்கள் குறித்தும், புதிய அறிவிப்புகள் தொடர்பாகவும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 14ம் தேதி மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், முதல்முறையாக அன்று பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கிறது தமிழ்நாடு அரசு.

தமிழ்நாடு பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகையை உயர்த்துவது குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை மார்ச் 14ம் தேதி தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். 2025-26ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை காலை 9.30-க்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அரசின் நிதிநிலை, உள்நாட்டு உற்பத்தி, செயல்படுத்தி வரும் திட்டங்களின் நிலை, வரும் ஆண்டுகளில் மாநில நிதிநிலை எப்படி இருக்கும் என பல்வேறு தரவுகள் இந்த பொருளாதார ஆய்வறிக்கையில் இடம்பெறும்.

பொருளாதார ஆய்வு அறிக்கை என்பது பொருளாதாரத்தின் நிலை மற்றும் பல்வேறு குறிகாட்டிகள் பற்றிய டேட்டாக்களை கொண்டு இருக்கும். நடப்பு ஆண்டிற்கான பொருளாதாரம் எப்படி இருக்கும், ஜிடிபி எப்படி இருக்கும், விலைவாசி எப்படி இருக்கும், பணவீக்கம் எப்படி இருக்கும் என்ற விவரங்களையும் இது வழங்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+